இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் ! — அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் ! தமிழுக்கு நிலவென்றுபேர்! — இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் ! தமிழுக்கு மணமென்று பேர் ! — இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் ! தமிழுக்கு மதுவென்று பேர்! — இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் ! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! — இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் ! தமிழ் எங்கள் உயர்வுக்கு…

மூடத் திருமணம்

‘‘முல்லை சூடி நறுமணம் முழுகிப் பட்டுடை பூண்டு பாலொடு பழங்கள் ஏந்திய வண்ணம் என்னருமை மகள் தனது கணவனும் தானுமாகப் பஞ்சணை சென்று பதைப்புறு காதலால் ஒருவரை ஒருவர் இழுத்தும் போர்த்தும், முகமல ரோடு முகமலர் ஒற்றியும், இதழோடு இதழை இனிது சுவைத்தும் நின்றும் இருந்தும் நேயமோடு ஆடியும் பிணங்கியும் கூடியும் பெரிது மகிழ்ந்தே இன்பத்துறையில் இருப்பர் என்று எண்ணினேன். இந்த எண்ணத்தால் இருந்தேன் உயிரோடு‘ பாழும் கப்பல் பாய்ந்து வந்து என்மகள் மருமகன் இருக்கும் நாட்டில் என்னை இறக்கவே, இரவில் ஒரு நாள்…

கூற்றே உண்மை கூறு!

அன்னைத் தமிழை அரியிருக்கை அமர்த்த வுழைத்த அடலேற்றை முன்னே நுழைத்த மூடமெலாம் முறிக்க இசைத்த முறையூற்றைப், பொன்னை நிகர்பா புரிந்திசையார் புரட்சிக் கவியைத் தமிழ்ப் பேற்றைச், சென்னை நகரில் சிறையெடுத்துச் சென்ற தேனோ சிறு கூற்றே? –           காரை. இறையடியான் – குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964

நெஞ்சு பதைக்கும் நிலை

கரும்புதந்த தீஞ்சாறே, கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும். எடுத்துமகிழ் இளங்குழந்தாய், இசைத்துமகிழ் நல்யாழே, இங்குள் ளோர்வாய் மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே, வன்பு தொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தோன்றா வண்ணம் தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சாற்ற வாய்ப தைக்கும். பண்டுவந்த செழும்பொருளே பார்அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள் கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே, அன்பே வாழ்வில்…

பாரதிதாசனின் சங்கநாதம்

  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே! சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென்று ஊது சங்கே! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!…

பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்

[புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 03.04.2045 – 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற எழுத்துரை] வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக்…

புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம் – வெற்றிவேலன்

தமிழ் மகனே,   திரைகடல் ஓடித் திரவியம் காண இருண்ட கண்டம் இலங்கை, பர்மர சென்றாய்; உழைத்தாய்; கல்லை உடைத்தாய்; பிற நாட்டின் முன்னேற்றம் கருதி மாட்டினும் இழிவாய் முனைந்து உழைத்தாய்! ஈட்டியதென்ன? இழி சொல் பகைமை காட்டி நின்றனர், உன் உழைப்பால் உயர்ந்தோர்! அயர்வைக் கருதாது வியர்வை சிந்தி உயர்வைக் கருதி உழைத்தாய் பிறருக்கு! உன்றன் நேர்மையை உணர்ந்த மற்றோர் குன்றா உழைப்பை உறிஞ்சி உயர்ந்தனர்; சாற்றைப் பிழிந்து சக்கை எறிவது உலகின் இயற்கை; பாலைக் கறந்து, பின் பசுவைக் கொல்லும் கயமை…

புரட்சிக் கவிஞர் புகழுடன் எய்தினார் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

    தமிழிலக்கிய வானில் எழிலுறு ஞாயிறாக இலங்கித் தம் இன்றமிழ்ப் பாக்கதிர்களால் மூட நம்பிக்கை இருளைப் போக்கிக் கொண்டிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சித்திரைத் திங்கள் 9ஆம் நாளில் (21-4-64இல்) பூதவுடல் நீக்கிப் புகழ் உடல் எய்திவிட்டார். அச்சமின்றி ஆண்மையுடன் அடிமை நிலையை எதிர்த்து அழகிய பாடல்களை எழுதிய கைகள் அயர்ந்துவிட்டன; சூழ்ந்திருப்போர் விருப்பு வெறுப்பினை நோக்காது உள்ளத்தில் தோன்றியனவற்றை ஒளிமறைவின்றி முழங்கிய வாய் ஓய்ந்துவிட்டது. எழுபத்துமூன்று ஆண்டுகள் இவ்வுலகில் நடமாடிய கால்கள் சாய்ந்துவிட்டன. இனி நம் ஏறனைய பீடு நடைப்பெரும் புலவரைப்…

