நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே! அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. பொருள்: அறுசுவை உணவை மனைவி அன்புடன் உண்பிக்க, ஒவ்வொரு வகை உணவிலும் மீண்டும் கைப்பிடி அளவேனும் உணவு வேண்டா என்னும் அளவில்சுவையாக நிறைவாக உண்ணும் செல்வரும் வறுமையுற்று ஒரு காலத்தில் இரந்து உண்ண நேரும். எனவே, செல்வத்தை நிலையானதாகக் கருதற்க. சொல் விளக்கம்: அறு சுவை=அறுவகை சுவையாகிய; உண்டி=உணவை; அமர்ந்து=விரும்பி; இல்லாள்=மனைவி; ஊட்ட=ஊட்டிவிட; மறு=மறுக்கப்பட்ட;சிகை=வன்மையான உணவு…

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக!  வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன்? வேலூரில்  தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர்….

நாலடியார் -சில குறிப்புகள்: எட்டாவது கூட்டம்

தை 17, 2050 / 31.01.2019 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம்,7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை,  சென்னை சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்துஅசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சமும் நண்பர்கள் வட்டமும்  இணைந்து நடத்தும் எட்டாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ. வெ. சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய

விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம்

  மார்கழி 12, 2049 / 27.12.2018 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை, சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து அசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ வே சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய    

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1 தொடர்ச்சி) திருவள்ளுவர்  2. தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால். அவர் தமக்கு வள்ளுவர் நீண்டகாலத்துக்கு முற்பட்டவராகவும். அவரறநூலின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப்பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம் :- இடுக்கண்கால் கொன்றிட விழு மடுத்தூன்றும் நல்லா ளிலாத குடி. (1030) தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன ஓங்குகுல நையவத னுட்பிறந்த…

தமிழின்பம் தனி இன்பம் 2/3 – கவியரசர் முடியரசன்

(தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன் தொடர்ச்சி)  தமிழின்பம் தனி இன்பம் 2/3     நாலடியாரும் இவ்வின்பத்துக்கு நல்லதொரு சான்று நவில் கின்றது. மேலுலக இன்பம் சிறந்ததா? தமிழின்பம் சிறந்ததா? என்றால் தமிழின்பம்தான் சிறந்தது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது. உலக மக்களெல்லாம் மேலுலக இன்பந்தான் சிறந்தது என்பரே என்றால், தமிழின்பத்தினும் அது இனியது என்றால் மேலுலக இன்பத்தைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று விடை தருகிறது நாலடி. குற்றமற்ற நூற்கேள்வி உடையவரும் தம்முடை பகை யில்லாத வரும் கூர்த்த மதியினரும் ஆகிய தமிழ்ச்…

ஏறுதழுவல் அன்றும் இன்றும் – சுப.வேல்முருகன்

ஏறுதழுவல் அன்றும் இன்றும்   பழந்தமிழர் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இக்கருத்திற்கேற்ப பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது; இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும் புலப்படுத்துகிறது.   கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு வீரன் அடக்கும் செயல் ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை வலியடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை ‘ஏறுகோடல்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ஏற்றினை அடக்கும் போது அதனால் ஏற்படும் இடர்களுக்கு அஞ்சாது அதன் மீது பாய்ந்தேறி அடக்குவதினால் இச்செயல்…

எண்ணியதை முடிக்க அருள்க! – நாலடியார்

வான் இடு வில்லின் வரவு அறியா, வன்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை, யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும் “எம் உள்ளத்து முன்னியலை முடிக!” என்று – நாலடியார், கடவுள் வாழ்த்து