பூங்கொடி 19 – கவிஞர் முடியரசன்: படிப்பகம் புக்க காதை

(பூங்கொடி 18 – கவிஞர் முடியரசன்: இருவகைப் பூங்கா – தொடர்ச்சி) பூங்கொடி 4. படிப்பகம் புக்க காதை இயற்கைக் காட்சிகள் நங்கையும் தோழியும் களிமலர்ச் சோலையுள் தங்கிய எழில்எலாம் தனித்தனி கண்டனர்; தாமரைக் காட்சி செங்கதிர்ச் செல்வன் வெங்கதிர் புகுதாப் பொங்கிய நிழல்செறி பூம்பொழிற் கயத்துள் அடுத்தஓர் இரவலன் அகக்குறிப் புணர்ந்து    5 கொடுத்தலால் மகிழ்ச்சி கூர்முகம் நோக்கி மகிழ்வால் விரியும் வள்ளல் மனம்போல் அகவிதழ் முறுக்கவிழ்ந் தலர்ந்த தாமரை இலைசூழ் மலர்கள் எழிலினைப் பாராய்! ஊடல் கொண்ட ஒண்டொடி முகம்போல்     10…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 881-891 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட  மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 892. Cricket        –            துடுப்பு ஆட்டம் 893. Hockey      –            வளைகழி ஆட்டம் 894. Rugby          –            பிடி பந்தாட்டம் 895. Basket Bal l-          கூடைப் பந்தாட்டம் கேம்சு என்ற பகுதியில் துடுப்பு ஆட்டமும் (Cricket) வளைகழி ஆட்டமும் (Hockey), உதை பந்தாட்டமும் (Foot Ball), பிடி பந்தாட்டமும் (Rugby), சல்லடைப் பந்தாட்டமும் (Tennis), கூடைப் பந்தாட்டமும் (Basket Ball) இவை போல்வன பிறவும் அடங்கும். நூல்       …

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 19 : 12 – 14 நாடக சம்பந்தமான நூல்கள்

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 18 : 11. தமிழ் நாடகத்திற்காகத் தான் உழைத்தது-தொடர்ச்சி) 12. நாடக சம்பந்தமான நூல்கள் கீத மஞ்சரி :— நான் எழுதிய நாடகங்களுக்கு நானும் எனது நண்பர்களும் ஆதியில் எழுதிய சில பாட்டுகள் அடங்கியது. இம் முதற் பதிப்பு முற்றிலும் செலவாய் விட்ட போதிலும் இதை இரண்டாவது முறை அச்சிடுவதில்லை என்று தீர்மானித்தேன். இதற்கு முக்கிய காரணம் எனது நாடகங்கள் ஆடும் நடிகர்கள் தாங்கள் ஆடும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மெட்டுகளையுடைய பாட்டுகளை பாட விரும்புவதேயாம். நாடகத்தமிழ் :—…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 57 : அன்பு மயம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 56 : என்ன புண்ணியம் செய்தேனோ! – தொடர்ச்சி) என் சரித்திரம் என் ஆசிரியர் பாடஞ் சொல்லி வரும்போது அங்கங்கே அமைந்துள்ள இலக்கண விசேடங்களை எடுத்துச் சொல்வது வழக்கம். அரிய பதமாக இருந்தால் வேறு நூலிலிருந்து அதற்கு ஆதாரம் காட்டுவார். செய்யுட்களில் எதுகை, மோனைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதைக் கவனிக்கச் செய்வார். கவிஞராகிய அவர் செய்யுள் செய்யப் பழகுபவருக்கு இன்ன இன்ன முட்டுப்பாடுகள் நேருமென்பதை நன்றாக அறிவார். எங்களுக்கு அத்தகைய இடையூறுகள் நீங்கும் வழியைப் போதிப்பார். செய்யுள் இயற்றும் வழி…

தமிழ் வளர்த்த நகரங்கள் 10. – அ. க. நவநீத கிருட்டிணன்: மதுரை கடைச்சங்கம்

(தமிழ் வளர்த்த நகரங்கள் 9 – அ. க. நவநீத கிருட்டிணன்: நாயக்கர் அணிசெய்த மதுரை – தொடர்ச்சி) 6. தமிழ் வளர்த்த மதுரை கடைச்சங்கம் பைந்தமிழை வளர்த்தற்காகப் பாண்டியர் அமைத்த சங்கங்களில் மூன்றாம் சங்கமாகிய கடைச் சங்கம் இன்றைய மதுரையிலேயே இருந்தது. “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” எனவரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் இச்செய்தி வலியுறுவதாகும். இங்குத் ‘தமிழ் நிலை’ யென்று வரும் தொடர் தமிழ் நிலையமாகிய தமிழ்ச் சங்கத்தையே குறிப்பதாகும். இறையனர் களவியல் உரைப் பாயிரத்தால் கடைச்சங்கத்தைப்…

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. ஆ. இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர்.

