கலைச்சொல் தெளிவோம் 36 : உயிர்மி – cell

உயிர்மி-cell நம் உடலில் கோடிக்கணக்கான நுண்ணறைகள் அமைந்துள்ளன. சிறு அறை என்னும்பொருளில்  இலத்தீனி்ல் செல்லுலர் என்று அழைத்தனர். இதை இராபர்ட்டு ஊக்கி என்னும் அறிஞர்(1560) சுருக்கிச் செல் என்று குறிப்பிட்டார். அதனை நாம் தமிழில் பெரும்பாலும் செல் என்றே குறிப்பிடுகிறோம். நுண்ணறை என்றும் உயிரணு என்றும் ஒரு சாரார் அழைத்து வருகின்றனர். செந்து என்றும் முன்பு உயிரணுவை அழைத்துள்ளனர்(பிங்கல நிகண்டு பா.3561). செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்டுகின்றது. அது போல் உயிர்(209) உறையும் உடல் கட்டுமானத்திற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்று சொல்லலாம்….

கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன் 281. உள்ளகவரைவி – tomograph:  குறிப்பிட்ட  திசு அடுக்கு சிறப்புக் கதிர் வீச்சு வரைவி எனச் சொல்லப்படுவது கலைச்சொல்லாக அமையாது. திசு என்பதைத் தமிழில் மெய்ம்மி எனச் சொல்ல வேண்டும். கூறு கூறாக ஆராய உதவுவது என்றாலும் ‘டோமோ’ என்பதற்குத் தளம் என்னும் நேர்பொருளில் சிலர் கையாள்கின்றனர். அவ்வாறு இதன் அடிப்படையில் தளவரைவி என்னும்பொழுது தரைத்தளம் என்பதுபோல் வேறுபொருள் வந்துவிடுகின்றது. உடலின் உட்பகுதியைக் கதிர்வீச்சுமூலம் பதியும் வரைவி. எனவே, உள்ளகவரைவி எனலாம். 282. உளநிலை…

கலைச்சொல் தெளிவோம் 35 : தாழி மரம் – bonsai

தாழி மரம் – bonsai போன்சாய் (bonsai) என்றால் குறுஞ்செடி வளர்ப்பு, குறுமர வளர்ப்பு என மனையறிவியலில் கையாளுகின்றனர். பொருள் சரியாக இருந்தாலும் சங்கச் சொல் அடிப்படையில் நாம் புதுச் சொல் உருவாக்குவது நன்றல்லாவா? பானையைக் குறிக்கும் தாழி என்னும் சொல் சங்க இலக்கியங்களில்   எட்டு இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க வரி பின்வருமாறு ஆகும். தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி (குடவாயில் கீரத்தனார்ர : அகநானூறு 129: 7) தாழியாகிய மட்பாண்டத்தில் வளர்க்கப்படும் பருத்திச் செடியை இது குறிக்கிறது. மண்தொட்டிகளில் சிறு செடிகளை…

கலைச்சொல் தெளிவோம் 34 : துயின்மை – hibernation

34 : துயின்மை-hibernation இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் (பெரும்பாணாற்றுப்படை : 440) இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து (முல்லைப் பாட்டு : 80) கம்புட் சேவல் இன்றுயில் இரிய (மதுரைக்காஞ்சி : 254) வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் (குறிஞ்சிப்பாட்டு: 242) ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் (நற்றிணை : 87.2) இவைபோல் சங்க இலக்கியங்களில் 62 இடங்களில் துயில் என்னும் சொல்லும் 31 இடங்களில் துயில் என்பதன் அடிப்படையிலான சொல்லும் பயின்றுள்ளன. அவற்றுள் ஒன்று துயின்று என வரும் பின்வரும்…

கலைச்சொல் தெளிவோம் 32 : புகைக்கொடி- comet

  32 :புகைக்கொடி– comet   இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(டு) (komete) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே பலர் குறிப்பிடுகின்றனர்.   இதனைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என்றே அயல்நாட்டார் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னரே…

கருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன்

  241.  உப்புமானி –   salinometer/ salimeter/ salometer :  கரைசலில் உள்ள உப்பின் செறிவை அளவிடும் மின்கடத்திப் பயன்படுத்தப்படும் கருவி. நீர்ம உப்பியல்புமானி, நீர்ம உப்பியல்பு அளவி என உப்புக் கரைசலை நீர்ம உப்பு என்பதும் சரியான சொல்லாட்சி அல்ல. உப்புமானி எனலாம். 242. உமிழ் மின்னணு நுண்ணோக்கி – emission electron microscope 243. உமிழ்வு நிறமாலைமானி  – emission spectrometer 244.  உயர் நிகழ்வெண் மின்வலி மானி  – high-frequency voltmeter 245. உயர் பகுதிற மின்னணு நுண்ணோக்கி  …

