சொல் மந்திரம் – செயல் எந்திரம் : அ.ஈழம் சேகுவேரா

சொல் மந்திரம் செயல் எந்திரம்   நாம் விதைப்பதற்காக நிலத்தைக் கிளறினோம், அவர்கள் புதைப்பதற்காக நிலத்தைக் கிளறினார்கள். நாம் கதிரறுக்கக் கத்தி எடுத்தோம், அவர்கள் கருவறுக்கக் கத்தி எடுத்தார்கள். நாம் சூடு மிதித்தோம், அவர்கள் சூடு வைத்தார்கள். பாடுபட்டு விளைஞ்சதெல்லாம் வீடு கொண்டு வந்து சேர்க்க முயன்றோம் வழி மறித்தார்கள். நம் மடியில் கை வைத்தார்கள். கலங்கப்பட்டோம் கலவரப்பட்டோம் கூனிக்குறுகியது ஆத்மா. விளைபூமி வினைபூமியாயிற்று. இசைந்து போதல் சுகம் என்றார் சிலர். மசிந்து போனாலே இருப்பு என்றார் சிலர். கட்டுடைத்து குலைந்து போனது ஒரு…

சிறுநண்டு – உருத்திரமூர்த்தியின் தமிழிசைப்பாடல்

சிறுநண்டு – தமிழிசைப்பாடல் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும். கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும். வெறுவான வெளி மீது மழை வந்து சீறும் வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும். நெறி மாறுபட நூறு சுழி வந்து சூழும் நிலையான தரை நீரில் இலை போல் ஈடாடும். இருளோடு வெளியேறி வலை வீசினாலும் இயலாது தர வென்று கடல் கூறல் ஆகும்….

செல்வாக்கு இழந்து வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – அ.நிக்சன்

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது செல்வாக்கை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் ஆகியன முதன்மையைக் குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனையக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடியாத சம்பந்தன், முதலமைச்சர் விக்னேசுவரன் ஆகியோர் தாம் நினைத்ததையே செயற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. கட்சி அரசியலை நடத்த முடியாத அல்லது நடத்தத் தெரியாத ஒருநிலையா? அல்லது தமிழர்களிடையே இனப்படுகொலைப் போருக்கு முன்னரான காலப்பகுதியில் இருந்த மேட்டுக்குடித்தனமா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.   வெளிப்படைத்…

திலீபன் – உயிர்க்கொடைஞர்களின் குறியீடு.

திலீபனைப் போற்றி விடுதலையை மீட்டெடுப்போம்!   காந்தி வழியில் நடந்ததால், காந்தியம் பேசும் இந்தியத்தால் பறிக்கப்பட்டது திலீபனின் உயிர். இந்தியம் என்பது என்றென்றைக்கும் தமிழ்ப்பகையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் தயங்காது என்பதை உறுதிப்படுத்திக் காட்ட விரும்பியதால் திலீபனின் அறப்போர், உயிர்ப் பறிப்பில் முடிந்தது.   இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன், கார்த்திகை 12, 1994 / 27.11.1963 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழு என்னும் ஊரில் பிறந்து ஊரெழும் வண்ணம் உலகு தொழும் வண்ணம் வீரனாய் மலர்ந்து வீரனாய்ப் புகழுடல் பெற்றார்.ஆவணி 30, 2018 /…

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – (இ)லீ குவான் (இ)யூ

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ உணர்ச்சிப்பெருக்கம்!     “சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ, “தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்!” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்….

மத்தியில்ஆட்சி மாறினாலும் மாறாத் தொல்லை – புலவர் சா.இராமாநுசம்

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும்இல்லை-ஆட்சி மத்தியில் மாறினாலும் மாறாத்தொல்லை ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்னதெல்லாம் –மோடி அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம் தூற்றுவதாய் எண்ணாதீர் போகும்போக்கே –எடுத்து துல்லியமாய்க் காட்டுதந்தோ உற்றுநோக்க நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா நீங்களுமா..! போவதென்ன? வருதல் பழியே! அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஓயவில்லை – நாளும் அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ! ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே உழுவார்க்குஊக்கத்தொகை ! நெல்லுக்கேமறுப்பதா!- இந்த உலகுக்கே அச்சாணி!அவன்கழுத்தைஅறுப்பதா! எழுவாரா ! தொழில்செய்ய!…

ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்!

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள ஈழத்தமிழர்க்கான சிறப்பு முகாமில் உள்ள நந்தினி என்பவர் 12 ஆம்வகுப்பில் 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கல்விக்கான தகைவுமதிப்பெண் (cut off mark) 197.50 பெற்றுள்ளார். கலந்தாய்விற்கு விண்ணப்பித்தும் இவருக்கு அழைப்பு வரவில்லை. மருத்துவக்கல்விஇயக்கக அதிகாரிகள் ”இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ‘இலங்கை அகதிகள் முகாமில்’ வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர். ஈழத்தமிழர்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவர்கள். அடைக்கலமாக வந்தவர்களை நம் உயிரினும் மேலாகக் காக்க…

வாழ்த்திற்குரிய கலைஞரே! இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

    கலைஞர், வரலாற்றில் அருவினை பல  ஆற்றிய அருந்திறலாளர்! அவரது பகைவர்களும் அவரது உழைப்பை மதிக்கத் தவறுவதில்லை!  நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்;  மடல்களாகவும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளியவை மிகுதி. மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்த  படைப்பாளர்;  ஏறத்தாழ 75 திரைப்படங்களுக்குக் கதை உரையாடல் எழுதி உள்ளார்; நேற்றுவரை திரை உலகில் நுழைந்தவர்கள் அவர் எழுதிய திரையாடலைப் பேசி நடித்துக் காட்டித்தான் வாய்ப்பு பெற்றனர் என்பது  அழிக்க முடியாத வரலாறு; பன்னிரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை…

இனப்படுகொலையாளன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

இனப்படுகொலைகாரன் பட்சேவை அழைப்பதற்காக, நரேந்திர(மோடி)  தென்ஆசியநாட்டுத் தலைவர்களை அழைத்துத் தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டு தமிழர்களைச் சிறுமைப்படுத்தி விட்டார். இதற்கு உலகெங்கும்  எதிர்ப்புகள் எழுந்தன. எடுத்துக்காட்டிற்காகச் சில ஆர்ப்பாட்டங்களின் ஒளிப்படங்கள்.

மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக

    சூன் 3 ஆம் நாள்  இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச்  சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும்.   மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.  எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…

யாழ் பல்கலையில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ! ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை !! இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.. தமிழர்களின் வீரத்திற்கு இணையேது?  

1 3 4 5 9