ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! – அம்பாளடியாள்

ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! ஆழ்கடல் தனிலே அந்தப் பேதையின் குரலைக் கேட்டேன்! ஊழ்வினைப் பயனாய் எண்ணி உலகமே வெறுக்கக் கண்டேன்! வாழ்வினை அளிக்க வல்ல வசந்தமும் விலகிச் செல்ல மூழ்கிடும்  திருநா டெம்மின் முகவரி என்றார் அம்மா! பொன்னென விளைந்த தேசம் பொலிவினை இழக்க நாளும் இன்னலைத் தொடுத்தார் அங்கே இதயமும் மரித்துப் போக! அன்னவர் செயலைக் கண்டே அடிமைகள் விழித்த தாலே வன்முறை பொலிந்தே  இன்றும் வாழ்வினைப்  பொசுக்கு தம்மா! கற்றவர் நிறைந்த பாரில் காத்திட ஒருவர் இன்றி குற்றமே பொலிந்து…

உயிரே உயிரின் உயிரே! – அம்பாளடியாள்

உயிரே  உயிரின்  உயிரே! ஈன்றவளுக் கொப்பான  இன்றமிழை நான்மறவேன் தேன்சிந்தும் பாக்களைநீ தேடிவந்து! – வான்மழைபோல் இன்றென்றன் எண்ணத்தில் இட்டுச்செல்   என்னுயிரே ! என்றுமிது போதும் எனக்கு!   தூக்கத்தில் கூடத்தான் உன்றன்  எண்ணம் தூண்டிவிட்டுச் செல்கிறாய் தாயே உன்னால் பூக்கின்ற புலமையும்  பூலோ கத்தில் பூக்களின் நறுமணத்தை ஏந்திச் செல்லும்! தேக்கிவைத்த உணர்வெல்லாம் சிந்தும் போது தேன்துளியாய்த் தான்சிந்தும் இந்த மண்ணில்! ஏக்கத்தைத் தந்தென்னை இதுபோல் நாளும் எழுப்பிவிடு தீந்தமிழே அதுவே போதும்!   உன்னோடு வாழ்கின்ற நொடிகள் எல்லாம் உலகத்தில்…