எமது போராட்டம் ஒவ்வொன்றும் தன்நிறைவும் கொண்டவையே – இராம் சிவலிங்கம்
எமது போராட்டம் ஒவ்வொன்றும் தனித்துவமானதும் தன்நிகரற்றதும் மட்டுமல்ல! தன்நிறைவும் கொண்டவையே — கலாநிதி இராம் சிவலிங்கம் விடுதலை இந்தியாவுக்கான அறவழிப் போராட்டத்தின்போது, அதன்மகிமையை உணர்ந்த பிரித்தானிய அரசு, மாண்புடன் செயற்பட்டதால், இந்தியாவின் விடுதலை உறுதியானது. எமது அறவழிப் போராட்டம், அதன் தன்மையை மதியா சிங்கள அரசின்அடிதடிக்கு உள்ளாகி, இரத்தம் தோய்ந்த போராட்டமாக மாற்றம் பெற்றது. அன்பை ஆயுதமாகக் கொண்ட இந்தப் போராட்டத்தில், நாம் பொறுப்போடுநடந்ததால், இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றோம். உள்நாட்டு மோதல்,இலங்கை-இந்தியச்சிக்கலாக மாற்றம் பெற்றது. அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக ஆயுதம் ஏந்துவதும்ஓர்அறவழிப் போராட்டமே…
ஏழ்தெங்கம் ஈழம் ஆனது! – அரசன் சண்முகனார்
ஏழ்தெங்கம் ஈழம் ஆனது! குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்கம், ஏழ்மதுரை, ஏழ்முன்பாலை, ஏழ்பின்பாலை, ஏழ்குன்றம், ஏழ்குணக்காரை, ஏழ்குறும்பனை என்று 49 நாடுகள் இருந்ததாக இறையனார் உரையிலிருந்து அறிகிறோம். “பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என இதைச் சிலப்பதிகாரமும் செப்புகிறது. இதில் குறிப்பிடப்படும் ஏழ்தெங்க நாட்டின் எஞ்சிய பகுதி கடல்கோளினின்றும் தப்பித்து இன்று தீவாக இருக்கும் பகுதியே இலங்கை அல்லது ஈழம் ஆகும் .‘ஏழ் தெங்கம்’ என்பதே ஈழம் எனவும் இலங்கை எனவும் மருளி வழங்குகின்றது. -அரசன் சண்முகனார்: தமிழ் நிலவரலாறு
கருப்பு ஆடி, 32 ஆம் ஆண்டுத் துயர நினைவு, பிரான்சு
ஆடி 09, 2046/ சூலை 25.07.2015 : 15.00
உன்றனுக்காய் ஒருநாடு தோன்ற வேண்டும்! – சி.கருணானந்த இராசா
சந்த வசந்தத்தில் தமிழழகைக் காட்டுதற்காய் வந்த புலவீர்! வழி நடத்திடும் தலைவ! குந்தியிருந்து குறிப்போடெமை நோக்கும் சொந்தங்காள் உங்களைக் கை தூக்கி வணங்குகிறேன். கானமயிலாடியதைக் கண்டபொல்லாக் கடைகெட்ட வான்கோழி சிறகு தூக்கி மோனநடம் ஆடியதைப்போல நானும் முனைகின்றேன் பாவலர் முன் கவிதைபாட ஆனதனால் கற்றோரே கேலிவிட்டு அறிவற்றோன் கவிகேட்பீர் என்று வேண்டி தேனினியாள் தமிழ்த்தாயின் பாதம் வீழ்ந்தேன் செய்த கவிக்(கு) இன்தமிழே என்றும் காப்பு காரிகையைக் கண்ணெடுத்தும் பார்த்திராத கட்டையிவன் கவிதழுவா மணங்காணான்(பிரமச்சாரி) தூரிகையாம் யாப்பையவள் அருங்கலத்தில் தோய்த்தெழுதி யறியாத சுத்த மூடன்…
தமிழர் அழிவது யாராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்
எவராலே? ஈழம் சிதைவது எவராலே? தமிழர் அழிவது யாராலே? கொடுஞ்சிறை வதைமுகாம் பிறவற்றில் தமிழர் மடிவது எவராலே? உணவும் நீரும் சிறிதுமின்றி மருந்தும் உடையும் கிட்டாமல் நாளும் ஒழியும் சூழலுக்குத் தள்ளப்பட்டது யாராலே? கற்பும் பொற்பும் சிதைப்பவரை ஓட ஓட விரட்டாமல் அஞ்சி அஞ்சிச் சாகும்நிலை வந்தது இன்று எவராலே? தமிழர் அழுவது யாராலே? இந்தியம் சிரிப்பது எவராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்
அழிக்கின்றபகை வெல்வோம் – க. உலோகன்
களித்துண்டு வாழ்வமோ தமிழா! அங்கே கரித்துண்டாய்ப் போகிறான் தமிழன்! விழித்தின்று குரல்கொடுதமிழா! கொடும் விதிவெல்லப் புறப்படுதமிழா! பகிர்ந்துண்டு வாழ்ந்தவன் அன்று பதியின்றியலைகிறான் இன்று! துயில்கொள்ளத் தரைகூடஇன்றி-அவன் துடித்தங்கு மடிகிறான்இரைதண்ணியின்றி! அழிநச்சுவாயுவின் எரிபட்டுஉறவுகள் உருகெட்டுச் சாதல்கண்டும் பரிவற்றுவாய்மூடிப் பதுங்கிடும் உலகத்தின் சதிவெட்டக் குரல் கொடு தமிழா! வெளிக்குண்மை சொல்ல வா! தமிழா! – நாம் விழிமூடியுறங்கினால் யாருள்ளார் தமிழா! அழிக்கின்றபகை வெல்வோம் தமிழா!- உளம் அனல்பொங்க உலகிற்கு உண்மைசொல்தமிழா! – க. உலோகன்
