தமிழமல்லனின் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி

 இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி   புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் ஒன்பதாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் தசரதன் சூழ்ச்சிப் படலம், கான்புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.   புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். செயலாளர்…

தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம், சென்னை 600001

  ஒய்எம்சிஏ பட்டிமன்றம் (கி.இ.க.பட்டிமன்றம்) ஆடி 25, 2047 / ஆக.09,2016 மாலை 6.00 மறைமலை இலக்குவனார் பூங்குழலி பெருமாள் ஆய்விற்குரிய  பாவியங்கள் : 1.வெற்றிச்செல்வி 2.அண்ணல் பாடல்தொகுப்பு 3.தமிழமல்லன் பாக்கள் 4.பாமுகில் 5.மல்லன்பாக்கள் 6.பாச்சோலை 7.முழக்கம்

சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல்

    புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல் நிகழ்ச்சி   தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி கார்த்திகை 10, 2045 / 26.11.2014 மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர்…

சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி — ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014

தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014 ஆர்வலர்களுக்கு  அழைப்பு     தனித்தமிழ் இயக்கம் ஆண்டு தோறும் சிறுவர் பாடல் எழுதும் போட்டியை நடத்திப் பரிசு வழங்கி வருகிறது. அம்முயற்சியின் அடுத்த கட்டமாகச் சிறுவர் பாடல் எழுதும் ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்த விரும்புகிறோம். அனைவரும் நல்ல பாவலர்களே. பயிற்சி சிறந்தவர்களாக்கப் பயன்படும்.   இதில் சிறுவர் பாடல் என்பது எப்படி இருத்தல் வேண்டும்? தனித்தமிழ்ச் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது? சிறுவர்க்கான பாடுபொருள்கள் எவை?  சிறுவர்க்கு…

இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 ‘’ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்  புடைத்து’’ (398) இதில் ஒருமை எழுமை என்னுஞ் சொற்களுக்கு ‘ஒருபிறவி’,’ஏழுபிறவி’ என்று பொருளுரைத்தார். அவ்வாறு சொல்வது அறிவுக்கு ஒத்ததாக இல்லை என்று இலக்குவனார் சொன்னார். அவர் சொன்ன கருத்து ஒருமை-திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு எழுமை-மிகுதியும் “திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு கற்றகல்வி மிகுதியும் உறுதிதர வல்லது”…

இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2- முனைவர் க.தமிழமல்லன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 இலக்குவனார் தன்மானமும் தமிழ் மானமும் போற்றிய பேராசிரியர். தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிகளிலும் சிறந்த ஆற்றல்பெற்றவர். தாம் பெற்ற அரசுப் பொறுப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத துணிச்சல் மிக்கவர். தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இழைக்கப்படும் தீங்குகளை இயன்றவரை எதிர்த்த வேங்கை. தவறு செய்வோர் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் அஞ்சாமல் எதிர்க்கும் இயல்பு கொண்டு…