கலைச்சொல் தெளிவோம் 59 : ஒடுக்குச் சீட்டு – tax receipt

59 : ஒடுக்குச் சீட்டு – tax receipt   ஒடுக்கம்(7) சங்க இலக்கியங்களில் உடல் அல்லது உள்ளம் ஒடுங்கும் நிலையைக் குறிக்கிறது. எனினும், பின்னர் ஒடுக்கு என்பது அரசுக் கருவூலத்தில் பணம் செலுத்துவதற்குத் தரும் பெறுகைச் சீட்டைக் குறித்துள்ளது. (தமிழ்ப்பேரகராதி : பக்கம்: 589) இச்சொல்லின் வளர்ச்சி அல்லது மாற்ற நிலை தெரியவில்லை. ஒடுக்கு என்பது செலவினை ஒடுக்குவதைக்-குறைப்பதைக்-குறிப்பிட்டுப் பின்னர், அரசின் செலவைக் குறைப்பதற்காக மக்கள் செலுத்தும் வரியைக் குறித்திருக்கலாம்.   இப்போது, ரிசீப்ட் /receipt என்பதற்கு இரசீது என்றே பலரும் கையாள்கின்றனர்….

கருவிகள் 1600 : 681-720: இலக்குவனார் திருவள்ளுவன்

681.  ங – கதிர் படிக நிறமாலைமானி X-ray crystal spectrometer   682.  ங – கதிர் படிகஅச்சுக் கோணமானி X-ray goniometer   683.  ங – கதிர் விளிம்புவிலகல்மானி X-ray diffractometer   684. ங- கதிர் நிறமாலைமானி X-ray spectrometer   685. சக்கரை நீரடர்மானி brix hydrometer சருக்கரைக் குறியீட்டு நீரடர்மானி. சுருக்கமாகச் சக்கரை நீரடர்மானி எனலாம். 686. சக்கரைமானி saccharometer   687. சமன்தள ஆடிமுப்பருமநோக்கி wheatstone stereoscope விழியிடைத் தொலைவை விடப் பெரிதாக இடைவெளி…

என்றென்றும் வள்ளலார் – பொறி.பக்தவத்சலம் உரை

ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை தை 20, 2046 / பிப்ரவரி 3.2015 தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை:  பொறி.கெ.பக்தவத்சலம்

வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!

வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!   இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கத் தம் இன்னுயிர் நீத்த மொழிப் போராளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலத் திங்கள் சனவரி 25 ஆம் நாள் வீர வணக்க நாள் கொண்டாடுகிறோம். இவ்வாரத்திலேயே தமிழ் ஈழத்திற்காக நல்லுயிர் நீத்த ஈகையர் முத்துக்குமாரன் வீர வணக்க நாளும் வருகின்றது. எனவே, இவ் வீர வணக்க நாள் என்பது 1965 ஆம் ஆண்டு மொழிப்போராளிகளுக்கு மட்டும் என்றில்லாமல்   தமிழ் காக்க முதல் உயிர்ப்பலியான நடராசன் முதல் அனைவருக்குமான வீர வணக்க நாளாகவும்…

கருவிகள் 1600 : 641-680 : இலக்குவனார் திருவள்ளுவன்

641.குறுக்குமானி – stenometer:   ஈர் இலக்குகளின் குறுக்கே உள்ள தொலைவை அளக்கும் கருவி. தொலைவுமானி வேறு உள்ளதால், இதனைக் குறுக்குமானி எனலாம். குறுக்கொலிமானி – psophometer : மின்சுற்றுகளில் குறுக்கிடும் ஒலிகளை அளவிடும் கருவி. மின் இரைச்சலளவி (.இ.) எனக் குறிப்பதைவிடக், குறுக்கொலிமானி எனலாம். குறுகிய அலைப்பட்டை தழல்மானி – narrow-band pyrometer குறை கடத்தி திரிபளவி – semiconductor strain gauge குறைஒளி ஒளிமானி – grease spot photometer துளைநோக்கி – borescope / boroscope : குறைபாடுகள் அல்லது செம்மையின்மையை…

கருவிகள் 1600 : 601-640 : இலக்குவனார் திருவள்ளுவன்

  601. கிண்ண உலவை மானி-cup anemometer 602. கிண்ண மின்மானி-cup electrometer 603. கிண்ணக் காற்றழுத்தமானி-cup barometer 604. கிண்ணச் சங்கிலி உலவை மானி-bridled-cup anemometer 605. கிண்ணி வெப்பமானி-cup-case thermometer 606. கிணறுவகை நீர்ம-வளிய அழுத்தமானி-well-type manometer 607. கீற்றணி நிறமாலைமானி-grating spectrometer 608. கீற்றொளி உயிரி நுண்ணோக்கி-slit lamp biomicroscope 609. கீற்றொளி நுண்ணோக்கி-slit lamp microscope :கருவிழிப்படலப் பின்பரப்பை ஆய்வதற்குரிய இணைப்புடைய நுண்ணோக்கி. 610. குண்டு நீரடர்மானி-balling hydrometer 611. குண்டு மிதவை நீர்ம மட்டமானி-ball-float liquid-level meter…

