தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் கருகும் வேப்ப மரங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் கருகும் வேப்ப மரங்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் வேப்ப மரங்கள் கருகி வருகின்றன.   தேவதானப்பட்டிப் பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பனிகொட்டுகிறது. இதனால் உழவு பெரிதளவில் பாதிப்படைகிறது. குறிப்பாக முளரிப்பூ(உரோசாப்பூ), மல்லிகைப்பூ முதலான பூ வகைகளும் காய்கறிகளும் பனியால் வாடி வருகின்றன. இந்நிலையில் மருந்துப்பொருளாகவும், கிருமிநாசியாகவும் உள்ள வேப்பமரங்களின் இலைகள் பனியால் கருகி இலைகள் உதிர்ந்து வருகின்றன.   மேலும் கடும் பனியால் பொதுமக்கள் தீராத நெஞ்சுசளி, காய்ச்சல், இருமல் போன்றவையால் அதிக அளவில் பாதிப்படைந்து…

தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை

தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை   தேவதானப்பட்டியில் கையால் தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் வீடுகளில் பதுக்கி வைக்கப்படுவதால் கண்டம்(அபாயம்) ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா, இறப்புச்சடங்கு, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் வெடிவகைகள் வெடிக்கப்படுகின்றன. இவ்வெடிகள் உரிமமின்றி உருவாக்கப்படுவை ஆகும்.   சோழவந்தான், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி பகுதிகளில் இருந்து இம்மாதிரியான வெடிகளை வாங்கிவந்து அளவுக்கதிமான கருமருந்துகளை ஏற்றி வெடிக்கச்செய்கின்றனர். இவ்வாறு வெடிகள் அளவுக்கதிமாக அரசு வரையறுத்துள்ள விகித அளவைவிட அதிகமான சத்தத்துடன்…

தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா

தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா   தேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு உணவளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவதானப்பட்டி அருகே உள்ள சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் சார்பில் 18 நாட்கள் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும் உணவளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி தங்கராசு உணவளிப்பைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் மாநில இணைச்செயலாளர் கணேசன், கோட்டப்பொறுப்பாளர் உதயகுமார், மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி முதலான பலர் கலந்து…

தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு   தேனி மாவட்டத்தில்; கடந்த சில வாரங்களாக அதிகமான அளவில் பனிப்பொழிவு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.   தேவதானப்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் கடந்த சில வாரங்களாகக் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அதிகாலை வரை வாகனங்கள் இருள்சூழ்ந்தபடியே விளக்குகள் எரித்தும், மலைப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் பனி விளக்கு (mist light) பயன்படுத்தியும் வாகனத்தை இயக்குகின்றனர்.   மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்குக் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவால் பொதுமக்களுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற…

புகையில்லாப் பொங்கல் – விழிப்புணர்வு பரப்புரை

தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையில்லாப் பொங்கல் கொண்டாட விழிப்புணர்வு பரப்புரை   தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையிலையில்லாப் பொங்கல் கொண்டாடப்படவேண்டும்; எனப் பேரூராட்சி நிருவாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேவதானப்பட்டியில் நடைபெற்ற வாரச்சந்தையில் இதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை நாளன்று கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், ஆகியவற்றை எரிப்பது பழக்கமாக உள்ளது. மேலும் தற்பொழுது புதுமை மயமாக்கலில் உருளை, தேய்வை, ஞெகிழி, செயற்கைப் பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சு…

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்   பொங்கல் திருநாள் போகிப்பண்டிகை, பெரும்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் இரண்டு நாட்களாக போகிப்பண்டிகையை முன்னிட்டு இல்லத்தில் உள்ள பழைய பொருட்களை எரித்துவிட்டுப் புதிய பொருட்களை கொண்டுவருதல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்; பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முறையில் புதிய பொருட்களை வாங்கத் தொடங்கினர். இதில் சூரிய வழிபாடும் உண்டு.   மேலும் தங்களுடைய மூதாதையர் வழிபாடும் ஆன்றோர் வழிபாடும்தான் முதன்மைப் பங்கு வகிக்கின்றன….

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை   தேவதானப்பட்டிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் கடும் குளிர் காரணமாகப் புகையான் நோய் ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டி, மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி முதலான பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பகலில் போதிய வெயில் இல்லாமலும், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிருடனும் தட்பவெப்பம் நிலவுகிறது. மேலும் பகலில் சில நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் மாறிமாறி அடித்து வருகின்றன….

மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி

தேவதானப்பட்டி தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி   தேவதானப்பட்டி, மேல்மங்கலம் முதலான தொடக்க நல்வாழ்வு நிலையங்களுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.   பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், சில்வார்பட்டி, புல்லக்காபட்டி முதலான ஊர்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தற்பொழுது பனிக் காலம் என்பதால், மாறிவரும் காலநிலையில் பலவிதமான தொற்று நோய்களுக்கும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.  இதனை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் பத்து நாட்கள் வரை நோய் நீடிக்கிறது. உடனடி மருத்துவம்…

பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ

தேனி மாவட்டத்தில் விலை இல்லாததால் பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ – உழவர்கள் கவலை   தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன.    தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் பூ வகைகள் ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, சென்னை முதலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.    கடந்த 3 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பூப் பயிரிடலை…

தேவதானப்பட்டிப் பகுதியில் குறைவான அளவு பருப்பு வகைகள் வழங்கல்

தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் உளுந்தம்பருப்பு குறைவாக வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம், எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் கடந்த மாதம் பருப்பு வகைகள் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெளிச்சந்தையில் வாங்கினார்கள்.   தற்பொழுது தைப்பொங்கல், கிறித்துமசு, ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு உணவுப்பொருட்கள் வழங்குவார்கள் என நம்பி இருந்தார்கள். ஆனால் மாவட்ட நிருவாகத்திடம் இருந்து 50% பொருட்களே வழங்கப்பட்டுள்ளன.. இதில் உழுந்தம்பருப்பு, எண்ணெய் வகைகள் மிகவும் குறைவாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றைக்…

‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி

‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி- காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட வேண்டும் தேவதானப்பட்டிப் பகுதியில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் ஆண்கள் தன்னுதவிக்குழு, பெண்கள் தன்னுதவிக்குழு என்ற பெயரில் அரசின் ஏற்பு   பெறாமல் 10 முதல் 20பேர்வரை சேர்ந்து பணத்தைச் சேர்த்து வட்டிக்கு விடுகின்றனர். இவ்வாறு குழுக்களாகச் சேர்ந்து பணம் கட்டுபவர்களுக்குப் பணம் தேவைப்பட்டால் அரசின் விதிமுறையை மீறி 100க்கு 5 % முதல் 10 % வரை வட்டியை முதலில்…

முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள்

முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள் தேவதானப்பட்டியில் முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் எம்ஞ்சியார் நினைவு நாளையொட்டி அவரது தீவிர நம்பிக்கையாளர்கள் மொட்டையடித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.   தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஞ்சியார் சிலை உள்ளது. இச்சிலைக்குப் பெரியகுளம் ஒன்றியப் பெருந்தலைவரும், ஒன்றியச் செயலாளருமான செல்லமுத்து மாலை அணிவித்தார். அப்போது அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மொட்டையடித்துக்கொண்டனர்.   மாலை அணிவித்தலின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பெரியவீரன், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் சுரேசு, தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் பி.ஆர்….

1 5 6 7 9