இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37   மேலும் தமிழக மக்கள் எழுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றார்களே! புதிய சிந்தனை பெற்று வாழ்வது எங்ஙனம்? என இன்றைய குடியரசு நாடு பெற்றிருக்கும் அவலத்தை கண்டித்தும் நையாண்டி செய்தும் கூறுகிறார் கவிஞர். ‘கட்டையை நிறுத்தினும் கழுதையைக் காட்டினும்  அதற்கே வாக்கை அளித்தல் வேண்டும்  என்றே கூறி நன்றுதம் கட்சிப்  பேரெண் பெற்றிடப் பெரிதும் முயன்றனர்’  (துரத்தப்பட்டேன்: அ-ள் 42-45) தொண்டுள்ளம் கொண்டவருக்கு வாக்குப் போட வேண்டும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12:   தொடர்ச்சி)   13   இந்நிலையறிந்த ஆசிரியர் பெருங்குழுவும் இலக்குவனாரை அகற்றும் கொடுஞ் செயலைத் தடுக்கக்கூடிற்று. ஆங்கில மொழியில் ஓங்கிய சிறப்புப் பெற்ற வரும் நல்லுள்ளம் கொண்டவருமான சீதரமேனேன், ‘தன் கடமையைத் தவறாது செய்யும் இப்பேராசிரியர் (இலக்குவனார்) அகற்றப்படுவது குறித்து யாம் அஞ்சுகிறோம். நாளை நமக்கும் இந்நிலை ஏற்படாது இருக்குமா? ஆகவே இவரை அகற்றும் எண்ணத்தை நீக்கி, மனத்தில் அமைதியை நிலைத்திடச் செய்க’11 என்று மொழிந்தனர்.   ‘இலக்குவனாரைக் கல்லூரியிலிருந்து அகற்றும் செய்தியை அறிந்து மாணவர்கள்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி) 11   தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை.   பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09:   தொடர்ச்சி) இயல் – 4 இலக்குவனார் கவிதைகள் – பகுப்பாய்வு   இலக்குவனார், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களையும் பாடியுள்ளார். ‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென    நாலியற் றென்ப பாவகை விரியே’         (தொல்-செய்) என்று பாவகை நான்கென்பர் தொல்காப்பியர். இவை தவிர விருத்தம், கண்ணி, கீர்த்தனை முதலிய பா இனங்களையும் இலக்குவனார் பாடியுள்ளார். கவிஞர் பாடியுள்ள கவிதைகளைக் கீழ்வருமாறு பகுக்கலாம். நெடுங் கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் கையறுநிலைக் கவிதைகள் அங்கதக்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி)     இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை.  தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)         பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் படைப்பு அவரின் ‘துரத்தப்பட்டேன் என்னும்’ உள்ளக் குமுறலாகும். நம் நாடு சிறந்த மக்களாட்சி நாடாக விவரிக்கப்பட்டு வந்தாலும் உள்ளபடியே பல உரிமைகள் ஏட்டளவோடு நின்று நடைமுறையில் மறுக்கப்படுவனவாகவே உள்ளன. இதற்கொரு சான்றே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், தம் கல்லூரிப் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், சாதிக் கண்ணோட்டத்தால் வேலைவாய்ப்பை இழந்தது ஆகும். விருதுநகர்ச் செந்திற்குமார இந்து நாடார் கல்லூரியில் பேராசிரியர் அவர்கள்,…