தமிழ்மேல் ஆணை! – பாவேந்தர் பாரதிதாசன்
தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை! தமிழகமேல் ஆணை! துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன்; நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும், ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன்! எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்! தமக்கொரு தீமை. என்று நற்றமிழர் எனைஅழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான் இனிதாம் என் ஆவி! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மற…
ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்! – பாவேந்தர் பாரதிதாசன்
எந்நாள்? அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? அந்த வாழ்வுதான் இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்; ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்! புலி, வில், கயல் கொடி மூன்றினால் புது வானமெங்கும் எழில் மேவிடும் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை, பிற மாந்தர்க்கும் உயி ரானதே பெறலான பேறு சிறி தல்லவே! அந்த வாழ்வுதான் எந்தநாள்…
பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடிப் பைந்தமிழ் காப்போம்!
உலகின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தமிழ்நாட்டில்கூட அவரின் தகைமை பெரும்பான்மையரால் அறியப்படவில்லை. பாரதிதாசன் என்றால் தமிழுணர்வு என அவரை அறிந்தவர்கள் அடையாளம் காண்கின்றனர். ஆனால், அரசியல் அறம், அறிவியல், இசைத்தமிழ், இயற்கை போற்றல், சிறுவர் இலக்கியம், தொழிலாளர் நலம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, பொதுவுடைமை, மண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு , எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாரதிதாசன். இவரைப்பற்றித் தமிழ்ப்பாட நூல்களிலேயே போதிய கட்டுரைகள் இடம் பெறவில்லை. இவரைப்பற்றி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாடநூல்களிலும்…
பாவேந்தர் பாரதிதாசனின் ஆக்கங்கள்
1) அகத்தியன் விட்ட புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம் 2) அம்மைச்சி, 3) அழகின் சிரிப்பு (கவிதை நூல்) 4) இசையமுதம் (இரண்டாம் பாகம்), பாரதசக்தி நிலையம் (1952) 5) இசையமுதம் (முதல் பாகம்), பாரதசக்தி நிலையம் (1944) 6) இரசுபுடீன் 7) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம் (1939) 8) இருண்ட வீடு (கவிதை நூல்) 9) இளைஞர் இலக்கியம், பாரி நிலையம் (1967) 10) உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948) 11) உரிமைக் கொண்டாட்டமா? குயில் (1948)…
தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்! தமிழப் பகையாளனும் தானே பெயர்வான்! (தமிழ்) தமிழுக்குத் தொண்டு தரும்புலவோர்கள் தமிழ்க்கனி மரத்தினைத் தாங்கிடும் வேர்கள்! கமழ்புது கருத்துக்குப் பலபல துறைகள் கற்றவர் வரவர கவின்பெறும் முறைகள்! (தமிழ்) எங்கும் எதிலுமே தமிழமுதூட்டு இங்கிலீசை இந்தியை இடமிலா தோட்டு திங்கள், செவ்வாய், புதன் கோள்கட்குச் செல்வாய் தேடரும் அறிவியல் எண்ணங்கள் வெல்வாய்! (தமிழ்)
இந்தி ஒழிக! – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ்வாழ்க தமிழ்வாழ்க என்று சொன்னான் தாமரையின் வாய்மலர்ந்து தேனைப் பெய்தான்; தமிழ் இதுபார் இன்றுதன் உள்ளங் காட்டி, தன்னுயிரில் அதுகாட்டி, என்றன் தோளை அமிழ்திதுவர எட்டியா என்று தொட்டாள் அமிழ்தென்றேன் ஆம்என்றேன் மகிழ்ந்து நின்றேன் கமழ்இமை கனியிதழும் தந்தாள் உண்டேன் கண்திறந்தேன் வேறொருத்தி வருதல் கண்டேன். தமிழ்வீழ்க தமிழ்வீழ்க என்று சொன்னாள் தமிழ்க்காதில் ஈயத்தை உருக்கி வார்த்தாள் தமிழில்லை என்றுதன் உளத்தைக் காட்டி தன்னுயிரிற் பகைகாட்டி என்றன் தோளை அமிழ்திதுவா எட்டியா என்று தொட்டாள் அப்பட்டம் எட்டிக்காய் அடியே என்றேன் உமிழ் இந்தி நான்…
வேங்கையே எழுக! – பாவேந்தர் பாரதிதாசன்
இந்தித் திணிப்புச் சரியல்ல! அமைதி வேண்டும் நாட்டினிலே அன்பு வேண்டும் என்பார் ஆழ மடுவில் நீரைக் கலக்க வேண்டாம் என்று சொல்வார். தமிழகத்தில் இந்தி திணிக்கச் சட்டம் செய்தார் அவரே சாரும் குட்டையில் எருமை மாட்டை தள்ளுகின்றார் அவரே! சுமக்க வேண்டும் இந்தியினைப் பொதுமொழியாய் என்பார்; தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல் தொலைய வேண்டும் என்பார்; தமிழ்மொழியை அழிக்க வேண்டும் என்றவரும் அவரே தமிழகத்திலே புகுந்த சாக்குருவிகள் அவரே!
இந்தியா? – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை) தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை) இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை) ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை) தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா…
குண்டு போடு! – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழுக்கு நீசெயுந் தொண்டு — நின் பகைமீது பாய்ச்சிய குண்டு (தமிழுக்கு) தமிழில்நீ புலமைபெற வேண்டும் — அது தமிழ்பெறத் தமிழரைத் தூண்டும் தமிழிலே யேபேச வேண்டும் — அது தனித்தமிழ் வளர்ச்சியைச் தூண்டும் (தமிழுக்கு) தமிழ் பேசு: தமிழிலே பாடு — நீ தமிழினிற் பாடியே ஆடு தமிழ்ப்பாட்டை யேகாதிற் போடு — தமிழ் தப்பினால் உன்காதை மூடு (தமிழுக்கு) வணிக விளம்பரப் பலகை — அதில் வண்தமிழ் இலாவிடில் கைவை காண்கநீ திருமண அழைப் பைப் — பிற கலந்திருந் தால்அதைப்…
தமிழ் வரலாறு – பாவேந்தர் பாரதிதாசன்
கேளீர் தமிழ்வர லாறு — கேட்கக் கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு (கே) நாள்எனும் நீள்உல கிற்கே — நல்ல நாகரி கத்துணை நம்தமி ழாகும் வாளுக்குக் கூர்மையைப் போல — அது வாழ்வுக்குப் பாதை வகுத்ததுமாகும் (கே) இயல்பினில் தோன்றிய தாகும் — தமிழ் இந்நாவ லத்தின்மு தன்மொழியாகும் அயலவர் கால்வைக்கு முன்பே — தமிழ் ஐந்தின்இ லக்கணம் கண்டதுமாகும் (கே) அகத்தியன் சொன்னது மில்லை — தமிழ் அகத்திய மேமுதல் நூலெனல் பொய்யாம் மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் — பிறர் மேல்வைத்த…
தமிழ் வளர்ச்சி – பாவேந்தர் பாரதிதாசன்
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும். இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும். இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும். எங்கள் தமிழ் உயர்வென்று…
தமிழ் வெல்க வெல்க
இனிமைத் தமிழ்மொழி எமது — எமக் கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு — எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை — எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! நனி்யுண்டு நனியுண்டு காதல் — தமிழ் நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில் (இனிமைத்) தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந் தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத் தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம் தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம்…
