மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  66

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 65 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 24 பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்தமேம்பால் திசைப்பெண் புலம்பறுமாலை      — திருவிருத்தம் இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது (இ)ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று. இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப் போல் இயல்பாகவே தங்களிடம் உள்ள நேர்மைக் குறைவால், அதைத் தாங்கள் பிறரிடம் காட்டும்போது பெரிதாக்கிக் காட்டி வாழ்கிறவர்கள் சிலர் சமூகத்தில் உண்டு. அகவாழ்வில் கொடுமையே உருவானவராய்த் தெரியும்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்துதாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மைஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார். தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ளஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறிஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார். என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்தவென்றுகொடு வந்தவெறி வேழமது தந்துநன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார். மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்பாணரொடு கூடவரு பாடினியர்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 346-354

(தமிழ்ச்சொல்லாக்கம்: 345 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 346-354 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 346. Tamil Cyclopedia – தமிழ்க் களஞ்சியம் தமிழ்க்களஞ்சியம் (Tamil cyclopedia) இப்பெயர் கொண்ட நூலொன்று மாத சஞ்சிகையாக வெளிவருகிறது. பகுதி ஒன்று வெளி…

உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4

(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 1/4 தொடர்ச்சி) என் சரித்திரம் மகாமகோபாத்தியாய முனைவர் உ. வே. சாமிநாதர் அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4 இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகசுதர்கள்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 345

(தமிழ்ச்சொல்லாக்கம்: 342 – 344 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 345 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)  345. கலியாண சுந்தரம் – மணவழகு 1917இல் திசம்பர் மாதம் 24உ செம்பியத்தில் கூடிய மகாசமாசக் கூட்டத்தில் நடந்த தீர்மானங்கள். 1. இவ்வருடத்து அறிக்கைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது. 2. சிரீமான் – கி – குப்புச்சாமி முதலியார் அவர்கள் ஐந்து வருடமாகப் புரிந்த உதவிக்காக சமாசம் நன்றி பாராட்டுகின்றது. சபைத்தலைவர்            :           சித்தாந்த சரபம் – அட்டாவதானம் சிவபிரீ – கலியாண கந்தர யதீந்திர சுவாமிகள், சென்னை உதவி…

அறிஞர் அண்ணாவின்  ஏ, தாழ்ந்த தமிழகமே! 8/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 7/8 தொடர்ச்சி) [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] கொலை வாளினை எடு அந்தக் காலத்திலே இன்னல் ஏற்பட்டால், ‘இட்ட முடன் என் தலையில் இன்னவாறு என்றெழுதி விட்ட சிவனும் செத்து விட்டானோ. முட்டப் பஞ்சமே வந்தாலும் பாரமவனுக்கே’ என்று பாரம் பழிகளை ‘அவன்’ மேல் சுமத்தினார்கள்; பதிலை எதிர்பார்க்காமல் இடைக்காலத்தில், ‘கேட்டவரம் அளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்,…

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 : ஓய்வுக் காலப் பணி

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 3/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ்  1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 4/4 பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தமிழ் நூற்பதிப்பிலேயே தம் காலத்தை ஐயரவர்கள் கழித்து வந்தார். தம் வாழ்நாள் அனுபவங்களை விரிவான உரை நடையில் எழுதத் தொடங்கினார். பல பத்திரிகைகளின் மலருக்குக் கட்டுரைகள் வழங்கினார். கலைமகளில் மாதந் தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தார். அவர் கட்டுரைகளில் தமிழ் மக்களின் பழம் பெருமையையும் புலவர் பெருமக்களின் வரலாறுகளையும் பண்புகளையும் விளக்கி…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 தொடர்ச்சி) 1. மொழியின் சிறப்பு  தொடர்ச்சி   “அம்மா” என்று, மக்களுடன் நெருங்கிப் பழகும் விலங்குகளாம் பசுவும் எருமையும் ஆடும் கூப்பிடக் காண்கின்றோம். தமிழில்தான் அம்மா எனும் சொல் முழு உருவுடன் ஒலிக்கப்படுகின்றது. ஆதலின் தமிழே இயற்கையை ஒட்டி எழுந்த உலக முதன்மொழியென்று கூறுதல் சாலும்.   கடலிடையிட்டும் காடிடையிட்டும் மலையிடையிட்டும் வாழ நேர்ந்த காரணத்தால் ஒரு கூட்டத்தினர்க்கும் இன்னொரு கூட்டத்தினர்க்கும் தொடர்பின்றி அவரவர் போக்கில் கருத்தை அறிவிக்கும் மொழியாம் கருவியை உருவாக்கிக் கொண்டனர் மக்கள்.   பேச்சுமொழியை…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 342 – 344

(தமிழ்ச்சொல்லாக்கம்: 340 – 341 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 342-344 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 342. நவநீதகிருட்டிணன் – வெண்ணெய்க்கண்ணன் இது மகா-ள-ள-சிரீ பிரசங்க வித்துவான் நவநீதகிருட்டிண பாரதியென்றும் கண்ணபுரத்துக் கவுணிய வெண்ணெய்க் கண்ணனார் இயற்றியது. நூல்      :           சத்திய அரிச்சந்திரப் பா (1916 பக்கம் – 4. நூலாசிரியர்      :           மதுரை, தல்லாகுளம் சி. முத்திருள முதலியார். நூலைப் பரிசோதித்தவர் :           பிரசங்க வித்துவான் நவநீத கிருட்டிண பாரதியார். ★ 343. தரித்திரம் – நல்கூர்வார் இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 11

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 10 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்திலே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேட்டையின் அடையாளங்கள், கன்னத்தில் வடுக்களாகத் தெரிந் தனவேயன்றி, முகம் மலர்ச்சியாகத் தெரியவில்லை. கண் திறந்தாள் ; புதியதோர் இடமாகத் தோன்றிற்று. திகைப்புடன் பார்த்தாள், செட்டியார் மீது சாய்ந்து கொண்டிருப்பதை. “ஐயோ” என்று அலறியபடி எழுந்திருக்கலானாள். செட்டியாரோ, “அன்பே !” என்று கூறி, அவளை மீண்டும் தம் மீது…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  65

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 64 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம்  23 தொடர்ச்சி ‘பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பருமாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துகளுக்கு நான் வாரிசு ஆகப் போகிறேன் என்பதற்காகவா? அடடா; பணமே, உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா‘ என்று எண்ணிக் கொண்டான் அரவிந்தன். பருமாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஓர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 340 – 341

(தமிழ்ச்சொல்லாக்கம்: 333 – 339 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 340-341 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 340. சுவாமி வேதாசலம் – மறைமலை அடிகள் (1916) பொதுநிலைக் கழக மாளிகை அழகிய பூங்காவினாற் சூழப்பெற்றிருந்தது. உள்ளமும் உடலும் நலமுறக் காலையினும் மாலையினும் அடிகளார் தம் அருமருந்தன்ன மகளுடன் உலாவி வருவார். தம் மகளையுந் தம்மைப்போலவே இன்னிசையிலே பயிற்றுவித் திருந்தனர் அடிகள். 1916இல் ஒருநாள் மாலை இராமலிங்க அடிகள் பாடிய, “பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறுந் தாய்மறந்த தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்…