எந்நாளோ? உனக்காய்ப் பேசா உயிரிலா இந்தியம் உடைந்து வீழ்ந்திடும் உயிர்நாள் என்றோ தனக்காய் உலவிடும் தடியர் கும்பல் தலையிலா கிடந்திடும் திருநாள் எதுவோ சினத்துடன் இம்மண் சீறியே கிளர்ந்து சிறைகளை உடைக்கும் சீர்நாள் அதுவே எனக்கு விடுதலை என்பேன் முதுபெரும் எம்மினம் மகிழ்ந்திடும் இன்பநாள் உரைப்பேன் கணக்கிலா சாவுகள் களத்தில் கண்டும் கயவரின் பிடியில் காண்பதா நாடு மணக்கும் தாய்மண் மரிக்கும் நிலையில் மடையர் கைக்குள் மாயினம் இருப்பதா? பணம்தான் பெரிதெனப் பிணமாய் வாழ்ந்திடும் பண்பிலா விலங்கே பறைவாய் இங்கே வணங்கும் தமிழ்நிலம் வடவர்…