. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. : 3/4

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 2/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ்  1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – 3/4 சேலம் இராமசாமி முதலியார் தூண்டுதலினால் சமண நூலாகிய சிந்தாமணி நூலை ஆராய்ந்தார். சைன சமய உண்மைகளைச் சமணப் புலவர்களிடம் உரையாடித் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவக-சிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குத் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமதிப்பைத் தேடித் தந்தது. சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டும், சிலப்பதிகாரமும், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களும் வெளிவந்தன. புறநானுாறு…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 325- 332

(தமிழ்ச்சொல்லாக்கம்: 321- 324 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 325-332 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 325. விவாகவேசம் – மணக்கோலம் குறமடந்தை – குறச்சிறுமி, (வள்ளி நாயகி) மணக்கோலம் – – விவாகவேசம், மணக்கோலமானவன் செங்கீரை யாடியருள் எனவும், தெய்வங்கள் மணவாளன் செங்கீரை யாடியருள் எனவும் முடித்துக் கொள்க. நூல்      :           முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் (1914), பக்கம் – 26 உரையாசிரியர்  :           காஞ்சி. மகாவித்துவான் இராமசாமி நாயுடு ★ 326. விதூசகன் —        கோமாளி, கோணங்கி 327. உரோகணி           —        உருளி 328. தேசோமயம்       …

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  64

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 63 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 23 தொடர்ச்சி மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 321- 324

(தமிழ்ச்சொல்லாக்கம்: 316- 320 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 321- 324 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) குறிப்பு : கவிஞர் சுரதா அவர்கள் நூல்களிலும் இதழ்களிலும் இடம் பெற்ற மொழி மாற்றச்சொற்களைத்தொகுத்துத்தந்துள்ளார். ஆனால், பின்வரும் பத்திகளில் குறிப்பிட்டனவற்றிற்கான தமிழ்ச்சாெற்கள் குறிப்பிடப்படவில்லை. நூலில் விடுபட்டதா?அல்லது வேறு நோக்கில் சேர்த்துள்ளாரா என்றும் புரியவில்லை. எனினும் நூலில் உள்ளவாறு (கிரந்த எழுத்துகள்மட்டும் நீக்கிக்)கிழே தரப்பட்டுள்ளது. எழுத்துப்பிழைகளாகத் தெரிவனவற்றையும் திருத்தவில்லை. 321. சூரியன், சிருட்டி தெளிந்தருளிய சிரீமது பஞ்சமுக விசுவப்பிரம்மாண்ட பிரம்மிதே சத்ரு சாகர பரியந்தம் தேவப்பிறாம்மனோப்யோ சுயம்பவந்து மாந்தூர் கிண்ணந்தூர்….

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 10

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 9 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி ’சே, கட்டேலே போறவனே?’ என்று கூவிக் கொண்டே, செட்டியார் பிடியிலிருந்து திமிரிக் கொண்டு கிளம்பினாள் குமரி. இதற்குள், ஆடை நெகிழ்ந்து புரண்டிடவே, காலிலே புடவையின் ஒரு முனை சிக்கிக் கொள்ள, இடறிக் கீழே வீழ்ந்தாள். செட்டியார் அவளைத் தூக்கி நிறுத்தினார். அவளுக்கு மேலும் மேலும் மயக்க உணர்ச்சி அதிகரித்தது. எதிர்க் கும் போக்கும் போய்விட்டது. அவளும், அணைப்புக்கு அணைப்பு, முத்தத்துக்கு முத்தம், என்ற முறையில் விளையாடத் தொடங்கினாள்….

