கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா

  சென்னை அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா அறிஞர்கள் நிறைந்தகூட்டமாகப் பொலிந்தது. (ஆவணி 01, 2045 / ஆக.17, 2014 : இடம்-கந்தசாமி நாயுடு கல்லூரி காலை 1030) படங்கள் :  முனைவர் மறைமலை இலக்குவனார் அமுதா பாலகிருட்டிணன்

கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள்

  ஆடி 25, 2045 / ஆக. 08, 2014 காலை கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் பேரன் கலைமகன் அவர்களின் வாழ்த்துப்பாடலுடன் தொடங்கியது. தரவு : முனைவர் மறைமலை இலக்குவனார்

சென்னை அண்ணாநகர், சௌந்தரியா குடியிருப்பில் விடுதலை நாள் விழா

குழந்தைகளுக்குத் தமிழில் பேச்சுப்போட்டி, நாடகம், இசை நிகழ்ச்சிகள். சிறப்பாக நடந்தன. மழலையரும்புகள் மணக்கும் தமிழில் அழுத்தம் திருத்தமாகப் பேசுவதைக் கேட்கக் கேட்கக் கொள்ளை மகிழ்ச்சி பிறந்தது. பெருந்தலைவர் அம்பேத்கார் அவர்களைப் பற்றிய பொழிவுகள் அருமையாக இருந்தன.   செய்தியும் படங்களும் : மறைமலை இலக்குவனார்

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார்

’இந்திய இறையாண்மை’ இதுதான் துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள் வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர் பிடிபட்டால் சிறைவாசம் தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு வேடிக்கை பார்ப்பதற்குக் கடலோரத்தில் காவற்படை! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்! அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள்! அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள்! ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான்! தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ்! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான்…

சென்னையில் வாசு.அரங்கநாதன் ஆற்றிய திருமந்திர உரை

பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் உத்தமம் என்னும் தகவல்தொழில்நுட்ப மன்றத்தின் தலைவராக உள்ளார். இதன் சார்பில் புதுச்சேரியில் வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக இவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். வந்த இடத்தில் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் திருமந்திரத்தின் மொழிநடைகுறித்துச் சிறப்புரை ஆற்றினார். சிக்கலான தலைப்பைச்சிறப்பான முறையில் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் விளக்கியதாக வந்திருந்தோர் பாராட்டினர். செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்

சென்னைக் கம்பன் கழகத்தில் ‘கலம்பகம்’ உரை

     சென்னைக் கம்பன் கழகத்தின் சார்பில் ”கலம்பகம்”என்னும் தலைப்பில் பெரும்புலவர் வே.பதுமனார் உரையாற்றினார். தமது கல்வித்திறத்தாலும் சொல்வித்தகத்தாலும் அவையினரைக் கட்டிப்போட்டுவிட்டார்   இராம.வீரப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.   பேரா.திருமதி.சாரதா நம்பி ஆரூரன் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.  (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)   செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்

மெய்யப்பனார் பிறந்தநாள்விழா

மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். ஆனி 07, 2045 / 21/6/14 அன்று சென்னையில் தினமணி விழா உட்பட ஐந்து பெரும்விழாக்கள்.எனினும் மெய்யப்பனார் அன்பர்கள் திரளாக வந்து விழாவைச்சிறப்பித்தனர்.(முன்னால் சிலம்பொலியார் பின்னால் ஆத்திரேலியா அன்பர்சிரீகந்ததாசா நெல்லைசு.முத்து, உதயைமு.வீரையன், முனைவர் அறவாணன், எழுகதிர்அரு.கோ.எனப் பல சான்றோர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) தரவு: …

பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்

[புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 03.04.2045 – 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற எழுத்துரை] வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக்…

மறைமலை இலக்குவனார் : அமெரிக்காவில் தமிழ்க்கல்வி ஆய்வரங்கம்

  பேராசிரியர் ஆண்டர்சன் தம் வகுப்பில் முனைவர் மறைமலை இலக்குவனாரை அறிமுகம் செய்தல்

தமிழ்த்தாயே! – முனைவர் மறைமலை இலக்குவனார்

    உன்னை நாள்தோறும் மூச்சுத் திணற வைக்கிறார்கள் இந்த அச்சு அடிப்பாளர்களும் பத்திரிகைக் காரர்களும்! எலும்பில்லாத தங்கள் நாக்கையே ஆயுதமாய்க்  கொண்டு உன்னை நாள்தோறும் கொலை செய்யப் பார்க்கிறார்கள் ஊடகத் தொகுப்பாளர்கள்! உன்னைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சித்திரைவதைச் செய்வதிலேயே இன்பம் அடைகிறார்கள் திரைப்பட நடிக நடிகையரும் பின்னணிப் பாடகர்களும்! உன்னை நாள்தோறும் ஊமைக்காயப் படுத்துகிறார்கள் பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியர்களும்! பல்கலைக் கழகப்  பேர்வழிகளோ உன்னை மானபங்கப் படுத்த முயற்சி செய்கிறார்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்! தமிழ்த்தாயே! இத்துணை இன்னல்களுக்குப் பிறகும் இன்னும் …….

சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!

   சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது.  இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான  விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்,  சாகித்ய  அகாதெமி, இனியேனும் தன்  போக்கை  மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :-    தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக்…