புலவர்கள் 3. – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  31 –  தொடர்ச்சி)   இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  32 16. புலவர்கள் (தொடர்ச்சி) அக்காலத் தமிழ்மக்கள் இயலிசை நாடகங்களிலும், நடனங்களிலும் இன்பங் கண்டனர்.  அக்கால நடனம் எவ்வாறு நடந்தது என்பதை இயற்கைக் காட்சியில் இன்புறக் காட்டுகின்றார். இங்கு நடனப் பெண்ணாக மயில் தோன்றுகிறது.  பார்த்து மகிழும் அவையினராக மந்திகள் அமருகின்றன. குழலிசையை இயற்கையில் துளைபட்ட மூங்கிலில் கோடைக்காற்று சென்று எழுப்புகின்றது.  முழவாக அயலில் ஓடும் அருவியின் இன்னிசை  இயம்புகின்றது.  தூம்பு…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 6/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 5/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 6/17   ஏர்திருந்து வளமுடைய இன்தமிழ்நாட் டினில்இன்றுசீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் அம்மானைசீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் என்றிடினச்சீர்திருத்த வழியொன்று செப்பிடுவாய் அம்மானைநாடகத்தால் சீர்திருத்தம் நாட்டவேண்டும் அம்மானை       (26) தமிழர் நாகரிகம் நாகரிகத் தினைப்பெரிதும் நாடுகின்ற இவ்வுலகில்நாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழர் அம்மானைநாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழ ராமாயின்நாகரிகம் எதுவென்று நவின்றிடுவாய் அம்மானைநயமான நற்குணமே நாகரிகம் அம்மானை       (27) விருந்து புறத்திருக்க விலாப்புடைக்க உண்ணாநம்அருந்தமிழ்…

தந்தை பெரியார் சிந்தனைகள் 15: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 14 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 15 (4) பிராமணர்களின் மோசடித்தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டுமக்கள் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டுமானால், உலகத்தில் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பெற்றிருக்கும் மதவுணர்ச்சி வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும். குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வளர்க்கும் பண்டிகைகள் வெறுக்கப் பெறல் வேண்டும். அயோக்கியச் செயல்களுக்கெல்லாம் வளர்ப்புப் பண்ணைகளாயிருந்து மதப்போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடலாயங்கள் எல்லாம்…

புலவர்கள் 2. – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  30 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  31 16. புலவர்கள் (தொடர்ச்சி) தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆய மூவரும் தனிச்சிறப்புடையவர்கள்.  தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே தமிழ் வளர்ப்பதற்கெனச் சங்கம் தோன்றியிருக்க வேண்டும்.  ஆதலின், சங்கக் காலத்துக்கு முற்பட்டவராவார் தொல்காப்பியர்.  தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனவும், திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், இளங்கோ அடிகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளோம்.  சங்கக்காலத்தைக் கி.மு….

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 5/17

  (தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 4/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 5/17   காடுதனில் வாழ்விலங்கும் கல்லும் உருகுவண்ணம்பாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டால் அம்மானைபாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டாம் என்றிடினேபீடுற்ற தமிழிசையின் பெயர்களெங்கே அம்மானைகள்வர் பெயர்மாற்றிக் களவுசெய்தார் அம்மானை       (21) செந்தமிழ்த் தெய்வத்தைச் சிறந்தநம் முன்னோர்கள்பைந்தமிழ்ப் பண்களால் பாடினர்காண் அம்மானைபைந்தமிழ்ப் பண்களால் பாடினரே யாமாகில்இன்தமிழில் இசையில்லை என்பதேன் அம்மானைஎன்பவர் ஆராய்ச்சி யிலாதவரே யம்மானை       (22) ஒருகால் உரைத்தாலும் உவப்பளிக்கும் தமிழிசைகேட்(டு)உருகாத உயிர்ப்பொருளே ஒன்றுமில்லை…

தந்தை பெரியார் சிந்தனைகள் 14: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 13 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 14 2. சமயம் இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டு மக்களிடையே ஏதோ ஒருவகையில் சமயம் நிலவி வருகின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கை ஒழுங்கு பெறவிருக்கும் நன்னெறிகளின் தொகுதியே சமயம் ஆகும். நம் நாட்டில் நிலவும் சமயங்கள்; சைவம், வைணவம், புத்தம், சமணம் என்பவையாகும். நடைமுறையிலுள்ள மதம் அல்லது சமயத்தைப் பற்றிப் பெரியார் கூறுவது. (1) நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடம் மதம் என்னும் சீமைக்காரை (சிமெண்ட்டு) சுண்ணாம்பினால், கடவுள் என்னும் கற்களைக் கொண்டு…

