வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல்

வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல் தேனிமாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, நாகர்வள்ளி அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை, மஞ்சள் ஆறு பகுதிகளில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள் உள்ளன.  பலா, தேக்கு, புளியமரம், நாவல் மரம் முதலான ஏராளமான மரங்கள் உள்ளன. இம்மரங்கள் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள். மரம் வெட்டிக்கடத்தும் கும்பல் உரிமைப்பகுதிகளில்(பட்டாக்காடுகளில்) மரங்கள் வெட்டுவதாக இசைவு பெற்று வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருவாய்…

தேனி மாவட்டத்தில் புளி அமோக விளைச்சல்

தேனி மாவட்டத்தில் புளி அமோக விளைச்சல்   தேனிமாவட்டத்தில் புளியமரங்களில் புளிகள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தேவதானப்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவில் உள்ளன. முன்பு, சாலையின் இருபுறமும் இராணிமங்கம்மாள் காலத்தில் நடப்பட்ட புளியமரங்கள் அதிக அளவில் இருந்தன. சாலை விரிவாகத்தின்போது அவை அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. இவை தவிர பொம்மிநாயக்கன்பட்டி, எ.புதுப்பட்டி, மேல்மங்கலம் பகுதியில் புளியமரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் கிடைக்கும் புளியம்பழங்களை எடுத்துக் காயவைத்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்….

அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வு

அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வு   தேனிமாவட்டத்தில் அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.இருப்பினும் மீன்விரும்புநர்கள் அம்மீன்களை விரும்பி வாங்கி உண்கிறார்கள்.   தேவதானப்பட்டிப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள், கண்மாய்களில் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் இயற்கையாக அயிரை மீன், கெழுத்தி மீன் போன்ற மீன்கள் பெருகி உள்ளன. மற்ற மீன்கள் தண்ணீர் செல்லக்கூடிய திசையில் செல்லும் தன்மை உடையது. ஆனால் அயிரை மீன் மற்றும் கெளுத்தி மீன் நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் வரும் தன்மை…

வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்-ஊராட்சிமன்றத் தீர்மானம்

வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் ஊராட்சிமன்றத்தில் தீர்மானம் தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் வெடி(பட்டாசு) வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வைகைப்புதூர், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு போன்ற பகுதிகளில் திருமண விழாக்கள், புதுமனை புகுவிழா, காதணிவிழா, பூப்புனித நீராட்டு விழா, துக்க நிகழ்ச்சி, கிடாவெட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன், நோயாளிகளும், முதியோர்களும் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் வெடிகளினால் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்குக் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க…

கன்னிமார்புரத்தில் கற்சுரங்கங்களால் விரிசலடையும் சுவர்கள்

கன்னிமார்புரத்தில் கற்சுரங்கங்களால் விரிசலடையும் சுவர்கள்  ஊர் மக்கள் தூங்கமுடியாமல் தவிப்பு  – வைகை அனிசு   தேனிமாவட்டத்தில் உள்ள கன்னிமார்புரத்தில் இரவு நேரத்தில் அகழ்களங்களில்(கற்சுரங்கங்களில்) வைக்கப்படும் வெடிகளால் இரவில் தூங்கமுடியாமல் தவிக்கின்றனர்.    தேவதானப்பட்டி அருகே உள்ள கன்னிமார்புரம், வைகைப் புதூர், தேவதானப்பட்டி கோழிகூப்பிடுகிற ஆலமரம், எ.புதுப்பட்டி, மேல்மங்கலம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் வெடிப்பகம்(கிரசர்) என்ற பெயரில் பல அகழ்களங்ககள் இசைவில்லாமல் இயங்கிவருகின்றன.   இதே போல உத்தமபாளையம் அருகே உள்ள சங்கிலிக்கரடு, ஆண்டிபட்டி அருகே தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிப்பகம்(கிரசர்) என்ற…

புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் – வைகை அனிசு

தேனிமாவட்டத்தில் புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் தேனிமாவட்டத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது ஆடு வளர்க்கும் தொழில். நமது நாட்டில் கால்நடைக்கணக்கெடுப்பு இந்திய அரசாங்கத்தின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடைப் பேணுகை, பால்வளம், மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது. இக்கணக்கெடுப்பு 19191 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 19ஆவது அகில இந்தியக் கால்நடைக் கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்டுக் கால்நடைப் பேணுகைத்துறை புள்ளியல் பிரிவு வாயிலாக வெளியிடப்படுகிறது. இக்கணக்கெடுப்பு கால்நடைகளின் இனவளர்ச்சிக் கொள்கைகளை வழிவகுப்பதற்குப் பயன்படுகிறது. கால்நடைகளின் நலவாழ்வு…

