வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5.தீயினம் விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4  இன் தொடர்ச்சி)  வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 5.தீயினம் விலக்கல் தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே. தீயவர்களின் நட்பு தீமையெல்லாம் தரும். தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர். தீயவர் என்பவர் நல்லவர்களைக் கொடுமைப்படுத்தும் கொடியவர்கள். 43.பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள். பிறரின் பொருளைக் கவரும் இழிமக்கள். துணைவரல் லாரை யணையுமா வினத்தர். தமது துணையன்றிப் பிறரோடும் உறவு கொள்ளும் விலங்கு கூட்டத்தினர். அறிவினை மயக்குவ வருந்து…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 3.தாய்தந்தையரைத் தொழுதல்

மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 3.தாய்தந்தையரைத் தொழுதல் தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம். நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர். அவரிற் பெரியர் யாருமிங் கிலரே. அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை. 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக. நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும். அவர்பணி யெல்லா மன்பொடு செய்க. அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும். அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க. அவர்களின் அறிவுரைகளை அறிந்து…

மாண் பெற முயல்பவர் மாணவர் – வ.உ.சிதம்பரனார்

மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார் ஆணும் பெண்ணும் அது செயவுரியர் இளமைப் பருவம் இயைந்ததற்கே மற்றைய பருவமும் வரைநிலையிலவே அவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல் அன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல் தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல் தக்க ஆசிரியரால் இன்னியலறிதல் ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல் இறைவன் நிலையினை எய்திட முயறல் மாணவரியல், மெய்யறம்: ஈகச் செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை)