தோழர் தியாகு எழுதுகிறார் 88 : காந்தி
(தோழர் தியாகு எழுதுகிறார் 87 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மார்க்குசிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் வெளியிடப்படுகிறது. பல ஆண்டுகளாகவே ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலரில் தவறாமல் என் கட்டுரை இடம்பெறும். வழக்கமாகத் தோழர் ஆனைமுத்து எனக்கான தலைப்பைச் சொல்வார். அவர் போய் விட்டார். அவருடன் பணியாற்றிய பாவலர் தமிழேந்தியும் போய் விட்டார். அவர்களிடத்தில் தோழர்கள் வாலாசா வல்லவனும் முகிலனும் மற்றவர்களும் தொடர்ந்து உழைக்கின்றார்கள். ‘சிந்தனையாளன்’ தொடர்ந்து வருகிறது. இவ்வாண்டு பொங்கல் மலரில் எனக்குச் “சாதியத்தை எதிர்ப்பதில் காந்தி-அம்பேத்கர் முரண்”…
தோழர் தியாகு எழுதுகிறார் 87 – வாலாசா வல்லவன் பகிரும் திருக்குறளைப் போற்றும் பெரியார் 2/2
(தோழர் தியாகு எழுதுகிறார் 86 தொடர்ச்சி) பெரியாரும் திருக்குறளும் 2/2 அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார் ஆனால், குறளில் அப்படிப்பட்ட அதிசயம் ஒன்றையுங் கூறாவிட்டாலும் திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்கா விட்டாலும் – அவருடைய பிறப்புப் பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள். வள்ளுவரின் தாயை ஒரு விபச்சாரியாகக் கற்பனை செய்து விட்டான். வள்ளுவர் பிறப்பைப் பற்றி எழுதும் போது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம் என்னவென்றால் – குறளைப் போன்ற நீதி நெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப் போதிக்கத்தக்க தகுதியும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 86: வாலாசா வல்லவன் பகிரும் திருக்குறளைப் போற்றும் பெரியார்
(தோழர் தியாகு எழுதுகிறார் 85 தொடர்ச்சி) பெரியாரும் திருக்குறளும் 1/2 அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார் இன்று காலை பெ.ம.வின் அடிப்பொடி கதிர்நிலவன் “பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார், இதோ பார் ஆதாரம் என்று காட்டுவதற்காக ஒரே ஒரு பத்தியை மட்டும் எடுத்துப் பதிவிட்டிருந்தார். முழுமையாகப் பதிவிடும்படி கேட்டேன். அவர் பதியவில்லை. ஆனைமுத்து ஐயா தொகுத்த பெரியார் சிந்தனைகள் நூலிலிருந்து முழுமையாகப் பதிவிட்டுள்ளேன். “குறளும் – நானும்” பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம். வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 85
(தோழர் தியாகு எழுதுகிறார் 84 தொடர்ச்சி) அருளியார்: எப்போதும் என்னுடன்! அருளியாருடன் உரையாடி முடித்து விடைபெறும் போது “விடாப்பிடியாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள், நீங்கள் அப்படிச் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார். சிரித்துக் கொண்டே “நாம் செய்வோம்” என்று சொல்லி விடைபெற்றேன். அவர் முதன்முதலாக இப்படிச் சொன்னதை நான் மறக்கவில்லை, அவரும் மறக்கவில்லை. 1986-87-88? சரியாக நினைவில்லை. தஞ்சாவூரில் என் கல்லூரிக் கால ஆங்கிலப் பேராசிரியர் சேசாத்திரி அவர்களைப் பார்க்க நண்பர் மோகன் (அமரன்) என்னை அழைத்துப் போயிருந்தார். கிட்டத்தட்ட இருபது ஆண்டு…
தோழர் தியாகு எழுதுகிறார் 84: தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 83 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (9) தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா? இனிய அன்பர்களே! நவ தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்பதிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது நினைவிருக்கும். நவ தாராளவாதம் வேண்டா என்று தொடக்கத்திலேயே தள்ளி விட்டோம். அதுதான் வேண்டும் என்றோ, அதுவே இருக்கட்டும் என்றோ யாரும் கட்சி கட்டவில்லை. ‘நவ’ என்பது புது எனப் பொருள் தரும். கலைச் சொல்லாக்கத்தில் பாதி தமிழாகவும் பாதி வேற்று மொழியாகவும் இருக்கலாகாது. நவ என்ற வடமொழிச் சொல்லை தாராளம் என்ற தமிழ்ச்சொல்லோடு சேர்க்க…
தோழர் தியாகு எழுதுகிறார் 83: இன ஒதுக்கல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 82: கடற்கோள் நினைவுகள் தொடர்ச்சி) “இது துயருற்ற மக்களுக்கு எதிரான விலக்கல்! இன ஒதுக்கல்!!” இனிய அன்பர்களே! ‘பொருளியலில் நலிந்த பிரிவினர்’ (பொநபி) என்று சொல்லி இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்பு 103ஆம் திருத்தச் சட்டம் செல்லுமா? என்ற வழக்கில் செல்லாது என்று சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய நீதியர் எசு. இரவீந்திர பட்டு அவர்களது தீர்ப்பினைச் சுருக்கித் தமிழாக்கம் செய்யும் வேலையை ஒருவழியாக முடித்துள்ளேன். இந்தத் தீர்ப்பின் சில பகுதிகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் முன்பே உங்கள் பார்வைக்குப் படைத்திருந்தேன். சட்ட நோக்கிலும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 82: கடற்கோள் நினைவுகள்
(தோழர்தியாகுஎழுதுகிறார் 81 தொடர்ச்சி) கடற்கோள் நினைவுகள் இனிய அன்பர்களே! அன்பர் இயூபருட்டு நேற்று முதல் வேலையாகக் கடற்கோளை(ஆழிப் பேரலையை) நினைவு கூர்ந்து எழுதியிருந்தார். பதினெட்டாண்டு முன்பு கடந்த 2004 திசம்பர் 26ஆம் நாள் ஊருக்குள் கடல் நுழைந்து உயிர்களைச் சுருட்டிச் சென்ற அந்த நாளை எண்ணிப் பார்க்கிறேன். என் சொந்த நினைவுகள் சுருக்கமாக: திசம்பர் 26 மாலை திருவாரூரில் தமிழர் தன்மானப் பேரவை சார்பில் தந்தை பெரியார் நினைவுக் கருத்தரங்கம் – அதில் தோழர் ஏ.சி.கே.யுடன் நானும் பேச வேண்டும். தோழர் காமராசுதான் நிகழ்ச்சியை ஒழுங்கு…
தோழர் தியாகு எழுதுகிறார் 81: வெண்மணியும் பெரியாரும் 2
(தோழர்தியாகுஎழுதுகிறார் 80 தொடர்ச்சி) வெண்மணியும் பெரியாரும் 2 திமுக ஆட்சி இந்தச் சம்பவத்தை எப்படி எதிர்கொண்டது? அண்ணாவால் இந்தச் சம்பவத்தை நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது. இது அவருக்குத் தெரிந்து நடந்தது என்றோ அவர் காவல்துறையை அனுப்பினார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் “உழவர் காவல்துறை” ஆரம்பிக்கப்பட்டது. ஒருமுறை சட்ட மன்றத்தில் அண்ணா பேசும்போது, “உங்கள் தோழர்களில் சிலர் “பகலில் மார்க்குசியர்கள், இரவில் நக்சலையர்கள்” என்றே சொல்லியிருக்கிறார். வேளாண் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏ.சி.கே., மீனாட்சிசுந்தரம் போன்றவர்களைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார். தொழிலாளர்களின் சார்பாக…
