மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்  – இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்  ஒரு மொழியின் தூய்மையையும் தனித்தன்மையையும் சிதைத்தும் அயற்சொல் கலந்தும் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் மொழி அழிகின்றது. ஒரு மொழி அழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது. எனவே மொழிக் கொலை புரியும் படைப்பாளிகள், பேச்சாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இங்கே தலைப்பில் கவிஞர்கள் எனக் குறிப்பிட்டாலும் மொழிக்கொலைகாரர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களே!  கவிஞர்களைக் குறிப்பிட்டதன் காரணம்  ‘சர்க்கார்’ என்னும் திரைப்படப் பாடல்களில் வேண்டுமென்றே மொழிக்கொலை புரிந்த கவிஞர் ஒருவரைக் குறிப்பிட்டுத்தான். ‘சிமிட்டாங்காரன்’ என்னும் தலைப்பில் சொல்லப்படும்…

நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா

  கனடா, நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இந்த  வருட (2018) கோடைக்கால ஒன்று கூடல் எதிர்வரும் ஆடித்திங்கள் 12 ஆம் நாள்யூலை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை மிலிக்கன் பூங்காவில் (5555 Steeles Ave. E) நடைபெறவுள்ளது.   நிகழ்வு : முற்பகல் 10.00 மணி.  தொடர்புகளுக்கு : பிரபா –  416-402-1372, இரகு –  647-299-7443.    காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியின் பழைய மாணவர்கள்,  நலன்விரும்பிகள்  அனைவரையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம்…

கனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்

    ஐப்பசி 11, 2048  / 28.10.2017 வைகறை  5.00 மணி முதல் முற்பகல் 11.00மணி வரை உலகத்தமிழ் இணைய மாநாடு 2017, கனடா இணைய வழி உரையரங்கம், தமிழ்நாடு நிருவாக மையக் கருத்தரங்க அறை, மூன்றாவது தளம் ஈபெர்  பாதிரியார் (Bishop Heber) கல்லூரி,  திருச்சிராப்பள்ளி   உரையாளர்கள்:  முனைவர் காமாட்சி முனைவர் பத்துமநாபன் முனைவர் இராசேந்திரன் முனைவர் உமாராசு முனைவர் கருப்பத்தேவன் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் முனைவர் பிரகதி முனைவர் இந்திரகுமாரி முனைவர் இலக்குமி இதழாளர் சதீசுகுமார் முனைவர் குணசீலன் மரு.சிவசுப்பிரமணியன்…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு

  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு   வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாகக் கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு உரூபா 20000 பெறுமதியான 10 கூரைத் தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்துக் கையளிக்கபட்டுள்ளன.  மேற்படி விண்ணப்பத்தில் தானும் கணவரும் 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாகவும் ஓலையால் அமைந்துள்ள தங்களது வீட்டு கூரை தற்போது கூரை பழுதடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பருவ மழை தொடங்குவதால் தாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; தனது…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நடைபெறும் தொடர்போராட்டங்களில் அணிதிரள்க!

நிலமீட்டெடுப்பு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகத் திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க!     தமிழீழத் தாயகத்தில் சிறிலங்காப் படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள தலைமையர் வி. உருத்ரகுமாரன்  அழைப்பு விடுத்துள்ளார்.   எதிர்வரும் திங்கட்கிழமை வைகாசி 29, 2048…

விட்டர் இராசலிங்கம் புத்தக வெளியீட்டுப் படங்கள்

புத்தக வெளியீட்டு விழா புத்தகத்தின் பெயர் :  ‘ History of the dispossessed Sri lankan Tamils’”  ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா  அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) [பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக.]  

விக்டர் இராசலிங்கத்தின் புத்தக வெளியீட்டு விழா, கனடா

புத்தக வெளியீட்டு விழா அன்புடையீர், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். புத்தகத்தின் பெயர் : ‘ History of the dispossessed Sri lankan Tamils’”  ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா  அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) விழாத்தலைவர் : முனைவர் திருமதி செல்வம்  சிரீதாசு பேச்சாளர்கள் : திரு கரி ஆனந்தசங்கரி…

16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு

16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு சிறந்த கட்டுரைகள் படைக்கும் மாணவர்களுக்கோ இளம் ஆய்வாளர்களுக்கோ பயணப்படியாக   கனடிய வெள்ளி 500 என நால்வருக்கு சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும். ஆய்வரங்கக் குழுவின் முடிவே இறுதியானது.  இது தவிர சிறந்த கட்டுரைகளுக்கெனப் பல பரிசுகள் உள்ளன

உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா

அன்புடையீர்,   உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது.  உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள்.   தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும்  ஆய்வுக்  கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.   கருத்தரங்க முழக்கங்கள்: ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும்  (Deep Learning) தமிழில் தரவு அறிவியல் (Data Science)     நினைவில் கொள்க: 2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி  நாள்: சித்திரை…

முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்

முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்     இன்று கனடா நாட்டில் வசிக்கும் செயசுந்தர் கலைவாணி இணையரின் 10 ஆவது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30000 உரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார்.   பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிருவாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது தமது இல்லத்தில் 108 பெண் சிறார்கள் உள்ளதாகவும் இவர்கள் யாவரும் போர் வடுக்களை…

பன்னாட்டுக் கலைப்பாலம் 2016, கனடா

மிகச் சிறந்த ஈழத்துக் கலைஞர்களின் சங்கமத்துடன் கனடா திருமறைக் கலைமன்றம் வழங்கும் பன்னாட்டுக் கலைப்பாலம் 2016   ஈழத்தில் 1965 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட திருமறைக் கலைமன்றம்(கலாமன்றம்), 50 ஆண்டுகள் நிறைவைக் கனடாவில்  பன்னாட்டு விழாபீவாகக் கொண்டாடுகிறது.   கனடா திருமறைக் கலைமன்றம் தமது 25வது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த வருடத்தில், தாய் மன்றத்தின் பொன்விழாவையும், கனடிய மன்றத்தின் வெள்ளி விழாவையும் ஒன்றாக இணைத்துப்,  பன்னாட்டுக் கலை விழாவாகக் கொண்டாடுகிறோம். சுகாபரோவில், மைக்கோவன்-எல்சுமெயர் சந்திக்கருகே, இல.1686 எல்சுமெயர் வீதியில் அமைந்துள்ள   சேசிசு மண்டபத்தில்…