முன்னுரை   செந்தமிழ்ப் பற்றும் சீர்திருத்தக் கொள்கையும் ஒருங்கே பெற்றவர் பேராசிரியர் இலக்குவனார். தமிழ்ப் புலமையும் தமிழ்த் தொண்டும் வாய்க்கப் பெற்றவர். தமிழ் வளர்ச்சியே தம் உயிர் எனக் கருதி வாழ்ந்தவர். வறுமை வந்து வாட்டியபோதும் செம்மை மனம் உடையவராய்த் திகழ்ந்தார். விருந்தோம்பும் பண்பை அயராது போற்றினார். தவறு கண்டபோது அஞ்சாது எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர் இவர் என்று கூறலாம்.   அண்ணாவின் நட்பையும் பெரியார் ஈ. வே. ரா.-வின் பகுத்தறியும் பண்பையும் இனிதெனப் போற்றினார். இந்தி…