தமிழ் மொழி மீட்புப் போராளி இராமலிங்க அடிகளார் ‘தமிழ் மொழி மீட்புப்போராளி’ இராமலிங்க அடிகளார் பிறந்த நாள் புரட்டாசி 21, தி.பி. 1854 / 5.10.1823  ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிக்காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் இதனைத் தொடங்கி வைத்தார். பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. இதனை எதிர்த்துத் தமிழை கருவியாக்கிப் போராடிய மாபெரும் புரட்சியாளர்தான் இராமலிங்க அடிகளார்.   அவர் எப்போதும் தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல்…