அன்னை மண்ணே! – செந்தமிழினி பிரபாகரன்

நீயே என்  தாயே..!! ஈரைந்து திங்களே.. தாயெம்மைச் சுமந்தாள்… மூவைந்து ஆண்டுகள் என்னைச் சுமந்த அன்னை மண்ணே.. என்னைத் தொலைத்தாயோடி? வெயிலோடும் வரப்போடும் விளையாட மடி தந்த அழகிய தாயவளை நெக்குருகும் நினைவுகளில் நானின்று சுமக்கின்றேன்.. நானென்ன உன் தாயா? பொழுதெல்லாம் பொங்கும் உணர்வு ஊற்றுகளில் உருக்குலைந்து போகாமல்.. போற்றியிங்கு பாடுகின்றேன்.. சுழன்று வீசிய காலச் சுழலில் அகதியென உலக மூலைகளில் திக்கொன்றாய்.. தூக்கி வீசப்பட்ட தூசுகளாக நாம்… காலச் சதியில் சிதறிய முத்துகளாய்.. உறவுகள் நாம் பிரிந்தோம்.. எங்கெங்கோ தொலைந்தோம்.. முகமிழந்து போன…

காலத்தை வென்ற கொடி! – செந்தமிழினி பிரபாகரன்

காலத்தை வென்ற கொடி! ஏறுது பார் கொடி ஏறுதுபார் ஏறுது பார் கொடி ஏறுதுபார் – இங்கு ஏறுது பார் கொடி ஏறுதுபார் – தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி – எட்டு திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி காலத்தை வென்றுமே நின்ற கொடி புலி காட்டிய பாதையில் சென்ற கொடி ஏறுது பார் கொடி ஏறுதுபார் செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே வீறிடும் கொடியிது – தமிழ் மக்களைக் காத்த நம்மான மாவீரரை வாழ்த்திடும் கொடியிது புலி வீரத்தின் கொடியிது மாவீரரின்…

“தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு – செந்தமிழினி பிரபாகரன்

ஆனி 6, 2045 /சூன் 20, 2014 அன்று கனடா மண்ணில் வெளிவரும் வண்ண அட்டை இதழான “தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் குழுமிய ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்த இந்த நிகழ்வுக்கு இங்குள்ள தனியார் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பிறர் போலன்றி அழகு தமிழ்ப் பெயராக “தமிழ் மழை” எனப் பெயர் வைத்தமைக்கும் நிகழ்வை முற்று முழுதாக தமிழ் மணம் கமழும் வண்ணம் சிறப்புற வடிவமைத்தமைக்கும் இதழாசிரியர் சிவாவுக்கும் நிருவாக ஆசிரியர் மோகனுக்கும்…

வன்னி மண் தின்ற பேய்கள்.. – செந்தமிழினி பிரபாகரன்

ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம்.. எம் இனம் அழிந்த சோகம் கொடும் துயரம்.. நினைந்து நினைந்து நாளுமிங்கு நாம் அழுகின்றோம்.. சிதைந்து சிதைந்து எம் இனமும் இன்னும் அழிகிறதே.. வன்னி மண் தின்ற பேய்கள்.. முப்பொழுதும் ஆட்டமிட கண்ணீரில் எம் மண்ணோ நித்தமும் குளிக்கிறதே.. ஆற்றுவார் யாருமில்லை.. யார் காப்பார் தெரியவில்லை.. நாடாண்ட இனம் இன்று நடைப்பிணமாய் வீதியிலே.. -தரவு :முகநூல்