நிதி நிலைஅறிக்கை – 2016: விலை உயர்வு – குறைவுப் பட்டியல்

நிதி நிலை அறிக்கை – 2016: விலை உயர்வு – குறைவுப் பட்டியல் தலைமையமைச்சர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவண் பா.ச.க அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையினை (Budjet) மாசி 17, 2047 / பிப்பிரவரி 29, 2016 அன்று நாடாளுமன்றத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் செத்லி அளித்தார். இதனால் வரி போடுவதில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக விலை உயர்கிற குறைகிற பொருட்கள், சேவைகள் போன்றவற்றின் பட்டியலைப் பார்ப்போம். விலை உயர்வு பெறுபவற்றின் பட்டியல்: – விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் (sport utility) ஊர்திகள்….

உயர்நீதி மன்றத்தின் பெயர் சென்னை அல்ல… தமிழ்நாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னை அல்ல … தமிழ்நாடு – இலக்குவனார் திருவள்ளுவன் . சென்னை மாகாணம், மதராசு என்னும் பெயரில் வழங்கப்பட்ட பொழுது சென்னையில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1862 இல் இது மதராசு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.   பேரறிஞர் அண்ணா அவர்களால், 1968 சூலை 18 இல் சென்னை மாநிலத்தைத் ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்பொழுதே உயர்நீதிமன்றத்தின் பெயர் ‘தமிழ்நாடு உயர்நீதி மன்றம்’ என மாற்றப்பட்டிருக்க…

முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா?

திபேத்தியர் குடியேற்ற இடங்கள் முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா?   தமிழ் அறநெறிகளுள் ஒன்று, அடைக்கலம் என வந்தோர்க்கு ஆதரவு காட்டி, அரவணைத்து வாழ்வித்தலாகும். அடைக்கலப் பொருளைப் பொன்போல் காப்பவருக்கும் அடைக்கலமாக வந்தவரைத் தம் உயிரினும் மேலாகக் காப்பவர்க்கும் நற்பேறு கிட்டும் என்பது தமிழர் நம்பிக்கை. ‘விருந்தினர் இருக்கையில் சாவா மருந்தெனினும் தனியே உண்ணக்கூடாது’ என்பது தமிழ் நெறியல்லவா? அதைத்தானே தெய்வப்புலவர் திருவள்ளுவர் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று ( திருக்குறள், எண்:82) என்கிறார்.   நம்…

மத்திய அரசும் தமிழகக் கட்சிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பில் உறுதி கொண்ட மத்திய அரசும் ஆரவார முழக்கங்களால் தடுமாறும் தமிழகக் கட்சிகளும்     மத்திய அரசிற்கு மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு இல்லை. ஆனால், இந்தித்திணிப்பில் விடாப்பிடியான உறுதிப்பாடு உள்ளது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு என்பது திட்டமிட்டுச் சீராக நடைபெற்றுக் கொண்டு பிற தேசிய மொழிகளை அழித்து வருகின்றது. இத்தகைய பிற மொழித் தேசிய இன அழிப்பு வேலையின் அரங்கேற்றக் காட்சிதான் அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.   உலகின்…

மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக

    சூன் 3 ஆம் நாள்  இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச்  சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும்.   மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.  எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…

தமிழகத்தை வஞ்சிக்கும் காங்.அரசு – ஆளுநர் உரை மூலம் தாக்கு!

  தமிழகச் சட்டப்பேரவை 30.01.14 அன்று நண்பகல் 12.00 மணிக்குக் கூடியது. சட்டமன்றத்தைத் தொடக்கி வைத்து  அரசின் குரலை  ஒலிக்கும் ஆளுநர்  உரை மூலம் மத்திய காங்.அரசின் புறக்கணிப்பு உணர்வுகள் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளாகக் குவிக்கப்பட்டன.   “இலங்கையில் இனவெறிப்  போருக்குப்பின்னர், இலங்கைத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலேயே மனிதநேயமற்ற முறையில் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.  இதுவும், இலங்கை இனவெறிப்போரின் இனப்படுகொலைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யத் தவறியதும், இம் மாநிலத்தில் உணர்ச்சிகரமான சிக்கல்களாக உள்ளன. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற கொடுமைகளுக்கு இலங்கை அரசைப்…