அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை கட்சியினரைக் குழப்புவதற்காகவோ அப்படிப்பட்ட எண்ணத்தை விதைக்கவோ அமமுகவும் அதிமுகவும் இணைய இருப்பதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அமமுக இணைந்தால் அதிலுள்ளவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அமமுகவில் அதிமுக இணைவது என்பது தாய்க்கழகத்திற்கு இழுக்கு.   இணைந்தாலும் விரும்பா மற்றோர் அணி உருவாகலாம். ஆனால் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். சசிகலாவையே பொதுச்செயலராக ஏற்பதாக இருந்தால் ஒரே கட்சி என்ற பெயர் கிட்டும். பாசகவின் அதிமுக அழிப்பு முயற்சிகள் தோல்வியுற்றதாலும் பொதுத்தேர்தல்களில் மண்ணைக் கெளவி வருவதாலும் தன் அதிகார…

அடிமைத்தனத்தின் தொடக்கமல்ல!  தொடர்ச்சியே எடப்பாடி அரசு! – இலக்குவனார் திருவள்ளுவன்

அடிமைத்தனத்தின் தொடக்கமல்ல!   தொடர்ச்சியே எடப்பாடி அரசு!   அனைத்துத் தரப்பாரும் ஒருமித்துத் தெரிவிக்கும் கருத்து எடப்பாடி க.பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும் பாசகவின் அடிமையாக இருக்கிறார்கள்; ஆட்சியைக் காப்பாற்ற அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; அடிமைத்தனத்தில் ஊறி மாநில உரிமைகளைக் காவு கொடுக்கிறார்கள் என்பனவே. ஆனால் எடப்பாடியார் மட்டுமல்ல, இதுவரையிலான தமிழக அரசுகள் மத்திய அடிமையாகத்தான் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இவரும் இவரது அமைச்சர்களும் பாசக அடிமையாக இருக்கிறார்கள என்பதுதான் உண்மை.   இந்தியா, குடியரசான பின் தமிழ்நாட்டில் அமைந்தது காங்கிரசு ஆட்சி. மத்தியிலும்…

செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! – இலக்குவனார் திருவள்ளுவன்

செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் !    சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள்  அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல்  போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில  நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்….

ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!   – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!   குவியாடி உரிமைக் குரல் கொடுத்துப் பெயர் பெறுவோர் உலகில் உண்டு. அடிமையாய் அடங்கிப் பெயர் பெறுவோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அடிமைத் தனத்தின் அடையாளம்தான் போலிப் பணிவு! மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இந்தப் போலி பணிவுக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறார். தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதை உணராமல் தற்காப்பு என எண்ணிச் சில முத்துகளை உதிர்த்து வருகிறார் அவர்! 30 ஆண்டுகளாகச் சசிகலா, செயலலிதாவை ஆட்டி வைத்ததாகக் கூறி வருகிறார்…

அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   – குவியாடி

பிற கருவூலம்   அனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   குவியாடி முந்தைய திமுக ஆட்சியின்பொழுது (2006-2011) அதனைச் சிறுபான்மைஅரசு என்றே எப்பொழுதும் செயலலிதா கூறிவந்தார். சட்டமன்றத் திமுக உறுப்பினர்கள் அடிப்படையில் அப்பொழுது திமுக அரசு பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் – காங்கிரசு கூட்டணியால் – அது பெரும்பான்மை அரசாகத்தான் செயல்பட்டுவந்தது. இப்பொழுதோ சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் மட்டுமல்ல, சொந்தக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில்கூடப் பெரும்பான்மை இழந்து அல்லாடுகிறது அதிமுக!…

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! [சுற்றத்தாருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கை கரையில்லாக் குளத்தின் நீர்போன்று பயனற்றுப் போகும்.] அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 523) “ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே” புறநானூறு கூறும் இப்பொன்னுரை உலகமக்கள் யாருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. சோழவேந்தன் நலங்கிள்ளிக்கும் சோழவேந்தன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. அப்பொழுது புலவர் கோவூர் கிழார் இருவரிடமும் ”இருவர் வெற்றி காண்பது என்பது இயலாத ஒன்று. ஒருவர் வெற்றி பெற்றாலும் மற்றவர் தோற்றவர்…

அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி!    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், கனவுகளில்  வாழ்ந்தவர்களும் அவர் வெற்றி பெறக்கூடாது எனக் கருதியவர்களும் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எண்ணிய முகவர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சின்னமும் கட்சியும் ‘மத்திய ஒத்துழைப்பால்’ கிடைத்தமையால் மக்கள் ஆதரவும் கிடைக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டமையால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  ‘’தினகரன் வெற்றி பெற்றால் பாசகவின் பிடி தளரும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர் வெற்றி பெறுவதை விரும்புகின்றனர்” என முன்னரே…

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம் – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம்  அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை.  இந்தச் சூழலில்  சசிகலா அல்லது தினகரன் பொறுப்பிற்கு வந்தால் வெறுப்பு  மேலும் மிகுதியாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இவர்களின் வளர்ச்சி கண்டு அஞ்சிய மத்திய ஆட்சி, இவர்களை வேரறுப்பதாக எண்ணி மக்களிடையே  செல்வாக்கை உண்டாக்கி வருகிறது.  நெருக்கடிநிலையினால் ஏற்பட்ட இன்னல்களால் மக்கள் இந்திராகாந்திக்கு 1977 இல் தோல்வியைத் தந்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் அவர் 1980 தேர்தலில் வெற்றிபெற்று அரசை அமைத்தார்….

அதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்!  ஒரு  செயல் சரியா அல்லது தண்டனைக்குரியதா? என்பது அச்செயலைப்பற்றி மட்டும் முடிவெடுப்பதல்ல! அதனை ஒத்த பிற  செயலைச் செய்தவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொருத்தே முடிவெடுக்கப்படுகிறது. அதுபோல் நல்ல  செயலும் அதிகாரத்தினரிடம் உள்ள  செல்வாக்கின்மையால் குற்றச் செயலாக மாறுவதும் நிழ்கிறது. எனவே, எந்த ஒரு  செயலின் மதிப்பும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகின்றது என்பதே  இன்றைய நம் நாட்டின்   இலக்கணமாக மாறிவிட்டது.  சசிகலா குடும்பத்தினர், அவர்களின் நண்பர்கள், பணியாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடந்த, நடக்கின்ற வருமானவரித்துறையின் அதிரடி ஆய்வுகள் ஊழலை ஒழிக்க …

ஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல!  உண்மைக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல!  உண்மைக்கு!   சசிகலா, தினகரன் தொடர்பான கட்டுரைகளப் படிக்கும்  நண்பர்களில் பெரும்பான்மையர், “உங்கள் கட்டுரைத் தலைப்புகளைப் பார்த்து நாங்கள், சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக எழுதுகிறாரே! என எண்ணுவோம். ஆனால் படித்து முடித்ததும் வழக்கம் போல் நடுநிலையாகவும் துணிவாகவும் எழுதுவதைப்  புரிந்து கொள்வோம். மாறுபட்ட  கோணத்தில் அமையும்  உங்கள் கட்டுரைகள் தொடரட்டும்!” என்கின்றனர். சிலர் “அதிமுகவினரே சசிகலா குடும்பத்தைப்  புறக்கணிக்கும் பொழுது அவர்கள் சார்பாக எழுதுகிறீரகளே!” என்று  கேட்கின்றனர்.  மூவர் ஊழல்பேர்வழிகளை ஆதரித்துத் திருவள்ளுவர்  பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக முகநூலில்…

சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள்  அஇஅதிமுகவின் பொதுச்செயலர் சசிகலா குற்றமற்றவரா அல்லது குற்றவாளியா என்பதுபற்றி இங்கே  ஆராயவில்லை. அவர் குற்றவாளியாக இருந்தால் பிற குற்றவாளிகளுக்கு வழங்கப்பெறும் உரிமைகளும் வாய்ப்பு நலன்களும் அவருக்கும் வழங்கப்பெற வேண்டும். அவர் குற்றமற்றவராக இருந்தால் பிற குற்றமற்றவர்களுக்கு வழங்கப்பெறும்   நயன்மைநிலை / நீதி  நிலைவாய்ப்பு அவருக்கும் வழங்கப்பெற வேண்டும் என்பதே நம் கருத்து.   ஒருவர் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும் அவர் அரசின்  ஆதரவாளர் என்றால் ஒரு வகையாகவும் இல்லை எனில் மற்றொரு வகையாகவும் சட்டம் கையாளப்படுவது நம் நாட்டு…