பன்முக நோக்கில் குறுந்தொகை – கருத்தரங்கம், மதுரை

பங்குனி 29, 2048 / ஏப்பிரல் 11, 2047  & பங்குனி 30, 2048 / ஏப்பிரல் 12, 2047 பன்முக நோக்கில் குறுந்தொகை – கருத்தரங்கம்   உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங)   இவ்வாறு சென்னையில் வேலைவாய்ப்பு முயற்சிகளினால் அலைந்து கொண்டிருந்த பேராசிரியர், கலைத்தந்தை கருமுத்து தியாகராச(ச்செட்டியா)ர் தம்மைச் சந்திக்க விரும்புவதாக அறிந்து மதுரை சென்றார்; தமிழ்ப் புலமையும் தமிழ்உணர்வும் மிக்க கலைத்தந்தை பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவராக நியமித்தார். அப்பொழுது முதல்வர் பணியிடமும் ஒழிவாகத்தான் இருந்தது.  அதற்கு ஆங்கிலத்துறையைச் சேர்ந்த திரு. வரதாச்சாரி என்பவரை நியமித்தார். துணை முதல்வராகவும் முதல்வராகவும் பணியாற்றி உள்ள தகுதி மிக்கப் பேராசிரியரையே அவர் முதல்வராக அமர்த்தி…

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம், மதுரை

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம்   வணக்கம். கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வலியுறுத்தும் போராட்டம் மதுரை, சென்னையை மையப்படுத்தி நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் போராட்டக் குழு தொடர் போராட்டங்களை நடத்திச் சென்னையில் கைதாகிச் சிறை சென்றதும், இடை நீக்கம் செய்யப்பட்டதும் நாம் அறிந்தனவே!   பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் 2015இல் தொடங்கப்பட்டு மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் திரு வெள்ளையன்…

சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! – இலக்குவனார் திருவள்ளுவன்

சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)   சல்லிக்கட்டுத்தடையை எதிர்த்து  மார்கழி24/சனவரி 8இல் சென்னையில் தொடங்கிய போராட்டம் பிற இடங்களில் நடந்த கிளர்ச்சிகளுடன்சேர்ந்து இன்று நாடு முழுவதுமான அறப்போராட்டமாக மாறியுள்ளது.   அலங்காநல்லூர், சென்னை, மதுரை என அனைத்து நகர்களிலும், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி, மாணாக்கர்கள், இளைஞர்கள் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும்  நடந்து கொள்வதாக அனைத்துத் தரப்பாரும் பாராட்டி வருகின்றனர். கட்சிக் கொத்தடிமைகளையே பார்த்து வந்த நாட்டில் முதல்முறையாகக்…

வணக்கம் யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

வணக்கம் யாருக்கு?     ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு அவரது கட்சித் தொண்டர்களும் பிறரும் வணக்கம் செலுத்துவதுபோலும் அவர் வெறுமனே நிற்பதுபோலும இதழ்களில் சில படங்கள் வருகின்றன. அதைப்பார்த்த நண்பர்கள், “வணக்கம் செலுத்தினால்  மறு வணக்கம் தெரிவிக்காமல் இருக்கிறாரே!  ‘சின்னம்மா’ என்று பணிவன்புடன் அழைப்பவர்களிடம்  மறு வணக்கம் தெரிவிப்பதுதானே முறை” என்றனர். அதற்கு நான், “இவர் வணக்கம் செலுத்தாமல் இருந்தால் தவறுதான்.  ஆனால், இவர் வணக்கம் தெரிவித்த படம் வெளி வந்திருக்காது.  ஏனெனில் வந்துள்ள படங்களில் சிலர் மட்டும் வணக்கம் செலுத்துவதுபோல் காட்சிகள் உள்ளன. அப்படியானால் அவர்…

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!   இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 /  18-11-2016 வெள்ளி அன்று  வெகு சிறப்பாகநடத்தியது. கோவை :  கோவை மத்திய சிறைச்சாலை…

திருக்குறள் அறக்கட்டளைச் சொற்பொழிவு 02, மதுரை

ஆடி 27, 2047  ஆகத்து 11, 2016 மாலை 5.00 மணி சீனக்கவிஞர் (இ)யூசியின் திருக்குறள் அறக்கட்டளைச் சொற்பொழிவு 02 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

தலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்!   பெயர்களை இரு மொழிகளில் ஒரே நேரம் குறிப்பிடுவோர் உலகில் நாம் மட்டுமாகத்தான் இருக்கிறோம். பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டு அதை அப்படியே தமிழில் குறிப்பிடும்பொழுது நமக்கு இழுக்கைத் தருகிறது என்பதை உணரத் தவறுகிறோம். பொதுவாக, தந்தை பெயர் அல்லது  தாய்பெயர் அல்லது  பெற்றோர் பெயர் அல்லது ஊர்ப்பெயர் முதலானவற்றின் முதல் எழுத்தையே நம் தலைப்பெழுத்தாக இடுகின்றோம்.  கதிரவன் மகன் நிலவன் என்னும் ஒருவர் தன் தந்தையின்  முதல் எழுத்தை ஆங்கிலத்தில்  குறிப்பிட்டுத் தன் பெயரைக் கே.நிலவன்…

இந்தியன் குரல் : சட்ட விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள்

சமூக ஆர்வலர்களே ! வணக்கம். ஒருவர் ஆற்றிலோ கடலிலோ விழுந்தால் காப்பற்ற யாரேனும் வருவார்கள். ஆனால் அவர்களே சாக்கடையில் விழுந்தால் அவர்கள் அண்மையில் இருப்பவனும் நாற்றம் தாங்காமல் ஓடிவிடுவானே ஒழிய காக்க வரமாட்டான். “யாராவது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!” என்று கூவிக்கொண்டுதான் இருப்பான்.  அதுபோலவேதான் நம் மக்கள் நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூவுவதும். அவர்களைக் கொண்டு தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நடக்கிறது யாராவது அரசியலுக்கு வரவேண்டும் என்பதும் வந்தவர்களை வாழ்த்தி வரவேற்பதும் உங்களைச் சாக்கடையில் தள்ளிவிட்டு நாங்கள் வேண்டியதை பெற்றுக்கொண்டு தப்பி ஓடுகின்றோம் என்று அம்மக்கள் உணர்த்தத்தான்.  இதையறியாமலோ அறிந்தோ சமூக ஆர்வலர்களும்,…

தேசியம் – தேசப்பக்தி – தேசத்துரோகம் : கருத்தரங்கம்

  பங்குனி 12, 2047 /  மார்ச்சு 25, 2016  மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரை மதுரை   அகில இந்தியர் மாணவர் கழகம், மதுரை

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள்

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள் கூடல் (மதுரை) பொய்யா விழாவின் கூடற் பறந்தலை – அகநானூறு: 16:14 கொடிநுடங்கு மறுகிற் கூடற்குடா அது அகநானூறு:149: 14 யாம்வேண்டும் வையைப்புனல் எதிர்கொள்கூடல் பரிபாடல் : 10:40 4.மதிமலை மாலிருள் கால்சீப்பக் கூடல் பரிபாடல் : 10: 112 வருந்தாது வரும்புனல் விருந்தயர் கூடல் பரிபாடல் : 10:12 கூடலொடு பரங்குன்றினிடை பரிபாடல் : 17: 23 கொய்யுளை மான்தேர்க் கொடித்தேரான் கூடற்கும் பரிபாடல் : 17:45 புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்…

ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்

ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்   சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை ‘கியூ’ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஐயத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்துவது, பைப்பறி(பிக் பாக்கெட்டு), வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர்…

1 3 4 5 7