புலவர் குழந்தையின் இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி

(இராவண காவியம் கதைச் சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் தொடர்ச்சி   சித்திரக் கூடத்தைவிட்டு இராமன் தமிழகத்தை அடைய ஆரியர் வரவேற்கச் சில நாளங்கிருந்து சரபங்கன் நிலையை யடைந் திருந்தனர். ஒரு நாள் முனிவர்கள் ஒன்று கூடி வந்து தமிழகத்தில் தாங்கள் தவவேள்வி செய்ய முடியாமல் கரன் தடுப்பதைக் கூறி அவனைக் கொன்று தங்களை வாழ்விக்கும்படி வேண்டினர். ராமன் அதற்கிசைந்து விடை பெற்றுச் சென்று முனிவர் இருக்கையில் தங்கித் தமிழ் கற்றும், வேள்வி செய்ய முனிவர்க்குதவியும், இரண்டகத் தமிழரை நட்பாக்கியும் பத்தாண்டினை அங்கே கழித்தனன்,…

புலவர் குழந்தையின் இராவணகாவியம் – கதைச்சுருக்கம்

  (முன் கட்டுரையின் தொடர்ச்சி) இராவண காவியம் கதைச்சுருக்கம் மிகப்பழங் காலத்தே தமிழ்நாடு இன்றுள்ள எல்லைக்குட்பட்டிருக்கவில்லை; வடக்கில் பனிமலை காறும் பரவியிருந்தது; அயல்நாடர் குடியேற்றத்தால் பின்னர் விந்தமலையை வடக்கெல்லையாகக் கொண்டது. தென் கடல் நிலமாக இருந்தது. அது, இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கில் ஆயிரங் கல்லுக்கு மேல் அகன்றிருந்தது. கிழக்கிலும் வங்கக் கடலும், சாவக முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பா யிருந்தது. தென்னிலத்தில் குமரிமலை; பன்மலை முதலிய மலைகள் ஓங்கியுயர்திருந்தன. குமரிமலையில் குமரியாறும், பன்மலையில் புஃறுளி யாறும் தோன்றி அந்நிலத்தை வளஞ்செய்தன. குமரியாற்றுக்கும் பஃறுனியாற்றுக்கும் இடைப்…