கலைச்சொல் தெளிவோம்! 75. செல்-Cirrocumulus

 75. செல்-Cirrocumulus   செல்   செல்(117) என்பதற்கு உள்ள சில பொருள்களில் ஒன்று முகில் என்பதாகும். “வான்முழக்குச் செல்” (பரிபாடல் 13.44) என்னும் பொழுது இடி முழக்கத்துடன் இணைந்த மழைமுகிலைக் குறிப்பிடுகின்றது. இத்தகைய தன்மை உடைய 7000 பேரடி (மீட்டர்) உயரத்தில் உள்ள சுருள்குவிவு முகில் சிர்ரோகியூமுலசு/Cirrocumulus எனப்படுகின்றது. செல்-Cirrocumulus – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.  அவையில் அனைவரின் பாராட்டையும் பெற்ற கட்டுரை இது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் எப்படியெல்லாம் சட்டம் இயற்றக்கூடாது என்பதற்குத் தங்களுக்கு இது மிகவும் வழிகாட்டியாக அமையும் என்றார். முனைவர் நன்னன் அவர்கள் “தமிழ்நாடே இனி உருப்படாதோ என்ற தொனி இருந்தாலும் உண்மைகளைச் சிறப்பாக உரைத்துள்ளீர்கள்” என்றார். கடந்த ஆண்டே அறிஞர்…

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்  – இலக்குவனார் திருவள்ளுவன்     உலகின் முதல் மொழியான தமிழ், உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் செம்மைச்சிறப்புடன் தோன்றும் பொழுதே செம்மொழியாய் அமைந்தது. இருப்பினும் ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்கை மொழியான சமற்கிருதம் போன்றவற்றைச் செம்மொழி என்ற போர்வையில் ஊக்கப்படுத்தி வந்தது அரசு. ஆனால் உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கும் செம்மொழிக்குரிய அறிந்தேற்பு வழங்க வேண்டும் என நல்லறிஞர்கள் குரல் எழுப்பி வந்தனர். இதன் தொடர் நிகழ்வால் 12.10.2004 அன்று மத்திய அரசு தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பை வழங்கியது….

கலைச்சொல் தெளிவோம்! 74. மை-Altostratus

 74. மை-Altostratus  மை 6000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள இடைஅடுக்கு முகிலே மை என்பது. மை(110) எனில், கருநிறம், வண்டி மை, பசுமை, குற்றம் என்பன போன்று பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் முகில் என்பது. மைபடு சென்னி (கலித். 43), “மைபடு மால்வரை”(நற்றிணை : 373:3. ) “மைபடு சிலம்பின்” (குறுந். 371 & பரிபாடல் : 16:2) “மைபடு குடுமிய குலவரை” (பரிபாடல் : 15:9-10) என்னுமிடங்களில், ‘மை’ மலைகளில் தவழும் முகிலைக் குறிக்கின்றது. மழைக் கருக்கொண்டபின் கருமையாய் அமையும்…

கலைச்சொல் தெளிவோம்! 73. கார்-Altrocumulus

 73. கார்-Altrocumulus   கார் கடல் முகந்து வந்தன்று, கார்! (முல்லைப்பாட்டு : வெண்பா 2) காரும் ஆர்கலி தலையின்று. தேரும் (அகநானூறு : 54.3) கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் (குறுந்தொகை : 162.1) தளி தரு தண் கார் தலைஇ (நற்றிணை : 316.9) கார்கலித்து அலைப்ப (ஐங்குறுநூறு : 496.2) என்பன போல் சங்க இலக்கியத்தில் 139 இடங்களில் வந்திருந்தாலும் கார் முகிலையும் கார் பருவத்தையும் இச் சொல் குறிக்கின்றது. 5000 பேரடி(மீட்டர்) உயரத்தில் மழை பெய்யும் நிலையில்…

கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus

72. விண்டு-Stratocumulus விண்டு   விண்டு சங்க இலக்கியத்தில் 8 இடங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனினும் மலையைத்தான் குறிக்கிறது. ஆனால், விண்டுச் சேர்ந்த வெண்மழை போல (பதிற்றுப்பத்து 55.15) விண்டு முன்னிய புயல்(பதிற்றுப்பத்து (84.22) என்பன போல், பெரும்பாலும் மழை முகிலோடு தொடர்பு படுத்தியே விண்டு குறிக்கப்பெறுகின்றது. பிங்கல நிகண்டு விண்டு என்பதன் ஒரு பொருளாக முகிலையும் குறிக்கின்றது.   விண்டு ஆகிய மலையில் குவியும் முகில் பின்னர் விண்டு என்றே அழைக்கப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சங்க இலக்கியங்களில் பயன்பெற்ற சொல் என்ற…

