தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7

(தோழர் தியாகு எழுதுகிறார் 99: பதிவுகள் தளத்தில் செவ்வி 6 – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 7 இதற்குப் பிற்பாடு தலைமை தொடர்பான கேள்வி வருகிறது. குமுகிய(சோசலிச)ப் புரட்சிக்குப் பாட்டாளி வருக்கம் தலைமை தாங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கருத்தியல் தலைமையாவது வேண்டும். ஆனால் இதற்கு அப்படிக் கிடையாது. இது ஒரு புரட்சிகரச் சனநாயகக் கட்டம் என்பதால் ஒரு பொதுவான புரட்சிகரத் தலைமை வேண்டும். எல்லாச் சக்திகளையும் இணக்கப்படுத்துவதற்குப் புரட்சிகரமான முறையில் ஒன்றுபடுத்துவதற்கு – பொது எதிரிக்கெதிராக இந்த அணிவகுப்பை…

தோழர் தியாகு எழுதுகிறார் 99 : பதிவுகள் தளத்தில் செவ்வி 6

(தோழர் தியாகு எழுதுகிறார் 98: பதிவுகள் தளத்தில் செவ்வி 5 – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 6 யமுனா : பொதுவாக மார்க்குசியத்தின் தேசியம் தொடர்பான அணுகுமுறையை இடித்தாய்வு செய்யும்(விமர்சிக்கும்) போது மார்க்குசியம் இரண்டு விசயங்கள் தொடர்பாக வரலாற்று முறையிலான – அடம்பிடித்த படியிலான தவற்றைச் செய்திருக்கிறது என உரொனாலுடு மங்கு(Ronald Mang) தனது நூலில் குறிப்பிடுகிறார். பெண்கள் தொடர்பான சிக்கலையும் தேசியம் தொடர்பான சிக்கலையும் அணுகிய விதம் அதனது புரட்சிகரத் தன்மைக்கே அவையிரண்டும் சவாலாக உருவாக வேண்டிய சூழலை உருவாக்கி…

தோழர் தியாகு எழுதுகிறார் 98 : பதிவுகள் தளத்தில் செவ்வி 5

(தோழர் தியாகு எழுதுகிறார் 97: பதிவுகள் தளத்தில் செவ்வி 4- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 5 தமிழ்த் தேசியத்தின் ஓர்மையும் பன்மையும் யமுனா:   நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசியம் ஒரு பலப்பண்பாட்டு(மல்ட்டி கல்ச்சுரல்) மன்பதையாக இருக்குமா? தியாகு: இல்லை – ஒரு பகுதி, சிறுபான்மையர் இருப்பர். ஆனால் முதன்மை மன்பதை (main stream) ஒன்று இருக்கும். பலப்பண்பாட்டு குமுகத்தில் முதன்மை மன்பதை (main stream) என்ற ஒன்று இருக்காது. அப்படிப் பார்ப்பது தமிழர் தாயகத்தை மறுப்பதாகும். தமிழர்களின் தாயகம்தான் தமிழ்நாடு  தமிழ்…

தோழர் தியாகு எழுதுகிறார் 97 : பதிவுகள் தளத்தில் செவ்வி 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 96: பதிவுகள் தளத்தில் செவ்வி 3- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 4 அடுத்ததாகத் தேசிய இயக்கத்தில் வரும் இராணுவவாதம் தொடர்பாகப் பார்ப்போம். இராணுவவாதம் என்பது தேசிய விடுதலை இயக்கத்தில் மட்டுமல்ல, குமுகவியத்திலும்( சோசலிசத்திலும்) வந்திருக்கிறது. நிறஒதுக்கலுக்கு எதிரான ஏ.என்.சி.யின்  (ஆப்பிரிக்க தேசியப் பே்ராயம்) போராட்டத்தில் கூட வந்திருக்கிறது. மண்டேலா இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். அரசியல் போராட்டப் பட்டறிவுகளிலிருந்து முதிர்ச்சியடைவதற்கான நீண்ட வாய்ப்பு ஏ.என்.சி.க்கு இருந்தது.  ஆனால் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு அம்மாதிரிப் பட்டறிவுகள் இல்லை. நிரம்பவும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 96 : பதிவுகள் தளத்தில் செவ்வி 3