தோழர் தியாகு எழுதுகிறார் 80: வெண்மணியும் பெரியாரும் 1
(தோழர் தியாகு எழுதுகிறார் 79 தொடர்ச்சி) வெண்மணியும் பெரியாரும் 1 கீழவெண்மணி குறித்துப் பெரியார் மேல் எனக்கே குற்றாய்வுகள் உண்டு. பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஆனால் சுயசாதிப் பற்று என்பது இழிவான அவதூறு. பெரியாரைக் கனவிலும் அப்படி எண்ணிப் பார்க்க முடியாது. 2017 திசம்பரில் ‘இந்து’ தமிழ் ஏட்டுக்கு வெண்மணி குறித்து நான் தந்த செவ்வியிலேயே பெரியார் பற்றிய குற்றாய்வு உள்ளது. இதோ அந்தப் பேட்டி:— “வெண்மணி வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல!” – தியாகு பேட்டி வெண்மணி படுகொலைச் சம்பவத்தின் காரணமாகக், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்…
தோழர் தியாகு எழுதுகிறார் 79 : இலெனின் சுப்பையா
(தோழர்தியாகுஎழுதுகிறார் 78 தொடர்ச்சி) இலெனின் சுப்பையா என்று சொன்னால் எங்கள் விடுதலைக் குரல் என்று சொல்வோம்! 1985 நவம்பர்க் கடைசியில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த நேரம் நண்பராகக் கிடைத்த இளம் வழக்கறிஞர் திரு இராசுகுமார். சட்ட சமூக ஆராய்ச்சி மையம் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருக்காக மொழிபெயர்ப்பு போன்ற சிலவற்றில் உதவுவேன். சிறைப்பட்டோர் விடுதலை தொடர்பான சில வழக்குகளை அவரிடம் கொடுத்து நடத்தச் சொல்வேன். இராசுகுமார் வழியாக எனக்கு அறிமுகமானவர்தான் தோழர் இலெனின் சுப்பையா. சென்னையிலும் புதுவையிலும் மனிதவுரிமை தொடர்பான நிகழ்வுகளில் பாடுவார். அவை கருத்துச் செறிவுமிக்க பாடல்களாக இருக்கும். அவரே பாடல்…
தோழர் தியாகு எழுதுகிறார் 78: இலெனினைப் படிப்போம்!; பயில்வோம்!
(தோழர்தியாகுஎழுதுகிறார் 77 தொடர்ச்சி) இலெனினைப் படிப்போம்! இலெனினைப் பயில்வோம்! இலெனின் தேசத் தன்-தீர்வுரிமை குறித்து என்ன எழுதினார், எப்படி விளக்கினார் என்பதையெல்லாம் விரிவாகப் பார்ப்பது கதிரவனுக்காகவே அன்று. அக்கறை கொண்ட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பாட்டாளி வகுப்பின் நலன் பற்றிப் பேசிக் கொண்டே தேசிய இனச் சிக்கலில் இந்திய ஆளும் வகுப்பின் ஒடுக்குமுறைக் கொள்கைக்கு வால் பிடிக்கும் பாரத பக்த இடதுசாரிகள் எப்படியெல்லாம் இலெனினைத் திரிக்கின்றார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இடதுசாரிகள் இலெனினுக்குச் சிலை வைக்கிறார்கள் என்று செய்தி வந்த…
தோழர் தியாகு எழுதுகிறார் 77 : வெண்மணி ஈகியர்க்குச் செவ்வணக்கம்!
(தோழர்தியாகுஎழுதுகிறார் 76 தொடர்ச்சி) வெண்மணி ஈகியர்க்குச் செவ்வணக்கம்! இனிய அன்பர்களே! நெருக்கடிநிலைக் காலத்தில் திருச்சிராப்பள்ளி நடுவண் சிறையில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணுகைச் சட்ட(மிசா) கைதியாகத் தோழர் இடும்பையனைச் சந்தித்தோம். சிறந்த பாடகர். கட்சி மேடைகளில் பாடிப் புகழ் பெற்றவர். தோழர் ஏசிகே அவர்களுடன் பணியாற்றியவர் என்ற முறையிலும் அவர் மீது தனி அன்பு வைத்திருந்தோம். இடும்பையன் பாடிய படல்களில் முகன்மையான ஒன்று வெண்மணி பற்றியது. அவர் பாடக் கேட்டாலே கண்ணீர் வரக் கூடிய உணர்ச்சிப் பாடல். அவரும் பாடிக் கொண்டே அழுது விடுவார். மீண்டும் மீண்டும் பாடச்…