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.13 – 1.6.17 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் ஷ வேறு வண்ணம்           18.     ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லா ரில்லை                  பாடுகை யில்லா யில்லை பள்ளியோ செல்லா ரில்லை                  ஆடுகை யில்லா ரில்லை யதன்பயன் கொள்ளா ரில்லை                  நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.           19.     தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை                  தமிழென துயிரின் காப்புத்…

ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 2

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 2 பழங்காலத்தில்‌ தமிழ்‌ நாட்டில்‌ மரம் செறிந்த காடுகள்‌ மலிந்திருந்தன. பண்டைத்‌ தமிழரசர்களாகிய கரிகால்‌ வளவன்‌ முதலியோர்‌ காடு கொன்று நாடாக்கினர்‌ என்று கூறப்படுகின்றது.19 ஆயினும்‌, அந்‌ நாளில்‌ இருந்து அழிபட்ட காடுகளின்‌ தன்மையைச்‌ சில ஊர்ப்பெயர்களால்‌, உணரலாம்‌. இக்காலத்தில்‌ பாடல்‌ பெற்ற தலங்கள்‌ என்று போற்றப்படுகின்ற ஊர்கள்‌ முற்காலத்தில்‌ பெரும்பாலும்‌ வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால்‌ அறியப்படும்‌. சிதம்பரம்‌ ஆதியில்‌ தில்லைவனம்‌; மதுரை கடம்பவனம்‌; திருநெல்வேலி வேணுவனம்‌….

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 316- 320

(தமிழ்ச்சொல்லாக்கம்: 309-315 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 316-320 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 316. அபிமானம் – பற்றுள்ளம் ஆரியம் வேதமுதலியன நிறைந்துள்ள தெய்வமொழி என்று அடிப்படுகின்றமையின், தெலுங்கு முதலியன அதினின்று பிறந்தன எனின் அவ்வம்மொழியார் கனிவு காட்டுதலும், தமிழினின்று அவை பிறந்தனவெனின் முனிவு காட்டுதலும், பற்றுள்ள மேயன்றி முறைமையாகாது. அப்பற்றுள்ளத்தினின்றும் நீங்கி யுண்மை யெதுவென ஆராய்ந்து தெளிதல் வேண்டும். பற்றுள்ளம் – அபிமானம். நூல்   :     மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 34 நூலாசிரியர்    :    மாகறல் கார்த்திகேய முதலியார் ★ 317. கிரகபதி – கோளரசு…

உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை

என் சரித்திரம் சிவமயம்முகவுரை திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்“திருவேயென் செல்வமே தேனே வானோர்        செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்கஉருவேயென் னுறவேயென் னூனே ஊனி        னுள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்றகருவேயென் கற்பகமேகண்ணே கண்ணிற்        கருமணியே மணியாடுபாவாய் காவாய்அருவாய வல்வினை நோயடையா வண்ணம்        ஆவடுதண் டுறையுறையு மமரரேறே.”திருச்சிற்றம்பலம் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு தமிழன்பர் பலர் பாராட்டி வரும்போது எந்தையாரவர்கள் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் திரு மீனாட்சிசுந்தரம் (பிள்ளை)யவர்களை…

அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! 6/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 5/8 தொடர்ச்சி) [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] இருந்தால் என்ன? இறந்தால் என்ன? அதனால்தான் நமது கவி பாரதிதாசன் இந்த உலகத்தைப் பற்றிப் பாடுகிறார். இந்த உலகத்தில் நீ பிறந்தது வாழ; வாழ என்றால் நிம்மதியுடன் வாழ; பிறரைச் சுரண்டாமல் வாழ; பிறரை வஞ்சித்தால்தான் வாழலாம் என்ற எண்ணமில்லாமல் வாழ; சுதந்திரமாய் வாழ என்கிறார். உருதிலே…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 309-315

(தமிழ்ச்சொல்லாக்கம்: 305- 308 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 309-315 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 309-315. ஏழிசை ஒலிகள் 309. ச, சட்சம்         —        மயிலொலி 310. ரி, ரிடபம்       —        எருத்தொலி 311. க, காந்தாரம்            —        யாட்டொலி 312. ம, மத்திமம்   —        கிரவுஞ்சவொலி 313. ப, பஞ்சமம்    —        குயிலொலி 314. த, தைவதம்   —        குதிரையொலி 315. நி, நிடாதம்    —        யானையொலி நூல்   :           மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 15 நூலாசிரியர்         :           மாகறல் கார்த்திகேய முதலியார்…

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.1/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4 ‘நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனால் அப்படியே நின்றுவிடவில்லை; எல்லாருடைய வற்புறுத்தலுக்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது.’(என் சரித்திரம் ; பக்கம் : 221-222)என்று சாமிநாத( ஐய)ரே…