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை – வைகை அனிசு

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை தேனிப்பகுதியில் பகுதியில் ஆலைக் கழிவுகளால் நீர்க்காக்கை இனங்கள் அழிந்து வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், வைகை அணை, அ.வாடிப்பட்டி பகுதிகளில் காப்பித்தொழிற்சாலை, சர்க்கரைத்தொழிற்சாலை, சாயத்தொழிற்சாலைகளின் கழிவுகள் நிலத்தடி நீரோடு கலந்து விட்டன. மேலும் கழிவுநீர்களை இப்பகுதியில் உள்ள ஊருணிகளில் இரவோடு இரவாக ஊற்றி வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள், பறவைகள் இறந்து வருகின்றன. நவம்பர் மாதம் முதல் பிப்பிரவரி மாதம் வரை இப்பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்தத்தண்ணீரில் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகள், கொக்குகள்,…

இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் பழைய இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்     தேவதானப்பட்டிப் பகுதியில் வெற்றிலை பாக்கு இடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உரல்கள் பழைய இரும்புக்கடைகளுக்கு வழியனுப்பப்பட்டு வருகின்றன.   தேவதானப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களில் வெற்றிலை, புகையிலை பயன்படுத்துபவர்கள் மிகுதியாக இருந்தனர். இதில் வயதானவர்கள் பல் இல்லாமல் இருந்தால் உரல் மற்றும் எச்சில் துப்புவதற்காகப் படிக்கம் என்ற கோளாம்பியைப் பயன்படுத்தி வந்தனர். இந்த உரலில் வெற்றிலை, சுண்ணாம்பு, தேவையான அளவு பாக்குகளை வைத்து அதனைக் குத்தி அதன்பின்னர் தங்கள் வாயில் போட்டு மெல்லுவார்கள்….

வைகை அணையில் குளிக்கும் பயணிகள்

வைகை அணையில் கண்டமான (ஆபத்தான) இடத்தில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணை மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும். இப்போது பெய்து வருகின்ற மழையினால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் வைகை அணையில் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று தாவரங்களும் பூங்காக்களும் உள்ளன. இவற்றைக் காண்பதற்குத் தேனி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இப்பொழுது ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வைகை அணையைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு வருகின்றனர்….

தேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம் – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம் பயனாளிகளுக்கு உடனடிச் சான்றிதழ்   தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டியில் அம்மாதிட்டம் நடைபெற்றது.   இத்திட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் வீ.முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலக்கம்பட்டி, வைகைப்புதூர், சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு முதலான பகுதியைச்சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.   அவர்களுக்கு வேண்டிய சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டையில் பெயர்நீக்கல், பெயர் சேர்த்தல், உரிமை(பட்டா)மாறுதல், மரபுரிமையர்சான்றிதழ் போன்றவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியல் வட்டாட்சியர் இரமேசு, சமூக நலத்துறை வட்டாட்சியர் சொரூபராணி, மண்டலத் துணை வட்டாட்சியர் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர்…

தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் பாலங்கள் சாலைகள் ஆகியவை களமாக மாறிவருகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் வானம் பார்த்தபூமிப் பகுதியில் எள், தட்டாம்பயிறு, உளுந்தம்பயறு, சோளம் போன்றவற்றைப் பயிரிட்டனர். தற்பொழுது அவை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் கூல(தானிய)வகைகளைப் பறித்து அவற்றைக் காயவைத்து அதன்பிறகு அடித்து அல்லது மாடுகளை வைத்து மிதித்துப் பயிர்களை தனித்தனியாகப் பிரிப்பார்கள். அதன்பின்னர் காற்று வரும் திசையை நோக்கி முறம் போன்ற பொருட்களால் எடுத்து வீசும்போது…

தேனி மாவட்டத்தில் பேணுகையின்றிக் காணப்படும் பொதுப்பணித்துறை கட்டடங்கள்

தேனி மாவட்டத்தில் பேணுகையின்றிக் காணப்படும் பொதுப்பணித்துறை கட்டடங்கள் தேனிமாவட்டத்தில்; பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக அரசு கட்டடங்கள் மிகுதியாக உள்ளன. வைகை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சிறப்பு விருந்தினர்கள், அமைச்சர்கள், அரசு உயர்அதிகாரிகள் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள் ஏராளமாக கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் வைகை அணையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் ஆகும். ஒவ்வொரு கட்டடங்களிலும் விருந்தினர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர இக்கட்டடங்களில் இருந்து மேற்குமலைத்தொடர்ச்சியை கண்டு களிப்பதற்கும் வைகை அணை பார்த்து களிப்பதற்கும் ஏற்ற வகையில் இவை கட்டப்பட்டுள்ளன….