கலைச்சொல் தெளிவோம் 31: கோளுதிரி – asteroid

கோளுதிரி – asteroid   விண்ணியலிலும் கணக்கியலிலும் அசுட்டிராய்டு/asteroid என்பதற்குச் சிறுகோள் என்றும் பொறிநுட்பவியலிலும் புவியியலிலும் குறுங்கோள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றைச் சிறுகோள்கள் என்று சொல்வதை விட வேறு பொருத்தமான சொல்லால் அழைப்பதே பொருத்தமாகும். கோள் பற்றி 105 இடங்களிலும் கோள்மீன் 5 இடங்களிலும் சங்க இலக்கியங்களில் வருகின்றன.    உதிர்பு(4), உதிர்க்கும்(4), உதிர்த்த(20), உதிர்த்தலின்(1), உதிர்த்து(3), உதிர்தரு(1), உதிர்ந்த(6), உதிர்ந்தன(1), உதிர்ந்து(4), உதிர்ந்தென(1)உதிர்ப்ப(3), உதிர்பு(2), உதிர்வ(1), உதிர்வன(5), உதிர்வை(1), உதிர (22) என உதிர் தொடர்பான சொற்கள் உள்ளன. உதிர் + இ…

கலைச்சொல் தெளிவோம் 30 : சேணாகம்- Pluto; சேண்மம்- Neptune

30 :சேணாகம்- Pluto ; சேண்மம்- Neptune     சேய்மையன் (1), சேண் (96),சேணன் (1),சேணோர் (1),சேணோன் (9)  எனச் சேண் அல்லது அதனடிப்படையிலான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயின்றுள்ளன. கண்ணுக்கெட்டாத தொலைவு,  நினைவிற்கெட்டாத தொலைவு என மிகுதொலைவை இவை குறிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் மிகுதொலைவிலுள்ள கோள்களுக்குப் பெயர் சூட்டலாம். சேண்விளங்குசிறப்பின்ஞாயிறு (புறநா. 174, 2) எனத் தொலைவிலுள்ள ஞாயிறு குறிக்கப்பெறுகிறது.   புளூட்டோ- Pluto என்பதனையும் நெப்டியூன் – Neptune என்பதனையும் ஒலி பெயர்ப்பில்  அல்லது  தொலைவிலுள்ள கோள் என்றே விண்ணியலிலும்…

கருவிகள் 1600 : 201-240 : இலக்குவனார் திருவள்ளுவன்

  201. ஈய இதழ் மின்னோக்கி – aluminum leaf electroscope / wilson electroscope 202. ஈய இலை மின்னோக்கி –  aluminum leaf electroscope 203. ஈர்-மானி – g-meter :  ஈர்ப்பு மானி > ஈர் மானி; சுருக்கமாக ஈ-மானி என்றால் ‘ஈ ‘ என்னும் உயிரியுடன் தொடர்புபடுத்தப்பட்டுத் தவறான பொருள் வரும். 204. ஈர்ப்பளவி  – suction gauge 205. ஈர்ப்பு உலவைமானி  – suction anemometer 206. ஈர்ப்புமானி / எடைமானி  –  gravimeter :  நீர்ம…

கருவிகள் 1600 : 161 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்

  161. இருட்புல நுண்ணோக்கி – darkfield microscope   :  இருட்டுப்பின்னணியில் ஒளிப்பொருளை அறிய உதவம் இருட்புல நுண்ணோக்கி. 162. இருநிற நோக்கி – dichroscope   : படிகங்களின் வண்ணக்கோலத்தை அளவிடப்பயன்படும் கருவி. (மூ.182) 163. இருபக்கக் கதிரியமானி – net radiometer : கதிர்ச்செறிவுமானியின் வகைகளுள் ஒன்று. வளிமண்டிலவியல் பயன்பாடுகளில் பூமியின்மேற்பரப்பில் நிகரக் கதிர்வீச்சினை அளவிடப் பயன்படுவது. பொதுவாகச்சூழ்உடலியல் துறையில் பயன்படுகிறது. நிகரக் கதிர்வீச்சளவி, இருபக்கக் கதிர்வீச்சு அளவி என இரு பெயர்கள் வழக்கத்தில் உள்ளன. கதிரிய மானியான இதனைக் கதிர்வீச்சு…

கருவிகள் 1600 : 121 – 160 : இலக்குவனார் திருவள்ளுவன்

  121.  இடைவீழ் மழைமானி    –    interceptometer  :        மரங்களின் கீழ் அல்லது இலைதழைகளின் வழியாக விழும் மழையளவை அளக்கும் மழைமானி. இடைவெட்டு மழைநீர் அளவி (-இ.) எனச்சொல்வதைவிட இடைவீழ் மழைமானி என்பது ஏற்றதாக அமையும்.     122.   இடையீட்டு அளவி –  slip gauge / Gauge block / gage block / Johansson gauge / Jo blocks  : இடைவெளியைத் துல்லியமாக அளவிடும் கருவி. நேர் பொருளாக நழுவு அளவி / நழுவல் அளவி என்றெல்லாம் சொல்லாமல்…

கருவிகள் 1600 : 81 – 120 : இலக்குவனார் திருவள்ளுவன்

81. ஆரையளவி – fillet gauge / radius gauge 82. ஆவன்னா – இகர அளக்கைமானி – beta-gamma survey meter : அளவை மானி என்றால் அளவிடும் கருவி( guage) எனத் தவறாக எண்ணலாம். எனவே, அளக்கை மானி எனலாம். 83. ஆவன்னாக் கதிர் எதிர்ச்சிதறல் தடிம அளவி – beta-ray backscatter thickness gauge          : அகரக்கதிருக்கு அடுத்ததை ஆகாரக்கதிர் எனக் குறிக்கும் பொழுது உணவு எனத் தவறாக எண்ணலாம். எனவே, இங்கே ஆவன்னாக்கதிர் எனக் குறிக்கப்பெறுகிறது. 84. ஆவி…