தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! – பழ. நெடுமாறன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! மறைமலையடிகள் 1916-ஆம் ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளில் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். வடமொழிக்கோ பிறமொழிகளுக்கோ அவர் எதிரானவர் அல்லர். தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமை மிக்கவர் அவர். ஒரு மொழியில் இயல்பாக உள்ள சொற்களைத் தவிர்த்துவிட்டு பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம், அம்மொழி அழியும்…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா, தஞ்சாவூர்
உலகத்தமிழர் பேரவை 9 ஆம் மாநாடு ஆனி 31 – ஆடி 01 & 02, 2047 / சூ லை 15, 16 & 17, 2016 கருத்தரங்கம் மகளிர் அரங்கம் நூல்கள்-இதழ்கள் கண்காட்சி மலர் வெளியீடு விருது வழங்கல் தனித்தமிழறிஞர்களைச் சிறப்பித்தல் பழ.நெடுமாறன்
வஞ்சகன் பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? – பழ. நெடுமாறன் கண்டனம்
வஞ்சகன்(துரோகியின்) பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட்டு துரையப்பா என்பவரின் பெயரைச் சிங்கள அரசு சூட்டி, இந்தியத் தலைமையளார நரேந்திரர்(மோடி)யைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியத் தலைமையாளர் இரையானது வருந்தத்தக்கதாகும். 1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மாநகரத்தலைவராக இருந்த ஆல்பர்ட்டு துரையப்பா தீவிர…
தமிழர்கள் எழுவரையும் காப்புவிடுப்பில்(parole)விடுவிக்கப் பழ.நெடுமாறன் வேண்டுகோள்!
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இராசீவு கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழர்கள் ஏழு பேர் விடுதலை குறித்து விடுத்துள்ள அறிக்கை! இராசீவுகாந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது. கடந்த 24 ஆண்டுக் காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என்று 2014ஆம் ஆண்டு…
புண்ணுக்குப் புனுகு பூசும் வேலை! – பழ.நெடுமாறன்
ஏழை எளியோர்க்கு எட்டாக்கனியாகும் உயர் கல்வி! இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின்பொழுது இதே முயற்சியில் ஈடுபட்டபொழுது மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ச.க கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்பொழுது பா.ச.க அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கி வரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகைத்…
தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா – கருத்துரைக் கூட்டம்
2047, தைத்திங்கள் / சுறவத்திங்கள் 24ஆம் நாள் / பிப்.07, 2016/ முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா- கருத்துரைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையுரை ஆற்றினார். திருவாவடுதுறை இளையபட்டத்தார், முனைவர் க.தமிழமல்லன் முதலியோர் கருத்துரை வழங்கினர். [படத்தை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]
தமிழண்ணல் நினைவேந்தல், சென்னை
மார்கழி 26, 2046 / சனவரி 11, 2016
ச.அ. டேவிட்டுஐயா நினைவேந்தல்
தமிழர் தேசிய முன்னணி – மா.பெ.பொ.க. இணைந்து நடத்தும் ஈழ விடுதலைப் போராளி ச.அ. டேவிட்டு ஐயா அவர்களின் நினைவேந்தல் நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 துலைத்திங்கள் 14ஆம் நாள் (31-10-2015) காரிக்கிழமை மாலை 5.00 மணி இடம் : சென்னை, நீலி வீராசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், சிவ. இளங்கோ கட்டடம். தலைமை : தோழர் வே. ஆனைமுத்து படத்திறப்பு : ஐயா பழ. நெடுமாறன் வரவேற்புரை : திரு. பா. இறையெழிலன் இரங்கலுரை : கவிஞானி…
எழுச்சி மாநாடு – தமிழர் தேசிய முன்னணி
புரட்டாசி 09, 2046 / செப். 26, 2015 பிற்பகல் 3.00 சென்னை 600 028
தழல் ஈகையாளி தோழர் செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்!
பேரறிவாளன், முருகன், சாந்தன் தண்டனையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆவணி 11, 2042 / 28.08.2011 அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கியக்கின செங்கொடி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை தியாகராயர் நகரில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 அன்று மாலை 4 மணிக்கு
விடுதலைக்கான மக்கள் திரள் ஆர்ப்பாட்டம், திருச்சிராப்பள்ளி
சிறை மனிதனைத் திருத்தத்தானே தவிர, தண்டிக்க அல்ல! விடுதலை நாளில் நன்னடத்தை விதிமுறையின் கீழ் பத்தாண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன்பு ஆடி 26, 2046 /ஆக.11, 2015 மாலை மணி மூன்றுக்கு மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அணிதிரள்வீர்!
மா.செ.தமிழ்மணி நினைவேந்தலும் படத்திறப்பும்
ஆடி 9, 2046 / சூலை 25, 2015 காலை 9.00 மணி மங்கலபுரம், செய்யாறு வட்டம் – மக்கள் இணையம் 9444755044