அகல் விளக்கு – மு.வரதராசனார்: 49

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 48. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 20 தொடர்ச்சி பிறகு வேறு பேச்சில் ஈடுபட்டவர்போல், “இந்த ஊர் போல் நீர்வளம் உடைய ஊர் வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏரி வறண்டால் ஒரு பயனும் இல்லை” என்று பேசத் தொடங்கினார். வந்த சந்திரன் ஆசிரியரோடு பேசாமலே நின்றான். “மேளக்காரர் இன்னும் வரவில்லையா? எத்தனை முறை சொல்லி வைத்தாலும் நாய்களுக்கு உறைப்பதே இல்லை” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய மனைவி அஞ்சி ஒடுங்கி அந்தப் பக்கமாக வந்து…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 48

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 47. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 20 மாலனுடைய திருமணம் ஆவணி இறுதியில் அமைந்தது. கால் ஆண்டுத் தேர்வு முடிந்துவிட்ட பிறகே திருமணம் நடைபெறுவதால், ஒருவகை இடையூறும் இல்லாமல் திருமணத்திற்கு வந்து போகுமாறு மாலன் கூறிச் சென்றான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெருங்காஞ்சிக்கு ஒருமுறை போய்வரலாம் என்று முடிவு செய்தேன். மாலன் தந்த அழைப்பு அல்லாமல், சந்திரன் அனுப்பிய அழைப்பும் வந்தது. சந்திரன் தனியே கடிதமும் எழுதியிருந்தான். நல்ல காலம், அவனுடைய மனம் மாறியிருக்கிறது என மகிழ்ந்தேன்….

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 39

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 38. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நான் அடிக்கடி…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 38

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 37. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி   ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. “நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?” என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன ஊர்.  உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே. ஒருநாள் இரவு தங்கி உறுதி…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 37

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 36. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், “நான் தேறிவிடுவேன்” என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, “செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?” என்றேன். “சோதிடம் கேட்டேன்” என்றான். “சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!” என்று சிரித்தேன். “குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்” என்றான். என்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 36

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 35. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 தொடர்ச்சி   “முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். “நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்….

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 35

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 34. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 தொடர்ச்சி எங்களைப் பின் தொடர்ந்திருக்கிறார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் ஏறிய பேருந்திலும் ஏறினார். அங்கும் முரடன் நடந்து கொண்ட முறையைக் கவனித்திருக்கிறார். அவன் ஒதுங்காமல், முன்னுக்கும் செல்லாமல் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான் அல்லவா? என் பக்கமாகத் தன் கால்களை நகர்த்தி என் கால்கள்மேல் படுமாறு செய்தான். நான் என் கால்களை எவ்வளவோ ஒடுக்கி உட்கார்ந்தும் பயன் இல்லை. எனக்கு அழமட்டாத குறைவாக இருந்தது. ஒரு புறம் கோபமாகவும் இருந்தது….

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 34

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 33. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14   அதற்கு மறுநாள் எங்கள் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊர்க்குப் போகத் திட்டமிட்டோம். மாலையில் மாலனும் நானும் கீழ்ப்புறத்துச் சிமெண்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே திண்ணையில்தான் எங்கள் நட்பு அன்று ஒருநாள் வேர் கொண்டது. அன்று சந்திரனுடைய ஒத்திகையை – பெண்ணாக நடித்த திறமையைப் பார்த்து மனத்தில் பாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நாள் நினைவுக்கு வந்தது. சந்திரனிடத்தில் அதுவரையில் கண்டிராத திறமையை அன்று அவனிடம் கண்டேன்….

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 33

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 32. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 13 தொடர்ச்சி இரவு 2 மணிக்குத் திடீரென்று என் உறக்கம் கலைந்தது. இரவு முன்னேரத்தில் படுத்தால் எப்போதும் விடியற்காலம் வரையில் ஒன்றும் அறியாமல் ஆழ்ந்து உறங்குகின்றவன் நான். தேர்வு நாட்களில் கடிகாரத்தில் 4, 4 1/2 மணிக்கு விழிப்பொலி(அலாரம்) வைத்துவிட்டுப் படுத்தாலும், (அலார) மணி அடிக்கும் போது அந்தக் கடிகாரத்தின் மேல் வெறுப்போடும் ஆத்திரத்தோடும் எழுவேன். சில நாட்களில் எழுந்து நிறுத்தியதும் மறுபடியும் படுத்துவிடுவேன். வீட்டில் இருந்த காலங்களில் அம்மா மெல்லத் தட்டிக்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 23

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 22. தொடர்ச்சி) அகல் விளக்கு இரண்டு வாரம் கழித்துச் சந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சந்திரனுடைய கையெழுத்தைக் கண்டதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அதில் தான் சொல்லாமல் சென்னைக்குப் போனது பற்றியும், நான் தேர்வில் தவறிவிட்டது பற்றியும் வருத்தம் தெரிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல்லை என்றும், முன்போல் ஊக்கமாகப் படிக்க முடியவில்லை என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான், அவன் மனநிலையில் அப்படி மாறுதல் நேர்ந்ததற்குக் காரணம், எசு. எசு. எல். சி. யில் எண்ணியபடி வெற்றிபெற முடியாமற் போனதுதான்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 22

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 21. தொடர்ச்சி) அகல் விளக்கு தேர்வும் வந்தது. இருவரும் எழுதினோம். சந்திரன் இதற்கு முந்திய ஆண்டுகளில் வெற்றிக் களிப்போடு இருந்ததுபோல் இல்லை; சோர்வோடு வாடியிருந்தான். என் நிலைமை எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எப்போதும் கடிந்து பேசும் அப்பாவே, அதைப்பற்றிக் கவலைப்படாமல், “என் பையன் தேர்வில் தவறிவிட்டாலும் கவலை இல்லை. உடம்பு தான் முக்கியம். சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுதவேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த ஆண்டில் உங்கள் ஊர்ப் பங்குனித் திருவிழா பள்ளி இறுதித்(எசு.எசு.எல்.சி.) தேர்வு முடிந்த பிறகுதான்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 21

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 20. தொடர்ச்சி) அகல் விளக்கு எழுதும் போதும் இடக்கை அந்தச் சேவையில் ஈடுபடும்; சில சமையங்களில் வலக்கை எழுதுவதை விட்டு அதில் ஈடுபடும். எங்கே இருக்கிறோம், எதிரில் இருப்பவர் யார் என்ற எண்ணமே இல்லாமல் அதில் ஈடுபடும். மற்றப் பிள்ளைகள் என்னை எள்ளி நகையாடினார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் நண்பன் சந்திரனே ‘சொஞ்சரி சொஞ்சரி’ என்று என்னை எள்ளிப் பேசத் தொடங்கினான். எனக்கு அது வருத்தமாகவே இருந்தது. என் தங்கையும் அவ்வாறு நகையாடினாள். அவ்வாறு எள்ளி நகையாடாதவர்கள் என்…