தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்!   தண்ணீரின் நரையைத்தான் பனியே என்பேன்! தாவரங்கள் தலைநரைப்பைப் பூக்க ளென்பேன்! கண்ணீரின் நரையைத்தான் நெருப்பே என்பேன்! காற்றுக்குள் நரைவிழுந்தால் புயலே என்பேன்! மண்நரையைத் தரிசென்பேன்! மலட்டு வான மனநரையைத் துறவென்பேன்! புழுக்கம் உண்ட விண்நரையை வெண்மேக மென்ற ழைப்பேன்! வெளிச்சத்தின் நரைதானே இருட்டே என்பேன்! சொல்நரையை இழிவென்பேன்! சோகம் தின்னும் சுகம்நரைத்தால் பிணியென்பேன்!பல்ந ரைபோல் வில்நரைத்தால் என்னென்பேன் ? கோழை யென்பேன்! விழுமழையின் நரையைத்தான் வாடை யென்பேன் அல்நரையை ஔியென்பேன் ! ஏழை வீட்டு அடுப்புக்குள் எழும்நரையை வறுமை…