கலைச்சொல் தெளிவோம்! 71. முதிரம்-Cumulonimbus

 71. முதிரம்-Cumulonimbus முதிரம்   புறநானூற்றில் வரும் இரு பாடல்களிலுமே உயர்கொடை வள்ளல் குமண மன்னன் ஆட்சிப்பரப்பிற்குட்பட்ட முதிரமலையையே முதிரம் என்பது குறிக்கின்றது. பின்னரே இச்சொல் முகிலைக் குறிப்பதாய் அமைந்துள்ளது.   மூவாயிரம் பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள அடுத்த முகில்கூட்டத்தின் பெயர் கியூமுலோநிம்பசு-Cumulonimbus என்பதாகும். இதனையே முதிரம் எனக் குறிக்கலாம். முதிரம்-Cumulonimbus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 70. மஞ்சு-cumulus

70. மஞ்சு-cumulus  மஞ்சு (11) விசும்பிற்கு மேற்பட்ட நிலையில் ஈராயிரம் பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள முகிலை அடுத்துப் பார்ப்போம். பின்வரும் பாடல் அடிகள் மழையைச் சுற்றி மஞ்சு எனப்படும் முகில் கூட்டம் அமைந்துள்ளதை விளக்குகின்றன. மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த (நற்றிணை: 154:1-4) மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து (கலித்தொகை: 49.16) அகல்இரு வானம் அம்மஞ்சு ஈன(ப்), (அகநானூறு: 71.8) முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும் (புறநானூறு:103: 6.7) மஞ்சு…

கலைச்சொல் தெளிவோம்! 69. விசும்பு-stratus

69. விசும்பு-stratus  எழிலிக்கு அடுத்த அடுக்கில் 1000 பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள பாவடி முகில் குறித்து அடுத்துப் பார்ப்போம்.  விசும்பு என்னும் சொல்லைச் சங்கப் புலவர்கள் 164 இடங்களில் கையாண்டுள்ளனர்; விசும்பு வானத்தையும் குறிக்கின்றது, வானத்தில் உள்ள முகில்கூட்டத்தையும் குறிக்கின்றது. முகில் என்னும் பொருளில் ‘விசும்பு’ வரும் சில இடங்கள் வருமாறு : ஒருகை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒருகைவான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட (திருமுருகு ஆற்றுப்படை : 115-116) நீல் நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் (பெரும்பாணாற்றுப்படை :…

கலைச்சொல் தெளிவோம்! 68. எழிலி-nimbostratus

 68. எழிலி-nimbostratus   முகிலியல் (science of clouds)   முகில் கூட்டங்களை முகில் (அல்லது மேகம்) என்றே நாம் வேறுபாடு அறியாமல் கூறுகிறோம். கிளெடு (cloud) எனில் முகில் என மனையறிவியலிலும், முகில், மேகம் எனப் பொறிநுட்பவியல் புவியறிவியல் ஆகிய துறைகளிலும் கொண்டல், மேகம் என வேளாணியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம்…

தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி!

தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி! தேர்வு முறையில் நடுநிலையைப் பின்பற்றுக!   மக்கள் தொலைக்காட்சி நீங்கலான தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழ்க்கொலையையே தொழிலாகக் கொண்டுள்ளன. சிறிய தொலைக்காட்சி நிறுவனங்கள் கதைத் தொடரை ஒளிபரப்பாமல் பண்பாட்டுக் கொலைபுரியாமல் தொண்டு புரிகின்றன. அவ்வாறிருக்க விசய் தொலைக்காட்சி – அதுவும் சீ சீ என்பதுபோல் பெயருக்குப்பின்னர் பாட்டியம்மா சொல்வதும் முதல் எழுத்துகளைத் தமிழில் குறிப்பிடும் தொகுப்பாளரும் அவ்வாறே சொல்லத் தொடங்கியுள்ளதும் பாடல்நிகழ்ச்சிகளில்கூட சாங்கு, சிங்கர், சூப்பர் போன்று ஆங்கிலச் சொற்களைக் கூறுவதையே கடமையாகக் கொண்டுள்ளதுமான விசய் தொலைக்காட்சி –…

கலைச்சொல் தெளிவோம்! 66. விசைப்பி-switch : இலக்குவனார் திருவள்ளுவன்

  66. விசைப்பி-switch விசை(35), விசைத்த(1), விசைத்து(6), விசைப்ப(1), விசைப்பு (ள) என விசை பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. விசைத்திறன் பெற இணைப்பாக இருந்து இயக்குவதை விசைப்பி எனலாம். சுவிட்ச்(சு)/switch-(ஆட்.) பொருத்தி, இணைப்பி, திறப்பான், நிலைமாற்றி (வேதி.) இணைப்பி. (பொறி.) இணைப்பி, பாதைமாற்றி (மனை.), இணைப்புமாற்றி, நிலைமாற்றி, (தக.) நிலைமாற்றி என இப்பொழுது வெவ்வேறு வகையாகக் கூறுவதை விட விசைக்கு உதவுவதை விசைப்பி என்பது பொருத்தமாக அமையும். விசைப்பி-switch – இலக்குவனார் திருவள்ளுவன்