தமிழியக்க முன்னோடி சி.இலக்குவனார் – பா.சு. இரமணன்

  ‘செந்தமிழ் மாமணி’. ‘இலக்கணச் செம்மல்’. ‘முத்தமிழ்க் காவலர்’. ‘செம்மொழி ஆசான்’ ‘தமிழர் தளபதி’ என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். “தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும். தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை. தமிழுக்காகத் துன்பத்தில் வளர்ந்து துன்பத்தையே தாங்கித் துன்பத்திலேயே கண்ணயர்ந்தவர்” என்கிறார் தமிழறிஞர் முனைவர் வ.சுப. மாணிக்கனார்.   கல்வியாளர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியம், முனைவர் வேங்கடசாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய இரா. நல்லகண்ணு போன்றோர்…

“தென்றல்” சிறுகதைப் போட்டி

தென்றல் சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்காணுமாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு: $300 இரண்டாம் பரிசு: $200 மூன்றாம் பரிசு: $100 நகைச்சுவை, குமுகாயம், அலுவலகம், அறிவியல் என்று எதைப்பற்றியும் சிறுகதைகள் எழுதலாம். சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கலாம். நல்ல தமிழில் விறுவிறுப்பாக எழுதப்பட வேண்டும். நட்பு, மனிதநேயம், கருணை, உழைப்பு, ஈகம்(தியாகம்), கொல்லாமை போன்ற உயர்பண்புகளைச் சித்திரிப்பவையாக இருத்தல் நல்லது. ஒருவர் 3 கதைகளுக்கு மிகாமல் அனுப்பலாம். உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்கள் பங்குகொள்ள…