கருவிகள் 1600 : 561-600 : இலக்குவனார் திருவள்ளுவன்

காந்த நிறமாலைமானி-magnetic spectrometer காந்த வரைவி-maneto-graph : காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி. காந்த வெப்பமானி- magnetic thermometer 564. காந்தச்செறிவுமானி- coercimeter :    இயற்கைக் காந்தம் அல்லது மின்காந்தத்தின் காந்தச் செறிவை அளவிட உதவும் கருவி. காந்தத் திசை காட்டி- magnetic compass காந்தத் திறன்மானி- magnetic potentiometer காந்தத் தூண்டல் சுழல் நோக்கி- magnetic induction gyroscope காந்தப் பாயமானி-flux meter 569. காந்தப்பின்னடைவுமானி-hysteresimeter:   காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலையை அளவிடும் கருவி. (காந்தத்தயக்கமானி (-இ.)…

கலைச்சொல் தெளிவோம் 57: இடையீடு-provision

 57: இடையீடு-provision     இடை என்பது நடு என்னும் பொருளிலும், இடையே என்னும் பொருளிலும், இடுப்பு என்னும் பொருளிலும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. இடையின் அடிப்படையாக இடைப்படுதல் முதலான வேறு சொற்களும் கையாளப்படுகின்றன. இடையே வருதல் என்னும் பொருளில் உள்ள சொற்கள், இடையே தடையாக வருதல் என்னும் பொருளில்தான் வந்துள்ளன. எனினும் இடையிடுபு என்னும் சொல் பின்வருமாறு கையாளப்படுகின்றது. கூர்உளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு (நெடுநல்வாடை 119) இடையே இடுதல் என்னும் இச்சொல்லை நிலையான ஒன்று வழங்குவதற்கு இடையே தரப்படுகின்ற-இடையே இடப்படுகின்ற-என்னும் பொருளில்…

கருவிகள் 1600 : 481-520 : இலக்குவனார் திருவள்ளுவன்

  481. கணக்குமானி – arithmometer :  கணிப்புமானி எனச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி கூறுகின்றது. கணக்குமானி என்பதே ஏற்றதாக இருக்கும். 482. கதிரலகுமானி  – roentgen meter :ங-கதிர் அல்லது ஞ- கதிர் (x-rays or γ-rays)களின் திரள் அளவை அளவிடும் கருவி.கதிர்வீச்சு அலகினை (roentgen) அளவிடுவதால் கதிர் அலகுமானி> கதிரலகுமானி எனலாம். 483. கதிரலைவுநோக்கி  –  ray oscilloscope 484. கதிருமிழ்வுமானி  –  emanometer 485. கதிர்ப்பு நோக்கி –   spinthariscope  :  ஊடிழை கதிர்த்திரை , நீளலை மினுக்கத்தால் கதிரியக்க…

கலைச்சொல் தெளிவோம் 53: இடங்கர்-crocodile; கராஅம்-alligator; முதலை-gavial

  53: இடங்கர்-crocodile;  கராஅம்-alligator;  முதலை-gavial   குரோகடைல்(crocodile), அலிகேட்டர்(alligator) என இரண்டையும் நாம் முதலை என்றே சொல்கிறோம். பொருள் அடிப்படையில் இரண்டும் சரிதான். பல்லி என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது குரோகடைல். பல்லி என்னும் பொருளுடைய இசுபானியச் சொல்லில் இருந்து உருவானது அலிகேட்டர். மூலப் பொருள் ஒன்றாயினும் வெவ்வேறு வகையைக் குறிப்பதால் நாமும் அவ்வாறே குறிப்பதே சிறப்பு. முதலை, இடங்கர், கராம் என முதலைகளின் வெவ்வேறு வகைகள் பழந்தமிழகத்தினர் அறிந்திருந்தனர். குறிஞ்சிப்பாட்டில் ஒரே வரியிலேயே(257) கொடுந் தாள் முதலையும், இடங்கரும்,…

கலைச்சொல் தெளிவோம் 52: மலைப்பாம்பு-boa ; மாசுணம்-python

 52. மலைப்பாம்பு-boa; மாசுணம்-python   மலைப்பாம்பு பைதான்(python) என்றாலும் போ (boa)என்றாலும் மலைப்பாம்பு என்றுதான் சொல்கின்றனர். களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் (நற்றிணை 261.6) துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி (மலைபடுகடாம் 261) ஆகியவற்றில் மாசுணம் என மலைப்பாம்பின் வகை குறிக்கப்பட்டுள்ளன. எனவே, மலைப்பாம்பு-boa மாசுணம்-python என வேறுபடுத்தலாம்.

‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?

‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?   தூய்மையே நம் செல்வம். எனவே, இந்தியாவைத் தூய்மையாக்குவோம் என்னும் திட்டம் என்னும் எண்ணம் வரவேற்கத்தக்கது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் கேலிக்கூத்தாகத்தான் உள்ளது.   அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகளால் இந்தியா தூய்மையாகிவிடுமா? ஆனால் அப்படித்தான் மத்திய அமைச்சர்கள் எண்ணுகிறார்கள்.   உழவாரப்பணி போன்று தூய்மைத் திட்டத்தில், தொண்டு மனப்பான்மையில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கு முன்னதாக அரசுப் பணியாளர்கள் தத்தம் கடமையைஆற்றப் பணிக்க வேண்டும்.   மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் தூய்மை பேணப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்….