ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை!    ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…

ஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து!

ஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து!   வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 அன்று தட்சிணாமூர்த்தியாகப் பிறந்து கருணாநிதியாக மலர்ந்து கலைஞராக உயர்ந்துள்ள முதுபெரும் தலைவருக்கு  அதே வைகாசி 21 / சூன் 03 இல் 93 ஆம் பிறந்தநாள் பெருமங்கலம் வந்துள்ளது. தம் உரைகளாலும் எழுத்துகளாலும் படைப்புகளாலும் கோடிக்கணக்கான மக்களிடையே தமிழ் உணர்வை விதைத்து உரமூட்டியவர் என்ற நன்றிக்கடனால் மக்கள் இன்றும் அவருக்கு ஆதரவு தருகின்றனர். ஆளும் கட்சியாளராக ஆகவில்லை  என்ற வருத்தமும் வலிமையான எதிர்க்கட்சியாளரான…

ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்

ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்   சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை ‘கியூ’ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஐயத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்துவது, பைப்பறி(பிக் பாக்கெட்டு), வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர்…

முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா?

திபேத்தியர் குடியேற்ற இடங்கள் முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா?   தமிழ் அறநெறிகளுள் ஒன்று, அடைக்கலம் என வந்தோர்க்கு ஆதரவு காட்டி, அரவணைத்து வாழ்வித்தலாகும். அடைக்கலப் பொருளைப் பொன்போல் காப்பவருக்கும் அடைக்கலமாக வந்தவரைத் தம் உயிரினும் மேலாகக் காப்பவர்க்கும் நற்பேறு கிட்டும் என்பது தமிழர் நம்பிக்கை. ‘விருந்தினர் இருக்கையில் சாவா மருந்தெனினும் தனியே உண்ணக்கூடாது’ என்பது தமிழ் நெறியல்லவா? அதைத்தானே தெய்வப்புலவர் திருவள்ளுவர் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று ( திருக்குறள், எண்:82) என்கிறார்.   நம்…

ஈழத்தமிழர் விடுதலைக்காகக் காலவரையற்ற உண்ணாநோன்புப்போர்

  திருச்சி சிறப்பு முகாமில் 26 ஈழத்தமிழர் தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் புரட்டாசி 29, 2045 – 15.11.2014 காலை 10மணிக்குத் தொடங்கியது. ஈழ ஆதரவாளர்களின் ஆதரவை விரும்புகின்றோம்

வாக்கு யாருக்கு?

  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன.   இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில்  வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள…

தென்னக மக்களிடம் பாகுபாடு காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் தி.மு.க.

திமுக 10- ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: சேதுக்கால்வாய் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேதுக்கால்வாய்த் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும். கச்சத்தீவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு எதிர் ஆவணம் கண்டனத்துக்கு உரியது. ஈழத் தமிழர்   வருகின்ற மார்ச்சு மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா….

ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ

இராசபக்சேவை  இனப்படுகொலைக்  குற்றவாளியாக அறிவிக்க, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ           இலங்கை  அதிபர்  இராசபக்சேவை  இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய  ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத்தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றார்  மதிமுக பொதுச்செயலர் வைகோ.      புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம்  பின்வருமாறு கூறினார்:              மதிமுக வரலாற்றில் நடந்த 21 பொதுக்குழுக்கூட்டங்களை விட 22- ஆவது பொதுக்குழு மிகவும் சிறப்பான பொதுக்குழுவாக…