(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2. தொடர்ச்சி) எங்கே போகிறோம்? – 3. புறநானூற்றுக் காலத்திற்கு வந்தால், பன்னாட்டுத் தேசிய இளைஞனைப் போல விளங்குகின்றான் கணியன் பூங்குன்றன். ஓர் உலகம் என்னும் கருத்து அறிவியல் பூத்துக் குலுங்கிய பின்னர் மேற்றிசை நாட்டில் தோன்றிய கருத்து. இன்னும் சொல்லப் போனால் அச்சத்தில் தோன்றிய கருத்து. ஆனால் கணியன் பூங்குன்றன் அன்புதழுவிய நிலையில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடுகின்றான். “எல்லா ஊர்களும் என்னுடைய ஊர். எல்லாரும் என்னுடைய சுற்றத்தார்” என்ற கணியன்…