புலவர்கள் 1. – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  29 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  30 16. புலவர்கள்  புலவர்களே நமது மொழியின், பண்பாட்டின், நாகரிகத்தின் புரவலர்கள் ஆவார்கள்.  புலவர் எனும் தமிழ்ச் சொல் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும்.  வெறும் மொழிப் புலமை மட்டும் உடையோர் புலவர் ஆகார்.  மொழிப் புலமையுடன் பண்புநலன் சான்று, ஏதேனும் ஒரு துறையில் வல்லுநராகவும், பிறர்க்கென வாழும் பெற்றியராகவும் இருப்போரே புலவர் எனும் பெயர்க்கு உரியவராவார்.  சங்ககாலப் புலவர்கள் அனைவரும் இவ்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 4/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 3/17 தொடர்ச்சி)  தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 4/17 முத்தமிழ் குயில்மயில்போல் இன்பம் கொடுக்குமொரு மொழியென்றால்இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டும் அம்மானைஇயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டு மாயிடினேபயில்தமிழ்அம் முச்சிறப்பும் படைத்துளதோ அம்மானைசிலப்பதிகா ரத்தில்முச் சிறப்புமுள தம்மானை       (16) இயற்றமிழ் புதுக்கியதேன் சுவைசொட்டும் புகழ்ச்சிமிக்க தமிழதனில்மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள அம்மானைமதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள வானாலும்ஓதுக்கலுறும் குப்பைகளும் உள்ளனவால் அம்மானைஉள்ளகுப்பை ஆரியத்தின் உதித்தனவாய் அம்மானை       (17) இடமார்ந்த தமிழ்நாட்டில் இலங்கு தமிழாம்தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார்: 3/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 2/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 3/17 தேனுலவு தருவின்கீழ்த் தேவருள தாக்கூறும்வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்கா தம்மானைவானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்காதெனின் அந்தவானுலகை உயர்ந்ததா வாழ்த்துவதேன் அம்மானைவாழ்த்துபவர் தமிழ்ச்சுவையின் வளமறியார் அம்மானை       (11) இறவாத முத்தியை எண்ணிச் சிலருலகில்பிறவாமை வேண்டுமெனப் பித்துண்டார் அம்மானைபிறவாமை வேண்டுவோரைப் பித்தர் எனலாமோபிறந்து பயனென்ன பெருந்துன்பம் அம்மானைபிறந்து தமிழின்பம் பெறவேண்டும் அம்மானை       (12) அமிழ்தான நீர்சூழ்ந்த அகல்நிலத்து நாடுகட்குள்தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் அம்மானைதமிழ்நாடென் றாலேயோர்…

போர்கள் – சி.இலக்குவனார்

   (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  27 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  28 15. போர்கள்  ‘போர்’ என்பது இன்று எல்லோராலும் வெறுக்கப்படும் ஒன்றாக முழங்கப்பட்டு வருகின்றது.  ஆயினும், ஆங்காங்கே போர் ஆயத்தங்களும் போர் முழக்கங்களும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன. ” அமைதியை நிலை நாட்டவே போர் ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளோம்” என்று பறையறையும் அரசுகளும் உள.  கட்சிக் கொள்கை, சமய வேறுபாடு, பொருட்பற்று, பதவி விருப்பம் ஆயவைபற்றி ஆங்காங்கும் போர் இயல் காட்டும் நிகழ்ச்சிகள் தோன்றி…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 2/17

  (தனித்தமிழ்க் கிளர்ச்சி 1/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 2/17 கற்றார் களிப்பெய்தக் கவின்சிறந்த நயமீந்துவற்றா வளமுடைத்து வண்தமிழ்காண் அம்மானைவற்றா வளமுடைத்து வண்தமிழே யாமாகில்பற்றார் பலகுறைகள் பகருவதேன் அம்மானைபகரல் கடல்முதலாம் பகைவரினால் அம்மானை       (6) பழியில் சுப்பிரமணிய பாரதியார் பகர்ந்ததுபோல்மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே யம்மானைமொழிகளிலே இனியதுநம் முத்தமிழே என்பதற்குவழியுடன்ஓர் அகச்சான்று வகுத்துரைப்பாய் அம்மானைதமிழ்என்றா லேயினிமை தானறிவாய் அம்மானை       (7) அயல்மொழியில் இல்லாத அரியதொரு ழம்முதலாம்இயல்பொலியாம் எழுத்துகள் இன்தமிழ்க்குண்டம்மானைஇயல்பொலியாம் எழுத்துகள் இன்தமிழ்க்குண்டாமாயின்முயல்வுறுஆ ரியஎழுத்தை மொழிவதெங்ஙன் அம்மானைஇயலினிய…

பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி

(சங்கக்காலச் சான்றோர்கள் – 23: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 24 4. பிசிராந்தையார்  உலகின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் அடிப்படையாய் விளங்கும் உயிர் ஊற்று, அன்பு என்னும் நல்லுணர்வேயாகும். ஞாயிற்றின் ஒளியின்றேல் எவ்வாறு ஞாலம் அழிந்து ஒழிந்து நாசமாகிவிடுமோ, அவ்வாறே அன்பு என்ற உணர்வும் உயிர்கள் மாட்டு இல்லையாயின் உலகமும் உலக வாழ்வும் சீர் கெட்டுப் பாழடைந்து போதல் ஒருதலை. அதனலன்றோ வான்மறை தந்தருளிய பெரியார் வள்ளுவரும், ‘அன்பின் வழிய(து) உயிர்நிலை; அஃதிலார்க்(கு)என்புதோல் போர்த்த உடம்பு.’        …