பன்னாட்டு ஏதிலியர் நாள் (World Refugee Day 20-06-2015) – ஈழம் இரஞ்சன்
பன்னாட்டு ஏதிலியர் நாள் வீடு இல்லை… நாடு இல்லை…விதிவிட்ட வழியா? இன்றைய நாட்களில் உலகில் 7.6 பேராயிரம்(மில்லியன்) மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும். இருப்பிடமற்று உலகமெங்கும் ஏதிலிகளாக ஈழத்துமக்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அண்மையில் ஐ.நா வெளியிட்ட சில தகவல்கள் உலகின் கையறு அரசியல் நிலையைக் காட்டுகின்றது. 7.6 பேராயிரம் மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடுவதுடன், 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகுதியானஅளவு ஏதிலிகள் எண்ணிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐ.நாவின் ஏதிலியருக்கான…
இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்
மரித்துப்போனதா மானுடம் ? சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ! ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ? தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள்…
முள்ளிநிலத்தில் கள்ளக் கொலையாளிகள்! – – கவிஞர் தணிகைச் செல்வன்
முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ…! பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம் முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ…! கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வியர்க்கலையோ…! ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோற்றுக்கும் இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ…! ஐயோ உலகே! ஐயகோ பேருலகே! பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ? கையேந்தி வந்தாரைக் கரமேந்தி காத்த இனம் கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும். எல்லாம் இழந்தோம்…
ஈழமும் பன்னாட்டுச் சதிகளும் – ஈரோட்டிலும் கோபியிலும் கருத்தரங்கம்
கோபியில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் காலை10 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். ஈரோட்டில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் மாலை 5 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். மே17 இயக்கம் தவறாமல் வருக!
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 7 : இலக்குவனார் திருவள்ளுவன்
(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] வாழும் மூத்த மொழித் தகுதி வாழ்விழந்த மொழிக்குத்தான் செம்மொழித் தகுதி தருவோம் எனக்கூறி உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு அத்தகுதி மறுக்கப்படுவதால், ‘வாழும் மூத்தமொழி’ என்ற தகுதியைத் தமிழுக்குத் தந்து தமிழ்க்கண்டத்திலும் ஐ.நா. போன்ற உலக அமைப்புகளிலும்…
தமிழ்மொழி பேசும் உலக உறவுகளே! நீங்களே சொல்லுங்களேன்?
தமிழ் இனத்தின் தாய் – ஓர் உகத்தின் தாய், ஏன் தனிச்சிங்கள பெளத்த பேரினவாதியின் கால்களில் விழ வேண்டும்? அவன் சப்பாத்து கால்களுக்குள் ஏன் முகம் புதைத்து தன் குறைகள் சொல்லி அழ வேண்டும்? இந்த ஒளிப்படத்தில் உள்ள சக்தியற்ற-பயனற்றவர்களால் தானே எமது இனத்துக்கு இந்த இழுக்கு! வெட்கம்! கேடு! அவமானம்! பழிப்புரை(சாபம்) எல்லாம்! எல்லாமே! ஒளிப்படத்தை நன்றே அவதானியுங்கள். ஈழத்தாயவள், சிங்களக் கொலைவெறி வண்கணாரின்(பாசிட்டுகளின் கால்களில் விழ முன்னே, பதறி ஓடோடிச்சென்று கைத்தாங்கலாகத் தூக்கி தாங்கிப்பிடித்துத் தேற்றாமல், நிகழ்கால நீலன்…