அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா?  அரசியலமைப்பின்படி, இந்தியா சமயச்சார்பற்ற நாடு. ஆனால், நடைமுறையில் ஆரியச்சார்பு நாடாக ஆள்வோர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதை மறைப்பதற்காக மறுபுறம் அனைத்துச் சமயச்சார்பு நாடாகவும் காட்டிக் கொள்கின்றனர். இறைப்பற்றும் சமய நம்பிக்கையும் தனிமனித உரிமை. அதனைக் குலைக்கவும் காக்கவும் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. ஆனால், சமயப்பொதுச் சட்டங்கள்தான் தேவையேயன்றி சமயத்திற்கு – மதத்திற்கு – ஒரு சட்டம் எனப் பல சட்டங்கள் தேவையில்லை! சீர்திருத்தம் என்பது எல்லாச் சமயத்திலும் நடைபெற…

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 : மு. முத்துவேலு

(திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2 தொடர்ச்சி) திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 குற்றங்களின் வரையறைகள்   இ.த.தொ. சட்டமும் திருக்குறளும் குற்றங்களை வரையறை செய்வதில் ஒத்திருக்கும் தன்மையுடையன. குற்றங்கள் பலவற்றுள்ளும் “திருடுதல்” என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் குற்றமாகும். இக்குற்றச் செயலை இ.த.தொ. சட்டம் வரையறுப்பது பின்வருமாறு அமைகின்றது. Theft – intending to dishonesty any movable property out of possession of any person without that person”s consent, moves that property…

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் -1/2 : மு. முத்துவேலு

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2  திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்துள்ளனர். திருக்குறளைச் ‘சட்டநூல்’ என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின் சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கிய திருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். திருக்குறள்…

நாகப்பட்டினத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு! தனிமனிதனுக்குப் பாதுகாப்பற்ற நிலை   நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையின் போதிய நடவடிக்கையின்மையால் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தனிமனிதனுக்குப் பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வேதாரண்யத்தில் பணிபுரிந்த பெண்நீதிபதி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இதனால் வாரத்தில் இரண்டு நாள் நாகப்பட்டினத்திற்கும், மற்ற நாட்களில் வேதாரண்யத்திலும் பணியாற்றினார். வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் வரும்போது   வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் சார்பில் வெடிகுண்டை பெண்நீதிபதி மீது ஒரு மருமக்கும்பல்…