அகல் விளக்கு – மு.வரதராசனார்: 41
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 40. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 17 அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் – வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் – தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 6 தொடர்ச்சி “தரளம் மிடைந்து – ஒளிதவழக் குடைந்து – இருபவளம் பதித்த இதழ்முகிலைப் பிடித்துச் சிறுநெளியைக் கடைந்து – இருசெவியில் திரிந்த குழல்அமுதம் கடைந்து – சுவைஅளவிற் கலந்து – மதன்நுகரப் படைத்த எழில்“ படித்துக் கொண்டே வரும் போது, அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்னநடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுக்குள் மறையாக்…
ஈழத்துப் புதின இலக்கியம் – தொடர்ச்சி:மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 10 அத்தியாயம் 4. புதினத் தொடர்ச்சி தமிழ் நாட்டுப் புதினங்களைவிட ஈழத்துத் தமிழ்ப் புதினங்கள் கூடியளவு சமூகச் சிக்கல்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டன என்று கூறுவோர் கணேசலிங்கனின் புதினங்களைத் தவறாமல் சான்று காட்டுவர். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க புதினங்களை எழுதியவராகிய கணேசலிங்கன், தனது படைப்புகள் அனைத்தையும் தொடர்கதைகளாக அன்றி முழுப் புதினங்களாகவே எழுதினார். இளங்கீரன் போல் இவரும் கருத்துகளுக்கே முதன்மை கொடுப்பர். அதனால் இவரது கதாபாத்திரங்கள் பல அனுபவச் செழுமை குறைந்த, கருத்துகளின்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 40
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 39. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 16 தொடர்ச்சி மாலன் பேசாமல் இருந்தான். மறுபடியும் குறிப்புப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபடி இருந்து எழுந்து சென்றான். சந்திரன் ஒரு வகையில் கெட்டான்; மாலன் மற்றொரு வகையில் குறுக்கு வழிகள் நாடித் தவறான பாதையில் போவதால் கெடுவானோ என்று அவனைப் பற்றியும் அன்று கவலைப்பட்டேன். சூரியனை உலகம் சுற்றுவது முதல் அணுக்களின் சுழற்சிவரையில் பல துறையிலும் விஞ்ஞான அறிவு பெற்று வளரும் கல்லூரி மாணவர்களின் மனப்பான்மையே இப்படி இருந்தால், உலகம் எப்படி முன்னேற…
தந்தை பெரியாரின் பொதுவான சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 24 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 25 4. பொதுவானவை சமூகம் பற்றிய சிந்தனைகளில் பொதுவான சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன். (1) மதுவிலக்கு: (அ) மதுபானத்தால் பொருளாதாரக் கேடு ஏற்படுவதும், அறிவுக்கேடு ஏற்படுவதும் செயற்கையேயொழிய இயற்கையால் அல்ல. (ஆ) பொதுவாக மதுஅருந்துவதையே குற்றம் என்று சொல்லிவிடமுடியாது. கெடுதி உண்டாகும்படியானதும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கேடுவிளைவிக்கும் படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியதாகும். அதைத்தான் நாம் ‘மதுவிலக்கு’ என்பதேயொழிய மதுவையே அடியோடு எப்போதும் யாரும் வெறுக்கவில்லை. (இ) ஓர் இடத்தில் கடைகளை மூடிவிட்டு மற்ற இடத்திற்கு ஓடவிட்டு அவர்களை நாசமாக்குவதும்,…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 6 நிலவைப் பிடித்துச் – சிறுகறைகள் துடைத்துக் – குறுமுறுவல் பதிந்த முகம்,நினைவைப் பதித்து – மனஅலைகள் நிறைத்துச் – சிறுநளினம் தெளித்த விழி பசித்த வயிறும் கொதித்த மனமுமாகப் பூரணி என்னும் பெண் மதுரை நகரத்து நாற்சந்தியில் மயங்கி விழுந்தபோது மங்களேசுவரியம்மாளும், இந்தக் கதையின் வாசகர்களும் தான் அனுதாபப்பட்டு உள்ளம் துடித்தார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று அங்கே அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில் ஓர் இளம் கவியுள்ளமும்…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 17/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி: 17/17 உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும்அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானைஅயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின்உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானைஉயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை (81) தமிழ்நாட்டெல்லை நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லைதென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானைதென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில்இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானைஎதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை (82) முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ்சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானைசென்னை தமிழருக்கே…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 39
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 38. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நான் அடிக்கடி…
ஈழத்துப் புதின இலக்கியம் – தொடர்ச்சி : மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 9 அத்தியாயம் 4. புதினத் தொடர்ச்சி 3) 1930 ஆம் ஆண்டையடுத்து மீண்டும் எண்ணிக்கையில் அதிகமாகக் கற்பனைக் கதைகள் புதினம் என்ற பெயாில் வௌிவரத் தொடங்கின. சமூக நிலைமைகள் எவற்றையும் கவனத்திற் கொள்ளாமல் வெறும் கற்பனாரீதியில் அமைந்த இவை குறிப்பிடத்தக்க நீளமும் உடையனவாயிருந்தன. மக்களிடையே விருத்தியடைந்த வாசிப்புப் பழக்கமும், தினசாிப் பத்திாிகையின் தோற்றமும் இத்தகைய நூல்கள் தோன்ற வழிவகுத்தன எனலாம். இது தொடர்பாக 1931 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரகேசாி பத்திாிகை குறிப்பிடத்தக்கது….
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 5 தொடர்ச்சி “நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேசையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேசை அது. பூரணி தடுமாறினாள்….
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி: 16/17 இன்னும் ஆரியப்பெயரை இயம்பாது பொருள்கட்குநண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டும் அம்மானைநண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டு மென்றிடினேதண்ணீர், சோறு எனும் தமிழைத் தாழ்த்துவதேன் அம்மானைதாழ்த்தியவர் ஆரியராம் தகையிலிகள் அம்மானை (76) தாயில்மொழியாம் தனித்தமிழ்தும் நாட்டிலுறுகோயிலில் நம்தமிழே குலவவேண்டும் அம்மானைகோயிலில் நம்தமிழே குலவவேண்டு மாமாயின்வாயில் வடமொழியின் வாழ்வென்ன அம்மானைசுந்தரரைச் சிவன்தமிழே சொல்லென்றான் அம்மானை (77) ஆங்கிலத்திற் கடிமையாய் அல்லலுற்ற தமிழ்த்தாயைஈங்கினிமேல் தலைமகளாய்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 38
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 37. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. “நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?” என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன ஊர். உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே. ஒருநாள் இரவு தங்கி உறுதி…