மே முதல் நாளை பாரதிதாசனார் நினைவுநாளாகக் கொண்டாடுவீர்! நாவலர் வேண்டுகோள்:

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்கை எய்தினார்; மறைந்துவிட்டார்! அவருடைய எடுப்பான தோற்றத்தை இனிக் காண முடியாது! செஞ்சொற் கவிதை இன்ப ஊற்று அவரது எழுதுகோலிலிருந்து இனி பீரிட்டெழும்போது; அவர் கால வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்பட்டார் & என்பதையெல்லாம் எண்ணவே நெஞ்சம் கூசுகிற; சொல்ல நா தழுதழுக்கிறது!   தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் தமிழ்க் கவிஞரெனத் திகழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மறைவு பொதுவாகத் தமிழகத்திற்கு குறிப்பாக கவிஞர் கவிஞர் உலகிற்கு ஈடு…

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன்

  புரட்சிக் கவிஞர் என்ற பெருஞ் சிறப்புக்குரிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தாழ்ந்துபோன தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவனாகப் பவனி வந்தார். பழமைச் சமுதாயத்தைப் பாட்டால் பண்படுத்திய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அடிமை வாழ்வினரை புரிய உலகு நோக்கி விரைந்துவர அழைத்தார். அவல வாழ்வினருக்கும் அஞ்சாமைத் திறன் ஊட்டினார். “இருட்டறையில் உள்ள தடா உலகம் சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே – வெருட்டுவது பகுத்தறிவு இலையாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்” என்று குரல் கொடுத்தபிறகுதான் மருட்டுகின்ற மதத் தலைவரை விரட்டுகின்ற வீரமெல்லாம் தமிழ் மக்களுக்கு…

கவிக்குயில் எங்கே – நாகை சு.இளவழகன்

புயல்போல பாட்டெழுதிச் சுழல வைத்தப் புதுச்சேரிக் கவிக்குயிலே பறந்ததெங்கே? இயற்கையெனும் கொடும்பாவிக் குரலைக் கேட்டோ எழுந்தெம்மைப் பிரிந்தே நீ சென்றுவிட்டாய் திரும்பாத பெரும்பயணம் சென்ற ஐயா திருநாட்டை மறந்தாயோ? என்று காண்போம். அரும்பிவரும் தமிழுலகின் பொற்காலத்தை அருகிருந்து பாராமல் எங்கே சென்றாய்? அழுகின்ற எங்களையார் ஆற்ற வல்லார்? அடுத்த பல தலைமுறைக்கும் வீர மூட்டித் தொழுகின்ற நிலைபெற்றாய்; உன்னை இந்தத் தொல்லுலகில் இனியென்று காண்போம் ஐயா பாரதிக்கு தாசனென எழுந்த நீயோ பைந்தமிழின் எதிரிகளை ஒடுக்கி வைத்தாய் பாரதிரத் தமிழ்பாடி வந்தாய், இன்றோ பாட்டெல்லாம்…

வெண்முகிலே! நில்மின், செல்மின்! – புதுகை மா.நாகூரான்

  1.வெண்முகிலே! வேகங்குறைமின், நில்மின் நில்மின் வேதனையால் கூறுகின்றேன் கேன்மின் கேன்மின் ஒண்கவிதை தந்திட்ட எந்தண் மூத்தோன் ஒளிர்கின்ற உன்னுலகில் உலவி வந்தான் மண்ணுலகில் அதனினைவாய் அலைக்கப்பட்டு மன்றாடும் என்செயலை அவர்க்குச் சொல்வி விண்ணுலகை விட்டுவிட்டு இங்கே வந்து விழிப்புள்ள என்னில்லில் வாழச் சொல்லேன். 2. மொழியென்றால் வேம்பென்று வாழ்ந்து சாகும் விழிகெட்ட வீணர்க்கு அறிவை யூட்ட மொழிக்கென்று வாழ்ந்து இறந்த மூத்தோர் தம்மை வழிகேட்க மாண்டாயோ? அன்றி யிந்த மொழிக்காக செய்ததெல்லாம் வீணே என்று மொழிப்பற்றை விட்டுவிட்டு விழியை மூடி மொழியாது ஓய்வெடுக்க…