(அதிகாரம் 055. செங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 056. கொடுங்கோன்மை   மக்களை அலைக்கழிக்கும், தீமையான, முறைஇல்லாக் கொடுமையான வல்ஆட்சி.   கொலைமேற்கொண் டாரின் கொடிதே, அலைமேற்கொண்(டு),      அல்லவை செய்(து)ஒழுகும், வேந்து.   மக்களை வருத்தி, அலைக்கழிக்கும், ஆட்சி, கொலையினும் கொடிது.   வேலொடு நின்றான்,”இடு”என்றது போலும்,       கோலொடு நின்றான் இரவு.   வன்முறையால் வரிகேட்டல், வேல்காட்டிக் கொள்ளை அடித்தலுக்குச், சமம்.   நாடொறும் நாடி, முறைசெய்யா மன்னவன்,       நாடொறும் நாடு கெடும்.   நாள்தோறும்…