என் சரித்திரம் 39: என் கல்யாணம் தொடர்ச்சி

(என் சரித்திரம் 38: என் கல்யாணம் தொடர்ச்சி) என் சரித்திரம் என் கல்யாணம் எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்குமுன் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறைபணி நடைபெற்றது. விநாயக மூர்த்தியின் திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள். அதற்காக ஊரினர் யாவரும் வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே இருக்கும். அதைக்கொணர்ந்து வைத்து அருகில் இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும் வைத்துவிடுவார்கள். பொடிமட்டையும் வைப்பதுண்டு. சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள். அபிசேக ஆராதனைகளுக்குப் பிறகு…

என் சரித்திரம் 38: என் கல்யாணம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 37: சிதம்பர உடையார் – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 22என் கல்யாணம் கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து சனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர். இரெயில் வண்டியின் வேகம், வண்டியின் வேகம் முதலியவற்றைக் கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள் ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக்கு மேல் குடும்பம் கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும். இன்றும் அன்றும் இக்காலத்திலோ எல்லாம் வேகம், முதல்நாள் கல்யாணம்…