மனித உரிமை வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது இலங்கை!

மனித உரிமை வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது இலங்கை உலகப் பொதுப்பொறுத்தலவை(உலகப்பொது மன்னிப்புக் கழகம்) குற்றச் சாட்டு!   இலங்கையில் புதிய அரசு கடந்த ஆண்டு பதவியேற்றபொழுது கொடுத்திருந்த மனித உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகள் பலவற்றைக் காப்பாற்றத் தவறியிருப்பதாக உலகப் பொதுப்பொறுத்தலவை  குற்றம் சாட்டியுள்ளது.   உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த இந்த ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு இலங்கை மீது கடுமையான கருத்துகளை உலகப் பொதுப்பொறுத்தலவை முன்வைத்துள்ளது.   “இலங்கையில் கடந்த ஆண்டு சனவரியில் பொறுப்பேற்ற புதிய அரசு அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டு…

நல்லிணக்கத்தைத் திணிக்க முடியுமா? – புகழேந்தி தங்கராசு

இனப்படுகொலையாளிகளின் கேடயம் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுதம் பன்னாட்டு விசாரணை   வடமாகாண அவை முதல்வர் விக்னேசுவரன், வள்ளுவத்தை நேசிப்பவர். அவரது அறிக்கைகளில் பொருத்தமான திருக்குறள் இடம்பெறுவதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஈரடி தான் என்றாலும், சுற்றிவளைக்காமல் நேரடியாகக் செய்திக்கு வருவது குறளின் தனிச்சிறப்பு. அதை நேசிக்கிற விக்னேசுவரனுக்கும் இந்தத் திறன் கைவரப் பெற்றிருக்கிறது.  சொற்சிக்கனத்தை, வள்ளுவத்தின் வாயிலாகவே கற்றிருக்க வேண்டும் விக்னேசுவரன். சுருக்கமான சொற்களால் நறுக்குத் தெறித்தாற்போல் பளிச்செனப் பேசிவிடுகிற அவரது சொல்லாற்றல், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்கிற…

இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? – வைகோ கண்டனம்

இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? வராகா கப்பலை இலங்கைக்கு வழங்கிய இந்தியாவின் இரண்டகம் வைகோ கண்டனம்   இந்த ஆவணி 10 /ஆகத்து 27 ஆம் நாளன்று அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஃகா’ கப்பலை இலங்கைக்குத் தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சை இரண்டகம் (துரோகம்) ஆகும்.   ஈழத்தமிழர்களைக் காத்து விடுதலைத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான ஈகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை…

இணைவதை யாராலும் தடுக்க முடியாது – கலாநிதி இராம் சிவலிங்கம்

புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது — கலாநிதி இராம் சிவலிங்கம்     விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகைமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து  செயற்பட வருமாறு பல முறை அறைகூவினேன். நீதி வேண்டும் உலகம் எமக்காகப் போராடும்போது,  எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது குடிவழி எம்மை மதிக்குமா…

இரு நாட்டு மீனவர் பேச்சு – இனப்படுகொலைகளை மறைக்கும் திரை!

  இருவர் அல்லது இரு குழுவினர் அல்லது இரு பிரிவினர் அல்லது இரு  தரப்பாரிடையே சிக்கலோ மோதலோ எழும் பொழுது அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் சொல்லாடல் நிகழ்த்துவது முறையே.  இப்பொழுது சிங்கள மீனவர்களிடையேயும் தமிழக மீனவர்களிடையேயும்  ஏற்படுத்தப்படும் பேச்சு அவ்வாறு, எவ்வாறு அமையும்?   இரு நாட்டு மீனவர்களும் தத்தம் நாட்டு அறிவுரைகளையும் மீறித் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனரா? ஆதலின், அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் பேச்சு தேவைப்படுகிறதா?    ஆயிரத்தைத் தொடும் அளவு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது சிங்கள மீனவர்களாலா?   பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுப்பு இழப்புகளுக்கும் உடைமை…