(தோழர் தியாகு எழுதுகிறார் 95: பதிவுகள் தளத்தில் செவ்வி .1- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி3 தமிழ் மன்பதையைப் பொறுத்த வரைக்கும் – நமக்கிருக்கிற ஒரே சிக்கல் தில்லி அல்ல. அது சிக்கல்களில் ஒன்று. அரசியல் அதிகாரம் அங்கே இருப்பதனால் உடனடியான அரசியலில் அதை அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிக்கல் அத்தோடு முடிவதல்ல. நமக்கு இங்கே நமக்குள் இருக்கிற சிக்கல் முக்கியமானது. நமது தேசிய வளர்ச்சிக்கான தடைகள் – நமது தேசியச் சந்தை உருவாவதற்கான தடைகள் – குடிநாயக உறவுகளுக்கான தடைகள்…

தோழர் தியாகு எழுதுகிறார் 95 : பதிவுகள் தளத்தில் செவ்வி 2

(தோழர் தியாகு எழுதுகிறார் 94: பதிவுகள் தளத்தில் செவ்வி .1- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 2 அப்படியான நிலை வரும் போது இந்தக் குறிப்பிட்ட வரையறைக்கு வெளியில் இருக்கிற அனைவருமே அன்னியர்களாகப் பாரக்கப்படுவார்கள். மற்றவர்கள் அல்லது அடையாளமற்றவர்கள் எனும் அளவிலேயே பார்க்கப்படுவார்கள். இவ்வாறான தருணங்களில் தனிநிலையை(‘எக்சுக்ளூசிவி’டியை)க் கோருவதால் மற்றவர்களையும் விளிம்புநிலையில் இருக்கிறவர்களையும் அழிக்கத் தேசியவாதிகள் நினைப்பார்கள். இன்றைய தேசியம் குறித்த உரையாடல்களில் இதை இனச்சுத்திகரிப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஈழத்திலும் முசுலீம் மக்களின் பாலான விலக்கம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகி வருகிறது….

தோழர் தியாகு எழுதுகிறார் 94  : பதிவுகள் தளத்தில் செவ்வி .1

(தோழர் தியாகு எழுதுகிறார் 93 : இறையூர் இழிவு – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 1 உங்களில் தோழர் யமுனா இராசேந்திரனைப் பற்றி அறியாதவர்கள் இருத்தல் அரிதே.2000ஆம் ஆண்டு நான் இலண்டன் சென்றிருந்த போது அவர்தாம் என்னை ஐகேட்டு கல்லறைக்கு(Highgate Cemetery) அழைத்துச் சென்று “இதோ உங்களவர், போய்க் கொஞ்சுங்கள்”என்று காரல் மார்க்குசிடம் கொண்டுபோய் விட்டு சுட்டுத் தள்ளியவர். 2003ஆம் ஆண்டு யமுனா சென்னை வந்திருந்த போது என்னிடம் ஒரு நீண்ட செவ்வி கண்டார். இனிய நண்பர் விசுவும் துணைக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 93  : இறையூர் இழிவு

