கடவுள் எப்போது கவலைப் பட்டார் ? உண்டு என்றால் ஒற்றை மகிழ்ச்சி ! இல்லை என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி! ஆன்மீ கத்தில் அகப்படும் கடவுள் நாத்திகத்தில் விடுதலையாகிறார் ! தோண்டிப்பார்த்தும் கிடைக்காதோர்க்குத் தொண்டின் வழியாய்த் தொடர்புகொள்கிறார்! உண்டெனச்சொல்லிஉடைகிற மண்டையில் ஔிந்துகிடந்து உருக்குலைவதனால் தன்னம்பிக்கை என்னும் பெயரில் தளர்வறியாமல் தாவிக்குதித்து நாத்திகக் கடவுள் நலமாய் இருக்கிறார்! நாத்திகக் கடவுள் நலமாகவே இருக்கிறார் ! நாத்திகம் அவரைப் பூட்டுவதில்லை! நடைகளைச் சாத்தும் தனிமையுமில்லை! காத்திருந்துவரம் கேட்பதுமில்லை! காதுகள் வலிக்கும் கோரிக்கையில்லை! ஆத்திரம்தீர அழுவதுமில்லை! அடிக்கடி அழைத்து அலைக்கழிப்பதில்லை!…