கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்

961.  நிலைத்தடை நேர்மின் திறன்மானி constant-resistance dc potentiometer   962. நிலைநீர்மப் பாகுமைமானி stokes viscometer செங்குத்துக் கண்ணாடிக்குழாயில் நீர்மம் நிலையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கேபிரியேல் இசுடோக்கு ( Sir George Gabriel Stoke :13.08.1819 – 01.02.1903) என்னும் அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கணக்கியல் இயற்பியலாளர் பெயரில் வழங்கப்படுகிறது. நிலைநீர்மப் பாகுமைமானி எனலாம். 963. நிலைநீரியல்அளவி hydrostatic gauge   964. நிலைப்பிலா ஈர்ப்புமானி astatized gravimeter   965. நிலைமின் சுழல் நோக்கி electrostatic gyroscope   966….

கருவிகள் 1600 : 881-920 : இலக்குவனார் திருவள்ளுவன்

881. தூய்மி நிறமாலை ஒளிமானி dobson spectrophotometer   வளிமண்டிலத் தூய்மியை அளவிடுவதற்குரிய தொடக்கக்காலக் கருவியாகும்; கோர்டன் தாபுசன் என்னும் அறிவியலாளரால் 1924 இல் கண்டுபிடிக்கப்பட்டது. தாபுசன் நிறமாலைஒளிமானி/ தாபுசன் நிறமாலைமானி/தாபுசன்மானி/ என்றும் அழைப்பர். 882. தூள் பாய்மமானி powder flowmeter   883. தெரிவுக் கதிரி selective radiator   884. தெவிட்டு உள்ளகக் காந்தமானி saturable-core magnetometer   885. தேக்க அலைவுநோக்கி storage oscilloscope   886. தேய்கிளர்   அளவி limen gauge   887. தேனிரும்பு மின்னோடிமானி…

கருவிகள் 1600 : 841-880 : இலக்குவனார் திருவள்ளுவன்

841. திரிபளவு ஆய் கருவிகள் strain gauge testers   842.  திரிபு அளப்பு முடுக்கமானி strain-gage accelerometer   843. திரிபு நிலநடுக்க அளவி strain seismometer   844.  திருக்க மானி torque meter   845.  திருக்கக்குழாய் பாகுமைமானி torque-type viscometer   846.   திருக்கக்குழாய் பாய்மமானி torque-tube flow meter   847.  திருக்கச்சுருள் காந்தமானி torque-coil magnetometer   848. திருகளவி screw gauge   849. திருகிழைஅளவி screw pitch gauge   850.  திருகுபுரி…

கருவிகள் 1600 : 921-960 : இலக்குவனார் திருவள்ளுவன்

921. தொலைவுமானி   tachymeter   / tacheometer/ trochometer   நில அளவையில் பயன்படும்                  தொலைவை விரைவாக வரையறுக்கும்      அளவி. உடல் அசைவு வேகமானி,                பொருள் அசைவு வேகமானி, நில அளவாய்வாரின் விரை இடக் குறிப்பெடுப்புக் கருவி, ஊர்திச் செலவுத் தொலைமானி(-செ.), ஊர்தித்தொலைவுமானி(-இ.) எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். தொலைவுமானி என்றால் சுருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். 922. தொலைவெப்பநிலைநோக்கி telethermoscope   923. தொலைவெப்பமானி telethermometer   924. நகர்-சுருள் மின்கடவுமானி moving-coil galvanometer   925. நகர்த்து நுண்ணோக்கி , traveling microscope நீளத்தைத்…

கருவிகள் 1600 : 801-840 : இலக்குவனார் திருவள்ளுவன்

801. தரக்கம்பி அளவி / த.க.அ. standard wire gauge / s. w. g   802. தரவுநோக்கி data scope மின்னணுக்காட்சியில் தரவுகளை வெளிப்படுத்துவது. 803. தலைகீழ் நுண்ணோக்கி inverted microscope   804. முன்பார்வை வெப்பமானி reversing thermometer வெப்பமானியில் பின்னர் பார்க்கும் வகையில் பதிவாகக் கூடியது.   தலைகீழ் வெப்பநிலைஅளவி (-இ,) என்று குறிப்பதைவிட, முந்தைய பதிவைப் பார்க்க இயலக்கூடியது என்ற முறையில் முன்பார்வை வெப்பமானி எனலாம். 805. ஆழ்கடல் முன்பார்வை வெப்பமானி deep sea reversing thermometer நீரில்…

கலைச்சொல் தெளிவோம் 64. உருமாறி-ameaba

 64. உருமாறி-ameaba   உருமாறி   உரு(168), மாறி(24) முதலான சங்கச சொற்கள் உருவத்தையும் மாறுபடும் இயல்பையும் குறிக்கின்றன. அமீபா என்பதற்கு ஒலிபெயர்ப்பில் அவ்வாறே தமிழில் குறிக்கின்றனர். கிரேக்க மொழியில் அமீபா (amoibè) என்பது ‘மாற்றம்’ என்பதைக் குறிக்கின்றது. உருவத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் தன்மையால் இதற்கு இப்பெயர் சூட்டி உள்ளனர். முதலில் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட கிரேக்க கடவுளின் புரோட்டியசு (Proteus) என்ற பெயரைக் கொண்டு குறிப்பிட்டனர். உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால் அவ்வாறு குறிப்பிட்டுள்னர். நாம்…