(தோழர் தியாகு எழுதுகிறார் 92 :மறதிச் சேற்றில் புதைந்து போகாமல் – தொடர்ச்சி) இறையூர் இழிவு இனிய அன்பர்களே! சிபி வினவுகிறார்: இறையூர் பட்டியலினத்தவர் பகுதியிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வினைக் குறித்துத் தங்களின் கருத்தென்ன தோழர்? கண்டிக்கிறேன், வேதனைப்படுகிறேன், இந்த இழிசெயல் புரிந்த தமிழ்க் குமுகத்தில் நானும் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். இதெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. திண்ணியம் கொடுமை பற்றியும் அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும் அந்த நேரத்தில் தமிழ்த் தேசம் திங்களேட்டில் நான் எழுதிய கட்டுரையை விரைவில் தாழியில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 92  :  மறதிச் சேற்றில் புதைந்து போகாமல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா? தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் இனிய அன்பர்களே! மறக்க முயன்றாலும் மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழினத்தின் கூட்டு உளச்சான்றில் மாறா வடுவாய்ப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காக மட்டுமன்று, அப்படி ஒரு கொடுமை நடந்து விடாமல் தடுக்க தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும் புலம்பெயர் தமிழுலகும் உலகத் தமிழர்களும் நடத்திய உணர்வார்ந்த போராட்டங்களும் மறக்கவியலாதவை. மறக்கக் கூடாதவை. அந்த மறவா நிகழ்வுகளில் ஒன்று 2009 பிப்பிரவரி 19ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை நடத்திய கொடுந்தாக்குதல். அந்தத் தாக்குதலில் மண்டையுடைந்து குருதி…

தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?) தொடர்ச்சி) இழிதொழில்புனிதமா? காந்தியார் துப்புரவுத் தொழிலாளர்களை இந்தச் சமூகத்தின் தாய் என்று வண்ணித்தார். குழந்தைக்கு அன்னை செய்யும் கடமைகளை அவர்கள் செய்வதாகச் சிறப்பித்துச் சொன்னார். காந்தியார் நிறுவி நடத்திய ஆசிரமங்களில் அனைவரும் தமது கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். காந்தியார் தன்னை ஒரு பங்கி என்று சொல்லிக் கொண்டார். பங்கிதான் தோட்டி என்பது போல்மலம் அள்ளும் தொழிலாளி. ஒரு முறை அம்பேத்துகருடன் உரையாடும் போது காந்தி சொன்னார்: “அடுத்த பிறவியில் மலம் அள்ளும் தொழிலாளியாகப் பிறக்க விரும்புகிறேன்.”  அம்பேத்துகர்சொன்னார்: “இந்த…

தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?)

(தோழர் தியாகு எழுதுகிறார் 89 தொடர்ச்சி) காந்தி(யார்?) இனிய அன்பர்களே! என் அக்காள் பெயர் காந்திமதி. மற்றபடி எல்லாக் குழந்தைகளுக்கும் மகாத்துமா குறித்து என்ன சொல்லப்படுமோ அதுதான் எனக்கும் சொல்லப்பட்டது. தனியாக காந்திபக்தி அல்லது காந்திப்பற்று என்று எதுவும் எனக்கு எப்போதும் இருந்ததாக நினைவில்லை. அப்பாவுக்கு நண்பர்களாக இருந்த சில பெருந்தனக்காரர்கள் அவர்களின் அலங்கம் போன்ற அரண்மனைகளில் (இது அம்மாவின் வருணனை) பெரிய காந்தி படங்களை மாட்டி வைத்திருந்ததும் கூட காந்தி தொடர்பான என்அசிரத்தைக்குக் காரணமாக இருக்கலாம். நண்பர் அமீர்சானுடன் பழகி அவர் மதித்தவர்களில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 89 : கெட்ட போரிடும் உலகு!

(தோழர் தியாகு எழுதுகிறார் 88 தொடர்ச்சி) கெட்ட போரிடும் உலகு! இனிய அன்பர்களே! வீட்டிலிருந்த வரை புத்தாண்டு நாளில் ஒரே ஒரு சிறப்புதான்! அது அப்பா சொல்லும் சிரிப்புத் துணுக்கு. வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு எங்களை எழுப்பி விடும் போது அப்பா சொல்வார்கள்: “ஏய்! எழுந்திரு! போன ஆண்டு படுத்தது. அடுத்த ஆண்டே வந்தாச்சு. ஒரு வருசம் தூங்கியாச்சு. போதும் எழுந்திருங்கடா!” இதோ தாழியில் ஆண்டுக் கடைசி நாள், முதல் நாள் என்ற வேறுபாடு எதுவுமில்லை. கருத்துப் போர்க்களத்தில் இது என்…