(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 15. இரவு விலக்கல் (இரவு-யாசித்தல்) இரவென் பதுபிறர் தரவொன் றேற்றல். இரவு என்பது பிறர் நமக்குத் தருவதை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும். இரவினிற் றாழ்ததொன் றிலையென மொழிப. இரத்தலை விட தாழ்ந்தது வேறொன்றில்லை என்று கூறலாம். இரவினிற் களவு மேற்றமா மென்ப. இரத்தலை விட களவு செய்தல் சிறந்தது என்று கூறலாம். இரந்திடப் படைத்தவன் பரந்தழி கென்ப. உயிர்களை இரந்து வாழுமாறு படைத்தவன் (இறைவன்) பல இடங்களுக்கும் சென்று இரந்து அழிவானாகுக. இரந்துயிர் வாழ்தலி…