பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி 1/6
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி 1/6 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள். தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை ஆய்ந்தாய்ந்து அகன்ற…
ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது! – சி.இலக்குவனார்
ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது! தம் கட்சிக்குள்ளேயும் தம்மை வீழ்த்தும் பகைவர் நண்பர்போல் நடித்துக்கொண்டிருப்பர். அவர்களையும் அறிந்து களைதல் வேண்டும். உண்மை நண்பர்களை அறிந்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்புவித்தல் வேண்டும். பதவியை அடைய நண்பர்போல் வருவர்; பதவியில்லையேல் பகைவராய் மாறுவர். ஆதலின், பதவி பெறினும் பெறாவிடினும் தம்மைச் சார்ந்து நிற்போரை அறிந்து அவர் உவப்பன செய்தல் வேண்டும். பகைவரையும் நண்பராக்கும் பண்பும் பெறுதல் வேண்டும். நண்பரைப் பகைவராக்கும் செயல்களில் நாட்டம் கொள்ளுதல் கூடாது. நாட்டை அடிமைப்படுத்த முயலும் பிற நாட்டாரை வெல்லும் வகையோ,…
பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும்-சி.இலக்குவனார்
பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும் சிற்றினம்-சிறிய இனம். ஒழுக்கத்தாலும் அறிவாலும் குறைந்திருப்போரை இனமாகக் கொள்ளுதல் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ளோர்க்கு நன்மை பயவாது. பதவியுயரச் செல்வமும் செல்வாக்கும் உயரும். செல்வம் உயர உயர வீணரும், வெற்றுரைகாரரும், சூதாடுவோரும் வலியவந்து சேர்வர். அவர்களை அகற்றாது நட்பாகக் கொள்ளின் ஆளும் தலைவர் அல்லற்பட்டு அழிய வேண்டியதுதான். பொறுப்புகளும் கடமைகளும் மிகமிக, ஒவ்வொன்றையும் நேரில் ஆய்ந்து நிறைவேற்றுதல் இயலாது. சுற்றியிருப்போர் சொல்லும் கூற்றை நம்புதல் வேண்டியவரும். அவர் சொல்லும் கூற்று உண்மை வயப்பட்டதாயின், யார்க்கும்…
அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் – சி.இலக்குவனார்
அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் அற்றேம் என்று அல்லற் படுபவோ? பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர் பெற்றேம்-என்றுஅரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ? துன்பப்பட்டார். அரசியல் பதவிகளைப் பெற்றுப் பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப்…
நன்றல்லதை அன்றே மறத்தல் நன்று! – புலவர் தி.வே.விசயலட்சுமி
நன்றல்லதை அன்றே மறத்தல் நன்று “ தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” (குறள்-129) தீயினாற் சுடப்பட்டு உண்டான புண் வடுவாக இருப்பினும் மனத்தில் ஆறிவிடும். நாவினாற் சுட்ட வடு மனத்தி லென்றும் ஆறாது என்பது இக்குறட்பாவின் கருத்து. கழிந்த காலமும், விடுத்த அம்பும், சொன்ன சொல்லும் திரும்பிப் பெற முடியாது என்பதும் உண்மையே ‘யாகாவாரயினும் நாகாக்க’ என்பது குறள் நீதி. ஒருவன் நண்பன்தான். தன்னை மறந்து கடுஞ்சொற்கள் பேசி விடுகிறான். சில மணித்துளிகளில் நிலைமைக்கு வந்து மன்னிப்புக்…
திருக்குறள் அறுசொல் உரை 106. இரவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 105. நல்குரவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 106. இரவு உழைப்புத் திறன்இல்லார், பொதுநல உதவியாளர் கேட்டுப் பெறலாம். இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின், அவர்பழி தம்பழி அன்று. தகுதியாரிடம் உதவி கேட்க; மறைத்தால், மறைத்தார்க்கே, பழி. இன்பம் ஒருவற்(கு) இரத்தல், இரந்தவை துன்பம் உறாஅ வரின். துன்பம் இல்லாமல் வருமானால், கேட்டுப் பெறுதலும் இன்பம்தான். கரப்(பு)இலா நெஞ்சின் கடன்அறிவார்…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16.20 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக் கல்லார் அடையார் களிப்பு. அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும் பண்பும் குறளால் பெறு. 23. வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர். உள்ளுவர் நல்வினை ஓர்ந்து. 24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர். துன்பம் தவிர்த்துவாழ் வார். 25. வையத்து வாழ்வாங்கு வாழ்ந்திடக் கற்றிடுவோம் தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து. தி.வே.விசயலட்சுமி பேசி –…
திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு – ந.சி.கந்தையா
திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த சாணக்கியர் (கௌடிலியர்) அருத்த சாத்திரம், காம சாத்திரம், தரும சாத்திரம், மோட்ச சாத்திரம், முதலிய பல நூல்களை வடமொழியில் செய்துள்ளார் என்றும் அவர் தமிழ்நாட்டினர் என்றும் அறிகின்றோம். சாணக்கியர் தமிழ்நாட்டில் அறியப்பட்டதும் வடநாட்டில் அறியப்படாததுமாகிய பொருள்களைப் பற்றிய நூல்களை இயற்றினமையால் அந்நூல்கள் வடநாட்டில் மிகவும் புகழ்பெற்று விளங்க ஏதுவாயின. சாணக்கியர் செய்துள்ள நூல்களுக்கு ஆதாரம் தமிழிலேயே இருந்திருத்தல் வேண்டுமென்பது வெளிப்படை. தமிழகத்தில் நூல்வழக்கிலோ செவிவழக்கிலோ உள்ள பொருள்களை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றிய சாணக்கியர்,…
திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 103. குடி செயல் வகை குடும்பத்தை, குடியை உயர்த்துவாரது செயற்பாட்டு ஆளுமைத் திறன்கள். ”கருமம் செய”ஒருவன், ”கைதூவேன்” என்னும் பெருமையின், பீ(டு)உடைய(து) இல். ”குடும்பக் கடமைசெயக் கைஓயேன்” என்பதே பெரிய பெருமை. ஆள்வினையும், ஆன்ற அறிவும், எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. நீள்முயற்சி, நிறைஅறிவு சார்ந்த தொடர்செயல் குடியை வாழ்விக்கும். “குடிசெய்வல்” என்னும்…
திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 102. நாண் உடைமை இழிசெயல் வழிவரும் அழியாப் பழிக்கு வெட்கி,அது ஒழித்தல். கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. பழிச்செயலுக்கு வெட்குவதே, வெட்கம்; மகளிர்தம் வெட்கம், வேறு.. ஊண்,உடை, எச்சம், உயிர்க்(கு)எல்லாம் வே(று)அல்ல; நாண்உடைமை மாந்தர் சிறப்பு. உணவு,உடை, பிறஎல்லாம் பொது; நாணம் மக்களுக்குச் சிறப்பு. ஊனைக் குறித்த…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15: தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 குன்றாப் புகழும், குறையா வளமும் என்றும் குறளால் வரும். இசைபட வாழ்ந்திட இன்குறள் ஆய்வோரைத் திசையெலாம் வாழ்த்தும் தெரிந்து. பொருள்நலம் பெற்றுப் பொலிந்திடும் இன்குறள் இருளற ஓதுவோம் இனிது. முக்கனிபோல் பாநயத்தை மகிழ்ந்து சுவைத்திடின் எக்காலும் வாழ்வோம் இனிது. முப்பாலே தித்திக்கும், முக்கனியாய்ச் சொல்லினிக்கும் எப்போதும் ஏத்துவம் ஏற்று. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி -98415 93517.
வள்ளுவனார் அறத்துப்பால் – கு. நா. கவின்முருகு
வள்ளுவனார் அறத்துப்பால் 1. கற்றாரோ வள்ளுவனார் அறத்துப் பாலை கற்றிலாரும் அறத்தாள்வார் பெயரும் பெற்று சுற்றிடுவார் நிலமதிலே ஈகை இல்லா துப்பில்லா மானிடரும் மாடே ஒப்பர் பெற்றிடுவோம் நற்பெயரும் அவனின் பாவால் பேறுலகைக் காத்திடுமாம் அறமே செய்து சொற்றெடராய் அணிசெய்யும் அழகாய் நன்று தொடர்வதுவும் குறளோதிப் பணிந்து செய்ய. 2. கொன்றார்கு உய்வில்லை செய்த நன்றி கோமகற்கும் அதுவேயாம் மாற்று இல்லை சென்றார்க்கும் சிறப்பேயாம் கற்ற கல்வி தீமையிலாச் சொல்பகரின் செவியில் இன்பம் வென்றாரும் பகைமையுமே வலிமை கண்டே மேன்மக்கட் பேறுபெரும் அறமே…
