மனநிலை பாதிக்கப்படும் மாணவர்கள்

மனநிலை பாதிக்கப்படும் மாணவர்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளினால் மாணவர்கள் மனநிலை பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டிப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இயங்கும்; அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கவேண்டும் என்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைக் கசக்கிப்பிழிகின்றனர். இவ்வாறு தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கசக்கிப்பிழிவதன் மூலம் மாநில அளவில் மதிப்பெண் எடுப்பதோடு தங்கள் பள்ளியில் அதிகமான மாணவர்கள் சேருவார்கள் என்று…

கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு

தேவதானப்பட்டிப் பகுதில் கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் வழங்கப்பட்ட கறவைமாட்டுக்கடனைத் திரும்பப் பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறிவருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட பாரதஅரசு வங்கிகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி, செயமங்கலம், குள்ளப்புரம் முதலான இடங்களில் உள்ள பாரத அரசு வங்கிக்கிளைகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வங்கியிலும் தொண்டுநிறுவனங்களின் மேற்பார்வையில்தான் கடன் வழங்கப்பட்டது. அப்போது தொண்டுநிறுவனத்தினரும் வங்கி அதிகாரிகளும் இணைந்து புனையாளாக (பினாமியாக ஆட்களை) வைத்துப் பல கோடி உரூபாய் கடன் வழங்கினார்கள். உணவுப்பொருள் அட்டையின் படி, கடவுச்சீட்டு அளவுப்படம் ஆகியவற்றை…

அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வு

அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வு   தேனிமாவட்டத்தில் அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.இருப்பினும் மீன்விரும்புநர்கள் அம்மீன்களை விரும்பி வாங்கி உண்கிறார்கள்.   தேவதானப்பட்டிப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள், கண்மாய்களில் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் இயற்கையாக அயிரை மீன், கெழுத்தி மீன் போன்ற மீன்கள் பெருகி உள்ளன. மற்ற மீன்கள் தண்ணீர் செல்லக்கூடிய திசையில் செல்லும் தன்மை உடையது. ஆனால் அயிரை மீன் மற்றும் கெளுத்தி மீன் நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் வரும் தன்மை…

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு தேனி மாவட்டத்தில் வேளாண்பணிகளுக்கு உழுவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலும் அதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதிய மழை பெய்யவில்லை. மேற்குமலைத்தொடர்ச்சியில் பெய்த மழை காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கிணறுகள் நிரம்பத்துவங்கியுள்ளன. இதனால் கடந்த மூன்று ஆண்டுகாலமாகத் தரிசாக கிடந்த நிலங்களை உழுது வருகின்றனர் உழவர்கள். நெல், கரும்பு, வாழை முதலானவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இதனால் வேளாண்பணிகளுக்கு உழுவைகள் தேவை மிகுதியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகள் வரை உழவு, அறுவடை செய்தல்,…

இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் பழைய இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்     தேவதானப்பட்டிப் பகுதியில் வெற்றிலை பாக்கு இடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உரல்கள் பழைய இரும்புக்கடைகளுக்கு வழியனுப்பப்பட்டு வருகின்றன.   தேவதானப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களில் வெற்றிலை, புகையிலை பயன்படுத்துபவர்கள் மிகுதியாக இருந்தனர். இதில் வயதானவர்கள் பல் இல்லாமல் இருந்தால் உரல் மற்றும் எச்சில் துப்புவதற்காகப் படிக்கம் என்ற கோளாம்பியைப் பயன்படுத்தி வந்தனர். இந்த உரலில் வெற்றிலை, சுண்ணாம்பு, தேவையான அளவு பாக்குகளை வைத்து அதனைக் குத்தி அதன்பின்னர் தங்கள் வாயில் போட்டு மெல்லுவார்கள்….

பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள்

பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் தேவதானப்பட்டி பகுதியில் சிற்றூர் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் செயல்படாமல்பூட்டியபடியே கிடக்கின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இச்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் உள்ளனர். இச்சங்கம் திறக்கப்படாமல் இருக்கும்பொழுதே சம்பளம் எடுத்துக்கொள்கின்றனர். இவைதவிரப் போலி ஆவணம் தயார் செய்து அரசுப்பணத்தை மோசடி செய்கின்றனர். மேலும் சங்கத்திற்கு வருகின்ற ஐம்பதாயிரத்தைச் செயலாளர் இசைவில்லாமல் கணக்காளர் மற்றும் தலைவர்கள் இணைந்து பணத்தை எடுத்துப் போலி ஆவணம் தயார் செய்து அரசிற்குக் கணக்கு காட்டி…

தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை – தற்கொலை அவலம்

  தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை-பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்யும் அவலம் தேனிமாவட்டத்தில் கந்துவட்டிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேவதானப்பட்டி வேளாண்மை செழித்த பூமியாகும். மேலும் இதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், கெங்குவார்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளும் வேளாண்மை நிறைந்த பூமியாகும். இப்பகுதியில் வாழை, நெல், தென்னை, கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்களை உழவர்கள் பயிரிட்டு வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாகப் போதிய மழையில்லாததால் சோலைவனமாக இருந்த இப்பகுதி பாலைவனமாக மாறியது. இதனால் உழவர்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கடன்கள் வாங்கியும் தங்கள் நகைகளை அடமானம் வைத்தும் உழவுத்தொழில் பார்த்து…

தேனிப்பகுதியில் 200 உரூபாய் வரை விற்பனை ஆகும் புற்றீசல்கள்.

தேவதானப்பட்டிப் பகுதியில் ஈசல்கள் படி 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஈசல், ஆங்கிலத்தில் இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று அழைக்கப்படுவது உண்டு. கறையான் இனத்தைச்சேர்ந்த ஈசல் படி ஒன்று 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. அக்டோபர், நவம்பர், திசம்பர் வரை மழைக் காலம் என்பதால் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றது. பெரும்பாலும் கறையான் புற்றுகளில் வாழும் ஈசல்கள் மழை பெய்தவுடன் கூட்டம் கூட்டமாக வெளியேறும். மாலை நேரம் ஆனவுடன் விளக்கு வெளிச்சத்தை நோக்கிப் படையெடுக்கும். ஈசல் இறக்கைகள் மென்மையாக இருப்பதனால்…

குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வலியுறுத்தல்

 மக்கள் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க, தேவதானப்பட்டி பேரூராட்சி வலியுறுத்தல்   தேவதானப்பட்டிப்பகுதியில் குடிநீரைக் காய்ச்சி குடிக்கவேண்டும் எனப் பேரூராட்சி நிருவாகம் வலியுறுத்தி உள்ளது.   கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் குளம், கண்மாய், ஏரிகள், ஆறுகள் என அனைத்தும் வறண்டு கிடந்தன. இதனால் குடிநீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடியது. இருப்பினும் தேவதானப்பட்டிப் பேரூராட்சி மஞ்சளாறு அணையில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துச் சீராகக் குடிநீரை வழங்கி வந்தது.   இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இதனால் மஞ்சளாறு…

மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் இயற்கையாக உருவான ஊற்றுகள்

மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் ஆறாக மாறும் ஊற்றுகள் தேனி அருகே உள்ள மலைப்பகுதியில் இயற்கையாக ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாகப் பாய்கின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியல் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருகிறது. இதனால் தலையாறு அருவி, வறட்டாறு, மூலையாறு அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள டம்டம்பாறை செல்லுகின்ற வழியில் ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாக ஓடுகின்றன. மலையில் வெள்ளிகளை உருக்கி வார்த்தாற்போல் இக்காட்சி அமைந்துள்ளது. அப்பகுதியில் செல்லுபவர்கள் இதனைக்கண்டும் களித்தும் ஒளிப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். இந்த இயற்கையான…

தேனிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

  தேவதானப்பட்டிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முன் எச்சரிக்கையாகச் செய்யப்பட்டு வருகின்றன.. தேவதானப்பட்டிப் பகுதியை இருபிரிவுகளாகப் பிரித்து மருத்துவக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட மருத்துவத் துணை இயக்குநர் காஞ்சனா உத்தரவின்பேரில் சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி   பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் இருந்து காற்பட்டைகள்(டயர்கள்), தேங்கியிருக்கும் கழிவுநீர்க் குட்டைகள், தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்களில் அபேட் மருந்துகளை ஊற்றியும்; திறந்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடக்கோரி விழிப்புணர்வும் செய்து வருகின்றனர். மழைக் காலமாதலின் என்புமுறிவு நோய்…

தேவதானப்பட்டிப் பகுதியில் மின்னியக்கி மூலம் தண்ணீர்த் திருட்டு

தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, அ.வாடிப்பட்டி பகுதிகளில் மின்னியக்கி மூலம் தண்ணீர் திருடப்படுவதால் மற்ற பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லும் நிலை தடுக்கப்படுகிறது. தேவதானப்பட்டி அருகே உள்ள வைகை அணைப்பகுதியில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் மூலம் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டப்பகுதிகளில் வேளாண் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கானகாணி(ஏக்கர்) பரப்பளவில் வேளாண்மை நடைபெற்று வருகிறது.   திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நெல், கரும்பு, தக்காளி, கத்திரிக்காய் போன்ற…