(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. அ. வள்ளலாரும் சீர்திருத்தமும் – தொடர்ச்சி) இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர் [இராமலிங்க சுவாமிகள் சமாச சார்பில் நிகழ்ந்த வள்ள லார் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை, தொடர்ச்சி, திருவொற்றியூர்] இந்தக் குண்டு (பாம்) வெம்மையற்ற ஓர் இடத்திலே வைக்கப்பெறும். அது ஏவப்பெறின் கூட்டம் கட்டமாகச் செல்லும். சூடுள்ள இடமெல்லாம் சென்று அழிக்கும். அது தண்மை ஊட்டினாலன்றி ஒழியாது. அது வைக்கப்பெறுமிடம் தண்மை உள்ள இடம். அத்தகைய குண்டுகளில் ஒரு நூறு ஏவப்பெறின் உலகம்…

பூங்கொடி 18 – கவிஞர் முடியரசன்: இருவகைப் பூங்கா

(பூங்கொடி 17 – கவிஞர் முடியரசன்: வெருகன் நய வஞ்சகம் – தொடர்ச்சி) பூங்கொடி இருவகைப் பூங்கா மேலும் வடதிசை மேவிய பூங்கா தேளும் பாம்பும் என்னச் செப்பிடும் கொடியவர் செல்லும் கூடம தாகும்;    90 அன்பும் பண்பும் ஆர்ந்தவர் நிறையும் தென்புலப் பொழிற்கே செல்லுதற் குரியள் என்பன கூறி எழுந்துபூங் கொடியொடு காவண மறுகுகள் கடந்துபல் பொருள்பகர் ஆவண வழியே படர்ந்தன ளாக.            95 கண்டோர் கவலை வழியிற் காண்போர் விழிவாங் காமல் ‘எழில்நிறை யிவளை இல்லறப் படுத்தா தல்லல் நிறைகொண் டாற்றுப்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 881-891

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 865-880 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 881-891 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு.கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட  மொழிமாற்றச் சொற்களைத்  (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 881.பாதம்             –              கால் 882. அக்னி கார்யம்            –              எரி ஓம்பல் 883. கங்கண விஸர்ஜன்    –              காப்பு களைதல் 884. ஸ்தம்ப ப்ரதிஷ்டை  –              பந்தல் கால் 885. ச(ஸ)ந்யாசம்     –              துறவு 886. த்ரிபதார்த்தம்              –              முப்பொருள் 887. விவாக(ஹ) மகோ(ஹோ)த்ச(ஸ)வம்        –              திருமணம் 888. ஸ்திரீ             –              மாது 889. கனகாம்பரண்            –              பொன்நகை நூல்        :               மோசூர்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 18 : 11. தமிழ் நாடகத்திற்காகத் தான் உழைத்தது

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 17 : நான் எந்த கட்சியையும் சேராதது – தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ அத்தியாயம் 11. தமிழ் நாடகத்திற்காகத்தான் உழைத்தது 1891 முதல் 1936 வரையில் நான் தமிழ் நாடகங்களை எழுதி அவற்றில் நடித்து உழைத்து வந்த சரிதையை “நாடகமேடை நினைவுகள்” என்னும் புத்தகத்தில் மிகவும் விவரமாக எழுதி அச்சிட்டுள்ளேன். ஆகவே அவற்றைப் பற்றி மறுபடியும் இங்கு எழுதுவேனாயின் கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கு உள்ளாவேன் என்று அஞ்சி இங்கு எழுதாது விடுத்தேன். அவறறைப் பற்றி பல விசயங்களை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 56 : என்ன புண்ணியம் செய்தேனோ!

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 55 : தளிரால் கிடைத்த தயை – தொடர்ச்சி) என் சரித்திரம் திருக்குடந்தைத்திரிபந்தாதியை இரண்டே தினங்களில் நான் பாடங்கேட்டு முடித்தேன். அப்போது என் ஆசிரியர் ஏடுவாரிச் சுவடி சேர்த்துக் கொடுத்தார்; ஒரு வாரெழுத்தாணியையும் அளித்து அந்நூலைப் பிரதி செய்துகொள்ளும்படி சொன்னார்; அச்சுப் புத்தகங்கள் மிக அருமையாக அகப்படும் அக்காலத்தில் நான் பாடங்கேட்ட புத்தகங்களிற் பெரும்பாலானவற்றை ஏட்டிலே எழுதிப் படித்தேன். இப்பழக்கத்தால் ஏட்டில் விரைவாகவும் தெளிவாகவும் எழுதும் வழக்கம் எனக்கு உண்டாயிற்று. நான் பாடங்கேட்டபோது சவேரிநாத பிள்ளையும், கனகசபை ஐயரென்னும் வீரசைவரும்,…

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. அ. வள்ளலாரும் சீர்திருத்தமும்

(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும் – தொடர்ச்சி) 3. வள்ளலாரும் சீர்திருத்தமும் [இராமலிங்க சுவாமிகள் சமாச சார்பில் நிகழ்ந்த வள்ள லார் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை. திருவொற்றியூர்] சகோதரிகளே! சகோதரர்களே!!   யான் இப்பொழுது பல அழைப்புகளை மறுத்து வருகிறேன். ஆனால் இந்த இராமலிங்க சுவாமிகள் சமாசத்தார் அழைப்புக்கு மட்டும் இணங்கினேன். இச் சமாசம் காலஞ்சென்ற தலைவர் கா. இரா. நமச்சிவாய முதலியாரின் உடன் பிறந்தார் திரு. கா. இரா. மாணிக்க முதலியார் தலைமையில் நடைபெறுவது. இத்தலைமை…

பூங்கொடி 17 – கவிஞர் முடியரசன்: வெருகன் நய வஞ்சகம்

(பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கா புக்க காதை வெருகன் நய வஞ்சகம் நீறுறு நெற்றியன் நிகரிலாச் செல்வன் ஏறெனப் பொலிவுறும் இளைஞன் அழகன் காண்போர் மயங்கும் காட்சியன் உலகில்அவ்     70 ஆண்போல் ஒருவனைக் காணுதல் அரிது பிறர்மனங் கவரப் பேசும் வன்மையன் அறமுறு செயலே ஆற்றுவான் போல எண்ணும் வகையில் இருப்பவன் வெருகன் நண்ணி என்னை நயவஞ் சகமாக் கடத்திச் சென்றான் கதறியும் பயனிலை விடலை தமியளை  விழ்ந்திடச் செய்தனன்; அவன்மொழி நம்பி அவன்வழிப்…