தோழர் தியாகு எழுதுகிறார் 27: தீரன் திண்ணியன் தேசத் தலைவன்

(தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): தொடர்ச்சி) தீரன் திண்ணியன் தேசத் தலைவன் “களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்எண் தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த கால்அன் னோனே.” (புறநானூறு 87) “நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!” பகையரசின் அகந்தையை அறுத்திட இவ்விதம் எச்சரித்தாள் ஔவை. தமிழ் என்றால் வீரம் என்று பெருமிதம் கொள்ளும்…

திலீபன் சாகவில்லை!  – யோ புரட்சி

திலீபன் சாகவில்லை! பசி வந்தால் பற்று பறக்காது பசி வந்தால் பத்தும் பறந்திடுமெனும் பழமொழியை பார்த்தீபன் பொய்யாக்கினான். தேசம் பசித்திருக்கலாகாதென‌ தேகம் பசித்திருந்தான். திருவிழா காணும் நல்லூர் தியாக விழா கண்டதே. ஆலய பூசை மறந்து உறவுகள் அண்ணா உன்முன் திரண்டதே. காந்தி அன்று இருந்திருந்தால் உன் காலடிக்கே வந்திருப்பார். திலீபன் உன் செய்கை கண்டு கிரீடம் தந்திருப்பார். தியாகத்தை பருகியதால்தானா சிறுதுளி நீர் பருகவில்லை. மெழுகாய் உருகியதால்தானா உணவு கேட்டு உருகவில்லை. மரணத்துக்கு போகையில் யாரும் மாலை சூடுவரோ.. இறக்கப் போகுமுன் எனக்குப்…

திலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன்

திலீபன் மண்ணுக்காக இறந்தான்  – உயிர்க்கொடையின்பொழுது மேதகு பிரபாகரன் விடுத்த செய்தி   “எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான  ஈகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள். ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் ஈகமோ-தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. அமைதிப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஈகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி….

தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்! – இளைய விகடன்

பிற கருவூலம் – இளைய விகடன் (சூனியர் விகடன்)   தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்!  துரை.வேம்பையன்  இராசமுருகன்   ‘‘இதுவரை இரண்டு கோயில்களில் தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்துள்ளோம். ஏற்கெனவே தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்த சிவன் கோயிலுக்கு, இப்போதும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய விரும்பும் எங்களின் முயற்சிக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள் திருமக்கூடலூர் மக்கள்.   கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ளது திருமக்கூடலூர். இந்த ஊர் மக்கள், கோயில் குடமுழுக்கு,…

எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! – முருகவேல் சண்முகன்

எழுந்து நிற்கிறது எழுக தமிழ்!     தமிழரின் தாகம் தணிவதில்லை. அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சூழ்நிலைகளில் அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாகக் கடந்த புரட்டாசி 08, 2047 / 24.9.2016 அன்று நடைபெற்ற ‘எழுக தமிழ்’ப் பேரணி அமைந்திருந்தது. தற்காப்பு முறையில், உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் அறப் போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது இப்பேரணி. அதுவும், இப்பொழுதைய கால ஓட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களை ஆயத்தப்படுத்துவதற்கான தொடக்கக் கட்டமைப்பையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.   தான் தொடங்கப்பட்ட…

யாழில் 3000 ஆயிரம் பேர்! – ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை!

யாழில் 3000 ஆயிரம் பேர்!  ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை!   தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் அமைதிப்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகம் கண்டிருக்கின்றது!   ஈகையர் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் கிழமையில்(வார) இந்த மக்கள் எழுச்சி நிகழ்ந்திருப்பது கவனிப்புக்கு உரியது. இனப்படுகொலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரான இந்த ஏழாண்டுகளில் இத்தகைய மாபெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்குக் காரணம், தமிழர் தாயகப் பகுதிகள் தீவிரமான…

செங்கொடியூர் சென்று வந்தேன்! நீங்கள்….தமிழ் இராசேந்திரன்

தமிழ் உணர்வாளர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய தமிழ்க் கோயில்….. தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சியிலிருந்து 6  புதுக்கல்  தொலைவில் உள்ள , நேர்மை மிகு ஆட்சிப் பணியாளர் உ.சகாயம் அவர்களால் வழங்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள, ஒரே சமையல் , ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டில் பல குடும்பங்கள் ஒன்றிணைந்து பெருங்கூட்டுக் குடும்பமாக வாழுகிற, பொது உடைமை வாழ்வு (Community Life) என்ற அடிப்படையில் இயங்குகிற, திருமணத்தை மற்றவர் நலனுக்காகப் புறக்கணித்து, முதிர் கன்னியாக, ஈக வாழ்வு நடத்தும் மகேசு என்ற நேர்மையின் இலக்கணமாக…

பன்னாட்டு நீதிப் பொறிமுறை வேண்டும் கூட்டறிக்கை

  ஈகச் சுடர் திலீபன் நினைவு நாளில் (2015 செப்டம்பர் 26) ஒரு கூட்டறிக்கை இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக – திலீபனின் 28 ஆவது நினைவு நாளான சென்ற 26.09.2015 அன்று மாலை 6  மணியளவில்  சென்னை  தியாகராய நகரிலுள்ள செ. தெ. தெய்வநாயகம் பள்ளியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய  “வேண்டும்…

திலீபனைப் படம் பிடித்த கவி கத்தூரி

நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை ! அழகென்றால் என்ன ?  உடல் அழகு, கல்வியழகு, கவிதையழகு என்று எத்தனையோ விதமாக அழகுகள் பேசப்படுகின்றன. எல்லா அழகுகளுக்கும் மனிதன் தன் வசதிக்கேற்ப வரைவிலக்கணம் வகுத்திருக்கிறான். அழியும் அழகை நம்பி ஆகா இதுவல்லவோ அழகென்று ஓடி ஏமாறுவோர் உலகில் பலர் உண்டு.   ஆனால் அழியா அழகென்று ஒன்றிருக்கிறது. அதுதான் மனிதனை என்றும் உற்சாகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழகை அடையாளம் காணும் உணர்வை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறான். மற்றவரின் கருத்துப் பாதிப்பிற்கு…

வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை – த.தே.வி.இ.கருத்தரங்கம்

திலீபன் 28ஆவது நினைவுநாள் கருத்தரங்கம்   இருபத்தெட்டு ஆண்டு காலம் முன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் இந்தியத் தலையீட்டால் நெருக்கடிக்கு உள்ளான போது சொட்டு நீரும் அருந்தாத பட்டினிப் போராட்டத்தில் உயிர் தந்து தடை நீக்கிய ஈகச்சுடர் திலீபன் நினைவு நாளில் …. இன்று சிங்கள-அமெரிக்க-இந்தியக் கூட்டுச் சதியால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாவிற்கு விடைதேடும் கருத்தரங்கினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடத்துகின்றோம். திலீபன் நினைவை நெஞ்சில் சுமந்து……