வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 (குறள்நெறி) உலகம் போற்றப் புகழ்ப்பணி புரி! புகழோ இகழோ காரணம் நாமே என உணர்! புகழ் வரும் வகையில் செயல்புரிக! புகழ் பெறா வாழ்க்கை வாழாதே! நிலப்பயன் குன்றுமாறு, புகழில்லாமல் வாழாதே! வாழ்வதாயின் இகழ்ச்சியின்றி வாழ்! வாழ விரும்பவில்லை யெனில் புகழ் நீங்கி வாழ்! உண்மைச் செல்வமாகிய அருட்செல்வத்தையே கொள்! அனைத்து வழிக்கும் துணையான அருளாட்சியை அடை! துன்பம் அடையாதிருக்க, அருளுடன் வாழ்! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல்…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240 (குறள்நெறி) (பசி தாங்கும் துறவியைவிட) வலிமையாகத் திகழப் பசியைப் போக்கு! பொருளைச் சேமிக்க, இல்லாதவர் பசி தீர்! பசிப்பிணி அண்டாதிருக்கப் பகுத்துண்! கொடை இன்பத்தை உணராமல் பொருளைச் சேர்த்து இழக்காதே! இரத்தலைவிட இழிவாகத் தனித்து உண்ணாதே! கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே என உணர்! கொடுத்துப் புகழ் பெறுவதே உயிர்க்கு ஆக்கம் என அறி! (அனைவராலும் பேசப்படக்) கொடுத்துப் புகழ் பெறு! உலகில் அழியாத புகழை அடையச் செயல்படு! புகழால்…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230 (குறள்நெறி) ஊருணி போல் செல்வத்தால் பிறருக்கு உதவு!. பயன்மரம் போல் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்து! வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்காதே! நல்லன செய்ய இயலாத வறுமையாளனாக வாழாதே! ஒப்புரவினால் கேடு வந்தால் உன்னை விற்றாவது பெற்றுக் கொள்! கொடையை விரும்பின் வறியவர்க்குக் கொடு! நல்லவழியில் வந்தாலும் பெறாதே! மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத் தவறாதே! இல்லை என்று சொல்லாமல் கொடு! கேட்போர் மகிழும் வகையில் கொடு! (தொடரும்) இலக்குவனார்…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 (குறள்நெறி) பொருள் இல்லையே எனத் தீயன செய்யாதே! துன்பம் வேண்டாவிடில் தீயன செய்யாதே. தீச் செயல் புரிந்து அழிவைத் தேடாதே! தீயவை செய்து கெடுதியைத் தொடரவிடாதே! உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே, கேடு இல்லாதிருக்கத் தீயன செய்யாதே! மழைபோல் கைம்மாறு கருதாமல் உதவுக! முயற்சியால் வரும் பொருளைப் பிறர் உயரப் பயன்படுத்து! எங்கிலும் உயர்வான ஒப்புரவு பேணுக! உயிர்வாழப் பொதுநலம் கருதிப் பிறர்க்கு உதவு! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 (குறள்நெறி) சீர்மையும் சிறப்பும் நீங்கப் பயனற்ற சொல்! பயனில பேசிப் பதடி ஆகாதே! நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிரு! பயனில்லாச் சொல்லைச் சொல்லாதே! மறந்தும் பயனற்ற சொல்லாதே! பயனுடையன சொல்லுக! தீய செய்யத் தீயோனாயின் அஞ்சாதே! நல்லோனாயின் அஞ்சுக! தீயினும் தீதான தீயன செய்யாதே! தீயன செய்தார்க்கும் தீயன செய்யாதே! பிறர்க்குக் கேடு செய்யாதே! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220]
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 (குறள்நெறி) பிறர் குறையை நீ கூறி, உன் குறையை உலகம் கூறச் செய்யாதே! இனியகூறி வளரும் நட்பை உணராது குறைகூறிப் பிரிக்காதே! நெருங்கியோர் குற்றத்தையும் கூறுபவரிடமிருந்து விலகு! அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே! அறனல்ல செய்தாலும் புறங்கூறாதே! புறங்கூறி வாழாதே! பிறர் குற்றம்போல் உன் குற்றம் காண்! எல்லாராலும் இகழப்படப் பயனில சொல்! தீய செய்தலினும் தீதான பயனில சொல்லாதே! நீதிக்கு மாறாகப் பயனற்றவை சொல்லாதே! (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க :…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 (குறள்நெறி) பிறர் பொருளை விரும்பி அறமற்ற செயல் புரியாதே! உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே! பிறர் பொருள் விரும்பி வெறிச்செயல் செய்யாதே! அருள்வழி நின்றாலும் பிறர் பொருள் விரும்பாதே! பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே! செல்வம் குறைய வேண்டாமெனில் பிறர் பொருளை விரும்பாதே! (செல்வம் சேரப்) பிறர் பொருள் விரும்பா அறவாணராய் வாழ்! அழிவு வரப் பிறர் பொருள் விரும்பு! வெற்றிக்குப்பிறர் பொருள் விரும்பாதே! முன்னால் இழித்துச்…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 (குறள்நெறி) பொறாமையால் அல்லவை செய்யாதே! (துன்பம் தரும்) அழுக்காறு வேண்டா உனக்கு! சுற்றம் கெட வேண்டுமாயின் பிறருக்குக் கொடுப்பதைத் தடு! செல்வம் சேர வேண்டாமெனில், பிறர் செல்வம் கண்டு பொறாமை கொள்! நடுவுநிலை தவற விரும்பாவிடில், பிறர் பொருள் விரும்பாதே! பொறாமையாளனின் செல்வமும் பொறாமையற்றவனின் கேடும் மாறும். அழிவினுள் தள்ளும் அழுக்காறு கொள்ளாதே! (உயர வேண்டுமெனில்,) பொறாமை கொள்ளாதே! உன் குடி அழிய வேண்டுமாயின், பிறர் பொருள் விரும்பு! பிறர் பொருள்…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 (குறள்நெறி) நற்குணம் நீங்காமல் காத்திடப் பொறுமையைக் காத்திடு!. பொறுத்தவரைப் பொன்போல் போற்று! ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்து என்றும் புகழ் பெறு! பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே! செருக்கினை வெல்ல பொறு! துறவியினும் தூயராகத் தீச்சொல் தாங்கு! தீச்சொல் பொறு! அழுக்காறு இன்மையை ஒழுக்காறு ஆகக் கொள்! இணையற்று வாழ அழுக்காறு இன்றி இரு! அறன் ஆக்கம் வேண்டுமெனின், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாதே! (தொடரும்)இலக்குவனார்…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 (குறள்நெறி) நம்பியவர் மனைவியை நாடாதே! பிறன்மனை புகுந்து சிறியோன் ஆகாதே! பிறர் மனைவியை நாடாதே! பிறர் மனைவியை விரும்பாதே! அறவாழ்வு வேண்டுமெனில், பிறர்மனைவியை விரும்பாதிரு! (அறத்தைத் தழுவப்,) பிறர் மனைவியைத் தழுவாதே! பிறர் மனைவியை விரும்பா அறம் புரி! தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்கு! பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மற! அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறு! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170]
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 (குறள்நெறி) (ஆக்கம் சேரவேண்டுமெனில்,) அழுக்காறு கொள்ளாதே! (உயர்வு வேண்டுமெனில்,) ஒழுக்கம் இல்லாதிராதே! (இழிவின் துன்பம் அறிந்து) ஒழுக்கம் தவறாதே! ஒழுக்கத்தால் மேன்மையுறு! ஒழுக்கந்தவறிப் பழி அடையாதே! (நன்றே தரும்) நல்லொழுக்கம் பேணு! (துன்பமே விளைவிக்கும்) தீயொழுக்கம் நீக்கு! தவறியும் இழிந்தன பேசாதே! உலகத்தாரோடு இணங்கி வாழ்! பிறர் மனைவியை விரும்பாதே! (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160]
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 (குறள்நெறி) (செல்வர்க்கே செல்வமான) பணிவைக் கடைப்பிடி! (ஆமைபோல்) ஐம்பொறி அடக்கு! நாவைக் காக்காது துன்பத்தைச் சேர்த்துக் கொள்ளாதே! (நன்றெல்லாம் நீக்கும்) தீச்சொல் ஒன்றும் சொல்லாதே! நாவினால் பிறரைச் சுடாதே! (அறவாழ்வு தேடி வர,) அடக்கமுடன் வாழ்! நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதி! ஒழுக்கத்தை எல்லா இடத்திலும் துணை வரச் செய்! ஒழுக்கமுடைமையை உயர் குடிமையாகக் கருது! ஒழுக்கம் தவறாதே! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150]