விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா? – மறைமலை இலக்குவனார்

விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா? அண்மையில் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தேசிய விருதுகள் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. திரையுலகில் இது பெரிய கவலையை ஏற்படுத்தியது.  “தேசிய விருதுகளை விடப் படங்களைப் பார்த்தவரெல்லாம் பாராட்டிப் பேசிய சொற்களே விருதுகள்” எனக் கவிஞர் வைரமுத்து ஆறுதல் வழங்கியுள்ளார். விருது என்பது கலைஞர்களுக்குப் பெரிய ஊக்கத்தையும் மனவெழுச்சியையும் வழங்கும் மாமருந்து எனலாம். அந்த விருதுவுடன் வழங்கும் பதக்கமோ, பணமோ, சான்றிதழோ முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை. அந்த விருது வழங்கும்  பாராட்டும் அங்கீகாரமுமே கலைஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பெரிதும் ஊக்கப்படுத்தும் உந்து சக்தியாகும்….

தமிழால் இணைவோம்…! – மறைமலை இலக்குவனார்

தமிழால் இணைவோம்…! தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம். உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில்…

கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!

கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்! இ.ஆ.ப. அலுவலராகச் சிறப்பாகப் பணியாற்றிய இயற்பெயர் பி.பாண்டியன் எனக் கொண்ட கவிஞர் முனைவர் பேகன் இன்று   ( ஆனி 11, 2050 / 26.06.2019)  காலை செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது வியர்த்துக் கொட்டுவதாகக் கூறிப் பின்னர்  உயிரிழந்தார். இவரது மக்கள் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் வருகைக்காக இரு நாள் பின்னரே இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரின் உறவினர், மேனாள் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர், முனைவர் கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.  சிறந்த கவிஞராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்து பல நூல்களைத் தமிழிலும்…

எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்? – மறைமலை இலக்குவனார்

எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்?   பைந்தமிழின் பலதுறையும் ஆய்ந்தறிந்த அறிஞரே! கண்ணீரைப் பெருக்கிக் கலங்கிக் கரைந்து சிந்தை எல்லாம் நைந்திடவே எம்மைநீர் பிரிந்ததுவும்  முறையா? சொல்லாண்டு பொருளாண்டு எழிலார்ந்த காப்பியத்தின் சுவையாண்டு  திறனாய்ந்து நூல்பலவும் தந்தீரே! பல்லாண்டு பல்லாண்டு பாடவொரு வழியின்றி நில்லாமை நெறியெமக்குச் சொல்லாமல் சொன்னீரே! நவையெதுவும் இரா மோகன் புகழ்கொண்ட பேராசான்   முகம்கண்டு மகிழ்ந்திடவே வழியினிமேல் இல்லையா? கூற்றுவன் தொல்லையா? நவையற்ற நறுந்தமிழால் நலம்விளைக்கப் பல்காலும் திறனாய்வுத் துறைமேவித் தரமான நூலியற்றி அறிவார்ந்த பொருள்பலவும் செறிவாகப் புலப்படுத்தும் அரியகலை…

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் இந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.  ‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.  இந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப…

சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்

சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம் இலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர்…

சொற்பொழிவு: ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார்

தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை சொற்பொழிவு – 47 ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார் பங்குனி 29, 2050 வெள்ளிக்கிழமை 12.04.2019 மாலை 4.30 தமிழ் இணையக் கல்விக்கழகக் கலையரங்கம் அன்புடன்,இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில்சென்னை – 600 025.தொ.பே: 2220 9400 மின் முகவரி: tva@tn.gov.in  அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : www.tamilvu.org