கருவிகள் 1600 : 761-800: இலக்குவனார் திருவள்ளுவன்

761. செலுத்தீட்டு விசைமானி transmission dynamometer   762. செவ்விய விரவு கதிரி   perfect diffuse radiator   763. செவ்வியக் கதிரி   perfect radiator   764. செவியக நோக்கி otoscope / auriscope செவியின் உட்பகுதிகளை ஆராய்வு செய்ய உதவும் கருவி. உட்செவி ஆய்வுக்கருவி, செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி, நாடியறி கருவி. (-செ.) செவிநோக்கி காது நோக்கி, செவியாக நோக்கி (எழுத்துப்பிழையோ?),செவி ஆய்வுக் கருவி, செவிகாட்டி, செவியக நோக்கி எனவும் பலவகையாகக் குறிக்கப் பெறுகின்றது. இவற்றுள் செவியாகநோக்கி என்பது…

கருவிகள் 1600 : 721-760: இலக்குவனார் திருவள்ளுவன்

721. சுருள்மின்னியக்க விசைமானி Siemens’ electrodynamometer மின்தொடரில் உள்ள அனைத்துச் சுருள்கள் வாயிலாகவும் மின்னோட்டம் பாய்வதை அளவிடும்   மின்காந்தக் கருவி வகை. 722. சுருள்வரைவி helicograph சுருள்களை வரைவதற்குரிய கருவி. 723.  சுருள்வலயத் திறன்மானி helical potentiometer   724.  சுழல் உணக்க மானி whirling psychrometer   725.  சுழல் கற்றை முகில்மட்டமானி rotating-beam ceilometer   726. சுழல் நோக்கி gyroscope     சுழல் வேகமானியால் சம நிலைப்படுத்தப்பட்டு எந்தத் திசையிலும் திருப்பு வளையங்களின் உட்புறம் அமைந்த சமனுருள்….

கலைச்சொல் தெளிவோம் 63 : அடார்-trap

63 : அடார்-trap   அடார், அடாஅர் பெருங்கல் லடாரும் (புறநானூறு: 19.6) சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் (நற்றிணை :119.2) இங்கே அடார், அடாஅர் என்பன விலங்குகளை அகப்படுத்தும் பொறியைக் குறிக்கின்றன.   ஆட்சியியல், வேளாணியல், தொல்லியல், பொறியியல், மீனியல், மனையியல், தகவல் நுட்பவியல், இயற்பியல், கால்நடை மருத்துவ இயல் ஆகியவற்றில் trap-பொறி என்று குறிக்கப் பெற்றுள்ளது; இவற்றுள் சில இயல்களில் கண்ணி அல்லது கண்ணிப் பொறி என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.   பொறி என்பது ஐம்பொறி என்னும் பொழுதும், பொறியியல் என்னும் பொழுதும்…

கலைச்சொல் தெளிவோம் 62. அடர்-blade

 62. அடர்-blade  அடர் அடர் என்பது மெல்லிய தகட்டையும்(thin, flat metal plate) குறிக்கும்; பூவின் மெல்லிதழையும்(flower petal) குறிக்கும். அழல்புரிந்த அடர் தாமரை (புறநானூறு: 29:1) (பொன் தகட்டால் ஆகிய தாமரை) நுண்ணுருக்கு உற்ற விளக்கு அடர்ப்பாண்டில் (மலைபடுகடாம் : 4) (உருக்கி அடரால் செய்யப்பெற்றது வெண்கலத்தால் ஆகிய தாளம்) அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாடச் (கலித்தொகை : 22:19) (பொன்தகடு போல் விளங்குவது அழகிய சுணங்கு) அடர்செய் ஆய்அகல் சுடர்துணை ஆக (அகநானூறு : 19:17) (தகட்டால் அகல்விளக்கு செய்தனர்) இவ்வரிகளில்…

கலைச்சொல் தெளிவோம் 60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer

60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer    ஒப்ப(9) என்னும் சொல் சங்க இலக்கியங்களில் ஒப்ப(17), ஒப்பது(1), ஒப்பார்(2), ஒப்பின்(1), ஒப்பின(1),ஒப்பினை(1) என்பன போன்று ஒத்த என்னும் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருவர் கருத்தும் ஒப்ப இருக்கும் உடன்பாட்டையும் பின்னர் இது குறித்துள்ளது. இதனடிப்படையில் ஒப்புமொழி என்பது அக்ரிமெண்ட்டை-agreement-குறித்துள்ளது.   இச்சொல்லிற்கு வேளாணறிவியலிலும் கால்நடைஅறிவியலிலும் உடன்படிக்கை என்றும், மொழியியலில் உடன்பாடு என்றும், ஆட்சித்துறையில்உடன்பாடு, உடன்படிக்கை, இசைவு, இணக்கம் என்றும், தொல்லியல்துறையில் இயைபு, ஒப்பந்தம் என்றும், மனையியலில் இசைவுப்பத்திரம், உடன்படிக்கை என்றும் வெவ்வேறாகப் பயன்படுத்துகின்றனர். அனைத்திலும் பொதுவாக…