“அகர முதல” கண்டு மலைத்தேன்.

“அகர முதல” விரித்த அருந்தமிழ் கண்டு மலைத்தேன். நூல் விரித்தன்ன‌ மணிநீர் அருவி நுழை படுத்தாங்கு மெல்லிமிழ் தும்பி புன்கால் குடைதர‌ நுண்புலம் அதிர்ந்து விண் விதிர்த்தாங்கு பொதிகை அடுக்கம் பரல் நரல் தமிழின் பொறி கிளர்ந்தன்ன‌ பொற்றமிழ் கண்டு களி மிகுதலுற்றேன். புல்லுள் கல்லுள் புள்ளுள் குன்றுள் அமிழ்தமிழ் ஈண்டு அகவுதல் கேட்டு அக மகிழ்வுற்றேன். வாழ்த்துக்களுடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும்

  திருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன. அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள்.   தமிழ் ஈழம்  தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள்!   நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறைகளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க…